Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
Happy Puthandu 2025: தமிழ் புத்தாண்டு அன்று உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத சொல்லுங்க... ஹேப்பி ஆவாங்க..
Happy Puthandu 2025: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை மாதம் பிறக்கிறது. இந்த சித்திரை 1 ஆம் தேதி தான் தமிழ் வருடப்பிறப்பாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழ் முதல் மாதமான சித்திரை மாதம் தமிழ் மக்களால் தமிழ் புத்தாண்டாக மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விசுவாவசு என்னும் வருடம் பிறக்கிறது.
தமிழ் புத்தாண்டின் தொடக்கத்தில் சூரியன் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை துவங்கும் காலம் என்பதால் இந்த தினம் தமிழர்களால் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் எல்லோரும் அதிகாலையில் எழுந்ததும் சித்திரை கனி அல்லது கனி காணுதலுடன் தினத்தை தொடங்குவர்.

அதைத் தொடர்ந்து கோவில்களுக்கு சென்றும், வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடும் நடத்துவர். அதோடு வடை பாயாசத்துடன் சமைத்து, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து சாப்பிட்டு மகிழ்ச்சியாக இந்நாளை கொண்டாடுவார்கள்.
முக்கியமாக ஒருவருக்கொருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்வார்கள். இந்த விசுவாவசு தமிழ் புத்தாண்டில் உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்பி மகிழுங்கள்.
1. புதுமைகள் தொடர்ந்து, மாற்றங்கள் மலர்ந்து, இசை முழங்க எல்லோரும் வரவேற்போம் தமிழ் புத்தாண்டை... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
2. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - இந்த ஆண்டு நீங்கள் கனவு காணும், விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
3. இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி செழித்தோங்கட்டும்.. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
4. இந்த இனிய தமிழ் புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும்.. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
5. இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்வில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிரம்பட்டும்... இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications





