Latest Updates
-
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
ஆட்டு தலைமுடி முதல் பலதார மணம் வரை - ஹிம்பா பழங்குடியினரைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்!
Himba Tribe: பழங்குடியினர் என்போர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிலப்பரப்பில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கு என ஒரு தனி பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், மொழி மற்றும் நிலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதோடு, அந்த நிலத்தைச் சார்ந்த மரங்கள், செடிகள், கொடிகள், விலங்குகளுடன் வாழ்க்கையை எளிமையாகவும், திருப்தியாகவும் வாழ்ந்து வருவார்கள்.
உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இன்னும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்காவில் நிறைய பழங்குடியினர் உள்ளனர். அதில் ஒரு வகையினர் தான் ஹிம்பா பழங்குடியின மக்கள்.

நமீபியாவின் ஹிம்பா பழங்குடியினர் ஆப்ரிக்காவில் உள்ள பழங்குடியினருள் மிகவும் பிரபலமானவர்கள. இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையவை. இந்த பழங்குடியினரை நாம் பல திரைப்படங்களில் பார்த்திருக்கலாம்.
ஆனால் இவர்களின் சில பழக்கவழக்கங்கள் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும். அதில் முக்கியமாக இவர்கள் குளிக்கமாட்டார்களாம், அதேப் போல் இவர்கள் துணியை துவைக்கும் விதமும் வித்தியாசமாக இருக்கும். இப்போது இந்த ஹிம்பா பழங்குடியினரைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைக் காண்போம்.
நமீபியாவில் மட்டுமே இருப்பதில்லை
முதலில் ஹிம்பா பழங்குடியின மக்கள் அங்கோலாவில் இருந்து வந்தவர்கள் மற்றும் இவர்கள் 1500-களின் முற்பகுதியில் இருந்தே குனேனே பகுதியில் குடியேறினர். அப்போது ஹிம்பா பழங்குடியினர் ஹெரேரோ பழங்குடியினரின் ஒரு பகுதியாக இருந்தனர். நாட்டில் பசுக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட பின், இந்த ஹெரேரோ பழங்குடியினர் வெவ்வேறு பழங்குடியினராக பிரிந்துவிட்டனர்.
ஆட்டு முடி மற்றும் சிவப்பு நிற சருமம்
ஹிம்பா பழங்குடியின பெண்கள் தங்களின் அழகான மற்றும் வித்தியாசமான தலைமுடிக்கு பிரபலமானவரகள். இவர்கள் தங்கள் உண்மையான முடியுடன் ஆட்டு முறையை பயன்படுத்துகிறார்கள். மேலும் இவர்கள் தங்களின் சிவப்பு நிற சருமத்திற்கு ஒரு சிவப்பு நிற மண்ணை வெண்ணெயுடன் கலந்து பூசிக் கொள்கிறார்கள். முக்கியமாக இவர்கள் நீரைப் பயன்படுத்தி குளிக்கமாட்டார்கள். மாறாக இவர்கள் தங்கள் சருமத்தை சுத்தம் செய்ய வெண்ணெயுடன் இந்த சிவப்பு நிற மண்ணை கலந்து உடலில் பூசுவார்கள். இதுதான் இவர்களுக்கு தனித்துவமான ஒரு தோற்றத்தைத் தருகிறது.
இந்த சிவப்பு நிற மண்ணானது சூரிய ஒளியில் இருந்து சருமத்திற்கு நல்ல பாதுகாப்பைத் தருகிறது. மேலும் இது கொசுக்கள் மற்றும் பிற பூச்சிக்கடியில் இருந்தும பாதுகாப்பளிக்கிறது. முக்கியமாக இது சூடான காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
பலதார மணம்
ஹிம்பா பழங்குடியின மக்கள் பலதார மணம் கொண்டவர்கள். இந்த இனத்தைச் சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல மனைவிகளைக் கொண்டிருப்பார்கள். ஹிம்பா பழங்குடியின பெண்கள் பலர் பருவமடைந்ததுமே திருமண செய்து கொள்கிறார்கள்.
கால்நடைகள் தான் செல்வம்
ஹிம்பா பழங்குடியினரின் செல்வம் என்றால் அது கால்நடைகள் தான். இவர்களிடம் எத்தனை கால்நடைகள் உள்ளதோ, அதன் அடிப்படையிலேயே அவர்களின் செல்வம் மதிப்பிடப்பிடகிறது. அதுவும் கால்நடைகள் என்றால், மாடுகள் மட்டுமல்ல செம்மறி ஆடுகள், கோழிகளையும் இவர்கள் வளர்த்து வருகிறார்கள். இவர்கள் விலங்குகளை அதிகம் சாப்பிடமாட்டார்கள்.
உணவு முறை
ஹிம்பா பழங்குடியினர் ஆடு, கோழி போன்ற விலங்குகளை வளர்ப்பதால், இவர்கள் இறைச்சிகளை அதிகம் உட்கொள்ளமாட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் மக்காச்சோளம் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படும் கஞ்சியைத் தான் உட்கொள்வார்கள். இறைச்சிகள் என்றால் திருமணம் போன்ற ஏதாவது விசேஷ நாட்களில் தான் உட்கொள்வார்களாம். அதுவும் ஆடு மட்டும் தான் உட்கொள்வார்களாம்.
வித்தியாசமான ஆபரணங்கள்
ஹிம்பா பழங்குடியின மக்களின் நிலையை அவர்களின் தலைமுடி, கழுத்தில் அணிந்துள்ள சில ஆபரணங்களைக் கொண்டு கூறலாம். ஹிம்பா பழங்குடியினர் நெருப்புக்கோழி முட்டை மணிகள், சங்குகள் மற்றும் இரும்பு சுருள்களை கை, கழுத்து, கணுக்கால்களில் வெவ்வேறு விஷயங்களுக்காக அணிவார்கள். உதாரணமாக, பெண்கள் கழுத்தில் சங்குடன் மணிகளை அணிந்திருந்தால், திருமணமாகிவிட்டது என்று அர்த்தமாம்.
Image Courtesy: Lore Store



Click it and Unblock the Notifications











