Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
Hanuman Jayanti 2024: அனுமன் ஜெயந்தியான இன்று இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல அனுமனின் கோபத்துக்கு ஆளாவீங்க...
Hanuman Jayanti 2024: அஞ்சனை மைந்தன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் அனுமன். அனுமன் ராமனின் தீவிர பக்தர். இந்த அனுமன் மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் மூல நட்சத்திரத்தில் பிறந்தார். அனுமனன் பிறந்த நாள் தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி டிசம்பர் 30 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் அனுமன் கோவில்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு, அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
அனுமன் பிறந்த நாளில் அனுமனின் ஆசியைப் பெற, பக்தர்கள் அனுமனுக்கு பிடித்த பலகாரங்களைப் படைத்து வழிபடுவார்கள். அதுவும் சனி பகவானின் தாக்கத்தைக் குறைய அனுமனை வழிபட்டால் குறையும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அனுமனும், சனி பகவானும் நண்பர்கள். அனுமனை வழிபடுபவர்களுக்கு சனி பகவானால் துன்பம் நேராது.

ஆனால் அனுமன் பிறந்த நாளான அனுமன் ஜெயந்தி நாளில் ஒருசில தவறுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அனுமனின் கோபத்திற்கு ஆளாகி, வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது அனுமன் ஜெயந்தி நாளில் ஒருவர் எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
* அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனின் பரிபூர்ண ஆசியைப் பெற விரும்பினால், இறைச்சி, மது போன்றவற்றை உட்கொள்ளக்கூடாது. மேலும் இந்நாளில் எவரையும் மோசமாகவோ, மரியாதையின்றியோ நடத்தக்கூடாது. அவ்வாறு செய்தால், அனுமனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
* குரங்குகள் அனுமனாக கருதப்படுகிறது. எனவே அனுமனின் ஆசி வேண்டுமானால், அனுமன் ஜெயந்தி நாளில் குரங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. ஒருவேளை உங்கள் வீட்டிற்குள் குரங்குகள் வந்தால், அவற்றை அடிக்கவோ, விரட்டவோ வேண்டாம்.
* அனுமனுக்கு சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறங்கள் மிகவும் பிடிக்கும். எனவே அனுமன் ஜெயந்தி நாளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஆடைகளை அணிய முயற்சி செய்யுங்கள். முக்கியமாக இந்நாளில் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து விடாதீர்கள்.
* அனுமன் ஒரு பிரம்மச்சாரி. அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனை வழிபடும் போது, பெண்கள் அனுமனின் சிலைகளை தொட்டு வணங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் அனுமனின் பாதங்களை பெண்கள் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* அனுமனின் பிறந்த நாளான அனுமன் ஜெயந்தி நாளில் ஒவ்வொருவரும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அனுமனை வழிபடும் போது, அவருக்கு பஞ்சாமிர்தத்தை படைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* சேதமடைந்த அனுமன் சிலையை வழிபடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அவரது போட்டோவைக் கொண்டு வழிபடுபவரானால், அந்த போட்டோவிலும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
* முக்கியமாக அனுமனை வழிபடும் போது மனம் எவ்வித கலக்கம், தவறான எண்ணம் அல்லது கோபமும் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். கோபத்தில், தவறான எண்ணத்தில் செய்யும் எந்த வழிபாட்டிலும் மனம் நிலையாக இருக்காது. இப்படி அமைதியாக இல்லாத மனதுடன் அனுமனை வணங்கினால், அந்த வழிபாட்டின் முழு பலன் கிடைக்காது. எனவே அனுமனை வழிபடும் போது, அனைத்து கஷ்டத்தையும் அவர் மீது இறக்கிவிட்டு, மனதை அமைதிப்படுத்தி, அவரை முழுமையாக நம்பி வழிபடுங்கள்.
அனுமன் ஜெயந்தி நாளில் அல்லது அனுமனை வழிபடும் போது மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் ஒருவர் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது அனுமனின் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications