Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்தியாவில் அசைவ உணவுகளை பிரசாதமாக கொடுக்கும் வினோதமான கோவில்கள் என்னென்ன தெரியுமா?
கோவில் பிரசாதம் என்று வரும்போது அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது புளியோதரை, லட்டு, சர்க்கரைப் பொங்கல் போன்றவைதான். ஆனால் இந்தியாவின் ஆன்மீக வரலாறு என்பது ஒரு எல்லைக்குள் அடைக்க முடியாத அளவுக்கு பன்முகத்தன்மை கொண்டது. கோவில் பிரசாதம் என்பது என்ன பிரசாதமாக கொடுக்கப்படுகிறது என்பதைப் பற்றியது அல்ல, மாறாக அதன் பின்னால் உள்ள அன்பு மற்றும் சரணடைதலைப் பற்றியது.
இந்தியாவின் சில கோவில்களில், அசைவ உணவுகள் பிரசாதமாக மட்டும் வழங்கப்படுவதில்லை, மாறாக அது வழிபாட்டின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. பிரியாணி முதல் வறுத்த மீன் வரை, இந்த புனித இடங்களில் அசைவ உணவுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன். அவை எந்தெந்த கோவில்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

விமலா கோவில், பூரி
உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயிலுக்குள் சிறிய ஆனால் சக்திவாய்ந்த விமலா கோவில் உள்ளது. இங்கு விமலா தேவிக்கு மீன் மற்றும் ஆட்டு இறைச்சி பிரசாதமாக வழங்கப்படுகிறது, குறிப்பாக துர்கா பூஜையின் போது. சடங்கு முடிந்ததும், பிமலா பருசா எனப்படும் உணவு பிரசாதமாக வழங்கப்படும். தெய்வீகம் என்பது உணவு பற்றியது அல்ல, அது நோக்கத்தைப் பற்றியது என்பதை பக்தர்களுக்கு நினைவூட்டும் பாரம்பரியமாக இது உள்ளது.
முனியாண்டி சுவாமி கோவில், தமிழ்நாடு
தமிழ்நாட்டின் உணவு நகரமான மதுரைக்கு அருகிலுள்ள இந்த சிறிய கோவிலில் நடக்கும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான ஆடுகளும், கோழிகளும் பலியிடப்படுகின்றன. இந்த திருவிழாவில் இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்படுவதில்லை, மாறாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிக்கனும், மட்டனும் இலை விருந்தாக படைக்கப்படுகிறது. அதிகாலையில் பரிமாறப்படும் இந்த விருந்தை சாப்பிட பல மாவட்டங்களிலிருந்து மக்கள் வருகிறார்கள்.
பரசினிகடவு கோயில், கேரளா
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், உள்ள தெய்வமான முத்தப்பனின் பக்தர்கள் கடவுளுக்கு ப்ரெஷான மீன் மற்றும் கள்ளை வைத்து வழிபடுகிறார்கள். இந்த படையலை கடவுள் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது. இங்கு மீன் பிரசாதம் சாப்பிடுவது ஒரு சடங்கு மட்டுமல்ல, மீனவ சமூகங்களின் அன்றாட வாழ்க்கையில் வேரூன்றிய தெய்வீகத்துடன் உணவைப் பகிர்ந்து கொள்வதாக நம்பப்படுகிறது.
தர்குலா தேவி கோயில், உத்தரபிரதேசம்
சைத்ர நவராத்திரியின் போது கோரக்பூரில் உள்ள, தர்குலா தேவி கோயில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடும் இடமாக மாறுகிறது. தெய்வத்திற்கு ஆடுகள் பலியிடப்படுகின்றன, மேலும் அவற்றின் இறைச்சி கோயில் மைதானத்திலேயே பெரிய களிமண் பானைகளில் சமைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பிரசாதமாக தயாராகும் கூட்டு உணவு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. உள்ளூர்வாசிகளுக்கு, இது புனிதமானது மட்டுமல்ல கொண்டாட்டமானதும் கூட.
தாராபித் கோயில், மேற்கு வங்கம்
சக்திவாய்ந்த தாந்த்ரீக மரபுகளுக்குப் பெயர் பெற்ற தாராபித், இறைச்சியை பிரசாதமாக வழங்குவதற்கு புகழ்பெற்றது. இங்கு, ஆடு பலியிடுதல் மற்றும் ஷோல் மாச் போன்ற சுவையான மீன் உணவுகள் கவனமாக பெரிய அளவில் சமைக்கப்பட்டு, வேகவைத்த அரிசி மற்றும் மணம் மிக்க குழம்புளுடன் தாராளமாக பரிமாறப்படுகின்றன. தாராபித்தில் பிரசாதம் பெறுவது ஒரு சாதாரண உணவைப் போல உணரப்படுவதில்லை, மேலும் ஒரு பழங்கால, புனிதமான ரகசியத்திற்குள் நுழைவது போன்றது. இங்கு வழங்கப்படும் பிரசாதம் சக்திவாய்ந்த மற்றும் ஆழமான மாய சக்தியைக் கொண்டுள்ளது.
தந்தானியா கலிபாரி, கொல்கத்தா
கொல்கத்தாவில், பல நூற்றாண்டுகள் பழமையான காளி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித கோயில் கோவிலான தந்தானியா கலிபாரி மிகவும் பிரபலமானது. இங்கு விலங்குகளை பலியிடும் சடங்குகள் இப்போதும் நடைமுறையில் உள்ளது, விலங்குகளை பலியிட்ட பின்னர் அதன் இறைச்சி கவனமாக சமைக்கப்பட்டு, புனித பிரசாதமாக வழங்கப்படுகிறது. நவீன மால்கள் மற்றும் உயரும் கான்கிரீட் மேம்பாலங்கள் நிறைந்த நகரில் கூட, கிட்டத்தட்ட மறைந்துபோன சகாப்தத்தின் இந்த காலத்தால் அழியாத சடங்குகள் அமைதியாகவும், அசைக்க முடியாததாகவும் கடைபிடிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
