Latest Updates
-
வார ராசிபலன் (24 May 2026-30 May 2026) - மே மாதத்தின் கடைசி வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..! -
புதன் தனது சொந்த ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பலாக்கொட்டை இருந்தா இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இந்தியாவின் தேசிய மரம் எது? அது தேசிய மரமானதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
June Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூன் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ட்விஷா சர்மா வழக்கில் அதிர்ச்சி! திருமண வாழ்க்கையில் இந்த 5 அறிகுறிகள் தெரிந்தால் உஷாராக இருங்கள்! -
சப்பாத்திக்கு இந்த ஸ்டைல்-ல முட்டை கிரேவி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் அனைத்து கடவுள்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
போலீஸ் அதிகாரி என நம்பி ஏமாந்த பெண்கள்! டேட்டிங் ஆப் மூலம் நடந்த அதிர்ச்சி AI மோசடி! -
பொலிவான சருமம் வேண்டுமா? அப்ப அன்னாசிப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க..
Valentines Day Wishes: காதலர் தினத்தன்று உங்க லவ்வர் கிட்ட இத சொல்லுங்க.. அசந்து போவாங்க...
Happy Valentines Day 2025 Wishes in Tamil: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர்களால் காதலர் தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலன் அல்லது காதலிக்கு அன்பை வெளிக்காட்டும் வகையில் பலவிதமான பரிசுகளை வழங்கி ஆச்சரியப்படுத்தி மகிழ்விப்பார்கள். இது தவிர இந்நாளில் ஒருதலையாக காதலித்து வருபவர்கள் தங்கள் காதலை தனக்கு பிடித்தவரிடம் தெரிவிக்கவும் செய்வார்கள்.
பொதுவாக ஒரு நல்ல நாளில் வாழ்த்துக்களை தெரிவித்து தான் கொண்டாட்டத்தைத் தொடங்குவோம். இந்த காதலர் தினத்தன்று உங்கள் காதலன் அல்லது காதலி அசந்து போகும் வகையில் ஒரு அழகான மற்றும் மனதை வருடும் கவிதையுடன் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

உங்களுக்காக அப்படிப்பட்ட சில இனிமையான காதலர் தின வாழ்த்துக்கள் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து உங்கள் துணைக்கு அனுப்பி, அவர்களை சிறப்பாக உணர வையுங்கள்.
கவிதை: 1
மறந்துப் போன
மகிழ்ச்சியை
மறுபடியும் மலர
வைத்தாய் நீ..
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அன்பே!
கவிதை: 2
உன்னை நினைத்து
என்னை மறப்பதுதான்
காதலென்றால் ஆயுள்
முழுதும் வாழ்வேன்
எனை மறந்து
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் காதலே!
கவிதை: 3
மனதோடு நீ
மழையோடு நான்
நனைகின்றது
நம் காதல்
காதலர் தின வாழ்த்துக்கள்!
கவிதை: 4
என் கவலைகளுக்கு நீ
மருந்தாகின்றாய் உன்
கவலைகளை மறைத்து
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் இதயமே!
கவிதை: 5
நீ தூரமாக இருந்தாலும்
உனது குரலை கேட்காத
நொடிகள் இல்லை கேட்கிறேன்
என் இதய துடிப்பில்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் இதயமே!
கவிதை: 6
பிடித்த தனிமையும்
கொடுமையானது
உன்னுள்
தொலைந்ததிலிருந்து
இனிய காதலர் தின
வாழ்த்துகள்
என் காதலே!
கவிதை: 7
எல்லோருக்கும் அழகை
வர்ணிக்க தானே
கவிதை தேவைப்படும்
எனக்கு மட்டும் கவிதையை
வர்ணிக்க நீ தேவைப்படுகிறாய்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அன்பே!
கவிதை: 8
என்னில் வைக்கும் அன்பை
மிஞ்ச எவரும் இல்லை
உன்னை விட அதனாலேயே
உன்னை கெஞ்சி நிற்கிறேன்
என்னை காதலி என்று
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் காதலா!
Image Courtesy: Freepik



Click it and Unblock the Notifications







