Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
உங்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்குள் அளவிட முடியாத மனவலிமை இருக்குனு அர்த்தமாம்...!
வாழ்க்கையில் புறக்கணிப்பு என்பது அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் ஒரு மோசமான உணர்வாகும். நிராகரிப்பு அல்லது தோல்வி ஒருவரின் மனஉறுதியை குலைக்கும் மற்றும் தோல்வியை நோக்கி அழைத்து செல்லும் விஷயமாகும். ஆனால் நேர்மறையான மற்றும் மனவலிமை கொண்டவர்கள், எப்போதும் நிராகரிப்பை தங்கள் முன்னேற்றத்திற்கான தூண்டுகோலாக எடுத்துக்கொள்கிறார்கள், நிராகரிப்பு எப்போதும் தங்களுடைய மனவலிமையைக் குறைக்க அவர்கள் விடமாட்டார்கள்.
அனைத்து நிராகரிப்புகளையும் அதில் கிடைக்கும் பாடங்களுக்காக பாஸிட்டிவாக பார்க்கும் மனநிலை அவர்களிடம் இருக்கும். எந்த சூழ்நிலையில் இருந்தாலும் மன அழுத்தத்தை தலைக்கு ஏற்றிக்கொள்ளாத நபராக நீங்களும் இருக்க விரும்பினால், நீங்கள் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். மனதளவில் வலிமையான நபராக இருங்கள் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் உணர்ச்சிகளை ஒப்புக்கொள்ளுங்கள்
எந்தவொரு உணர்ச்சிப் பிரச்சினையையும் கையாள்வதற்கான முதல் படி, குறிப்பாக நிராகரிப்பை கையாளுவதற்கு, நீங்கள் உண்மையிலேயே என்ன உணர்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்வது. பலர் தங்கள் உணர்ச்சிகளை மறைத்துக்கொள்கிறார்கள், அவர்கள் உண்மையில் எப்படி உணர்கிறார்கள் என்பதை மறைக்கிறார்கள், மேலும் அந்த புறக்கணிப்பு தங்களை காயப்படுத்தியதாக தங்கள் சொந்த மனதை ஏற்றுக்கொள்ள அனுமதிக்க மாட்டார்கள்.
உங்களை சங்கடப்படுத்தியது அல்லது ஏமாற்றமளித்தது அல்லது உங்களை ஊக்கப்படுத்தியது எதுவாக இருந்தாலும் அதனை ஒப்புக்கொள்வது, நிராகரிப்பால் ஏற்படும் வலுவான உணர்ச்சிகளை எதிர்த்துப் போராடுவதற்கான முதல் படியாகும்.
நிராகரிப்பின் அனைத்து பக்கங்களையும் ஆராயுங்கள்
நீங்கள் நிராகரிக்கப்படும்போது அதை எதிர்மறையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மனதளவில் வலிமையானவர்கள்அதில் உள்ள நேர்மறை பக்கத்தைப் பார்க்கிறார்கள், நிராகரிப்பு அவர்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறார்கள் என்பதற்கான சான்று என்பதை அவர்கள் அறிவார்கள். இன்னும் சில நிராகரிப்புகளுக்கு அவர்கள் ஏற்கனவே மனதளவில் தயாராக இருக்கிறார்கள், அவர்கள் அதை பார்த்து பயந்து ஓட மாட்டார்கள்.
இரக்கம்
பொதுவாக நிராகரிப்புக்கு ஆளானவர்கள் தங்களை முட்டாளாக பார்ப்பார்கள், ஆனால் மனவலிமை மிக்கவர்கள் தங்களை இரக்கத்துடன் அணுகுவார்கள். தங்களைப் பற்றி தாங்களே எதிர்மறையாக சிந்திக்கும் தவறை அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள் மற்றும் சுய-ஊக்குவித்தலை அதிகம் நம்புகிறார்கள். உங்களை நீங்களே துன்புறுத்திக கொள்வது ஒருபோதும் நல்ல யோசனையல்ல.
நிராகரிப்பு அவர்களின் தகுதியை வரையறுக்க அனுமதிக்க மாட்டார்கள்
மனவலிமை உள்ளவர்கள் நிராகரிக்கப்படுவோம் என்ற எண்ணம் அவர்களை வீழ்த்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் தங்களை திறமையற்றவர்கள் என்று ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களை அன்பற்றவர்கள் என்று அழைக்கவோ அல்லது முடிவு செய்யவோ அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் அதை தங்கள் முன்னேற்றத்திற்கான படியாக எடுத்துக்கொள்கிறார்கள் மற்றும் ஒரு சம்பவமோ அல்லது மற்றவர்களின் கருத்துக்களோ அவர்களை பாதிக்க அனுமதிக்க மாட்டார்கள்.
நிராகரிப்பிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள்
நிராகரிப்பு உட்பட நம் வாழ்வில் நடக்கும் எதிலிருந்தும் கற்றுக் கொள்ள எப்போதும் ஒரு பாடம் இருக்கிறது. நிராகரிப்பால் என்ன லாபம் என்று மன வலிமையுள்ளவர்கள் சிந்திக்கிறார்கள். அவர்கள் நிராகரிப்பிற்கான மூல காரணத்தை கண்டறிந்து சுய முன்னேற்றத்திற்காக முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு நிராகரிப்பிலும் அவர்கள் மேலும் வலிமையானவர்களாக மாறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
