Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
இந்த அறிகுறிகள் உங்களிடம் இருந்தா... உங்க வாழ்க்கையில் ஏதோ பெரிய விஷயம் நடக்கப்போகுதாம் தெரியுமா?
நீங்கள் ஒரு குழப்பத்தில் இருப்பதாக அல்லது உங்கள் வாழ்க்கையில் முன்னேறவில்லை என உணர்ந்தால், அந்த இடத்தில் மாற்றம் தேவை என்பதற்கான அறிகுறியாக இவை இருக்கலாம்.
"மாற்றம் ஒன்றே நிலையானது", 'மாற்றம் ஒன்றே மாறாதது" என்ற பழமொழிக்கு ஏற்ப நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். மாற்றம் என்றால், நம் வாழ்க்கையில் எதோ ஒன்று நடக்கப்போகிறது என்பதைக் குறிக்கிறது.
உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயம் மாறுகிறது என்பதை நீங்கள் உணரும் நேரங்கள் இருந்திருக்கலாம். 'என்னதான் என் வாழ்க்கையில் நடக்கிறது' என்று நீங்களே உங்களுக்குள் கேள்வி கேட்கலாம்.

இந்த எண்ணம் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்து, உங்களை நல்ல பாதையில் கொண்டு வர அல்லது வேறு பாதையில் செல்ல, உங்களுக்குக் கொடுக்கும் சிறிய எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கலாம்.
உங்களின் இறுதி முடிவுகளைப் பொறுத்து இந்த மாற்றங்கள் நல்லதாக அல்லது கெட்டதாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கை இப்போது மாற்றம் ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
நிச்சயமற்ற உணர்வு
எந்தவொரு விஷயத்திலும் நீங்கள் உறுதியற்ற அல்லது நிச்சயமற்ற உணர்வை கொண்டிருந்தால், அது மாற்றம் வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இவை அமைதியின்மை மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கவலையின் உணர்வாக உங்களுக்குள் வெளிப்படும். ஆதலால், உங்கள் வாழ்க்கையில் அல்லது சில விஷயங்களில் உங்களுக்கு உறுதியான நம்பிக்கையான உணர்வு இல்லையென்றால், அது மாறப்போகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மன அழுத்தம் அதிகரிப்பது
பொதுவாக இன்றைய நாளில் எல்லாருடைய வாழ்க்கையிலும் மன அழுத்தம் இருக்கிறது. ஆனால், உங்களுக்கு மன அழுத்தம் திடீரென அதிகரிக்கும் போது, அது உங்கள் வாழ்க்கையில் ஏதாவது மாற்றத்தை கொண்டுவரவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வேலை அல்லது தனிப்பட்ட மாற்றங்கள் காரணமாகக்கூட அதிக மன அழுத்தம் ஏற்படலாம். இந்த மன அழுத்தம் நன்மை அல்லது பாதிப்பு என இரண்டு வகையான மாற்றங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தலாம்.
முன்னுரிமைகளில் மாற்றம்
நாம் வளர வளர நமது முன்னுரிமைகளில் எப்போதும் மாற்றம் ஏற்படும். இது உங்கள் வாழ்க்கை மாறப்போகிறது என்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம். சில இலட்சிய இலக்குகளில் நீங்கள் அதிக கவனம் செலுத்துகிறீர்கள் அல்லது உங்களுக்கு முக்கியமான விஷயங்களில் நீங்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதை இந்த முன்னுரிமை மாற்றம் குறிக்கிறது.
உறவுகளில் மாற்றங்கள்
மற்றவர்களுடனான உங்கள் உறவுகள் மாறினால், உங்கள் வாழ்க்கையும் மாறப்போகிறது என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம். நீங்கள் ஒரு புதிய உறவுகளைத் தொடங்கலாம் அல்லது பழைய உறவை மிகவும் நெருக்கமாக மாற்றலாம் அல்லது ஒரு உறவு உங்களை விட்டு முற்றிலும் விலகலாம் என்பதை இது குறிக்கலாம்.
தேங்கி நிற்கும் உணர்வு
நீங்கள் ஒரு குழப்பத்தில் இருப்பதாக அல்லது உங்கள் வாழ்க்கையில் முன்னேறவில்லை என உணர்ந்தால், அந்த இடத்தில் மாற்றம் தேவை என்பதற்கான அறிகுறியாக இவை இருக்கலாம். வாழ்க்கையில் எப்போதும் ஓரிடத்தில் நாம் தேங்கி நிற்கக்கூடாது. அந்த இடத்திலிருந்து நாம் விரைவாக வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்தை நோக்கி முன்னேறி செல்ல வேண்டும். எனவே, நீங்கள் புதிதாக ஒன்றை முயற்சிக்க வேண்டும் அல்லது உங்கள் தற்போதைய சூழ்நிலையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
ஒரு எதிர்பார்ப்பு உணர்வு
சில நேரங்களில், உற்சாகம் அல்லது எதிர்பார்ப்பு உணர்வுகளின் மூலம் மாற்றம் வரலாம். நீங்கள் இப்படி உணர்கிறீர்கள் என்று தெரிந்தால், அது நேர்மறையான மாற்றமாக இருக்கும். நாம் எதிர்பார்க்கும் விஷயங்கள் நம் நலன் அல்லது நம்மை சார்ந்தவர்களின் நலனாகத்தான் இருக்கும்போது, அவை நம் வாழ்க்கையில் நல்ல மாற்றமாக இருக்கும்.
உள்ளுணர்வு
நாம் ஒவ்வொருவரும் உள்ளுணர்வு கூறுவதை எப்போதும் நம்ப வேண்டும். ஏனென்றால், நம் உள்ளுணர்வு ஒருபோதும் பொய் சொல்லாது. வாழ்க்கையில் ஏதாவது நடக்கப்போகிறது அல்லது மாறப்போகிறது என்ற உறுதியான உள்ளுணர்வு உங்களுக்கு இருந்தால், அதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் உள்ளுணர்வுகள் உங்கள் வாழ்க்கையில் வரவிருக்கும் மாற்றங்களின் நம்பகமான விஷயங்களாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications



