Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
குரு-சுக்ரன் மேஷ ராசியில் இணைந்து உருவாக்கும் யோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் அடிக்கப்போகுதாம்!
இந்து நாட்காட்டியின் படி, வியாழன் மற்றும் சுக்கிரனின் இணைப்பு 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 24 அன்று உருவாகிறது. வியாழன் மற்றும் சுக்கிரனின் இந்த இணைப்பு மேஷ ராசியில் நடக்கப்போகிறது.
அறிவையும், ஞானத்தையும் தரும் வியாழனும், செல்வம் தரும் சுக்கிரனும் இணைந்தால், தொழில், வியாபாரத்தில் பெரும் வெற்றி பெறலாம். வியாழன் - சுக்கிரன் சேர்க்கை இந்த நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். அந்த ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு வியாழன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை சுப பலன்களை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. வாழ்க்கையில் உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிப்பதால், உங்கள் தொழிலில் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
இந்த நேரத்தில் உங்கள் நிதி வலுவாக இருக்கும் மற்றும் பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த காலம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறப்பாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட திறமைகள் அதிகரிக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள், உங்களின் அனைத்து பணிகளும் பாராட்டப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.
ரிஷபம்
வியாழன் மற்றும் சுக்கிரன் இணைவதால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. பணவிஷயங்களில் நீங்கள் எதிர்பாராத லாபம் அடைவீர்கள் மற்றும் இந்த காலகட்டத்தில் பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல செய்தி தேடி வரலாம். நீண்ட நாட்களாக மாற்று வேலைக்கான முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய மற்றும் சிறந்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு வியாழன் மற்றும் சுக்கிரன் இணைவதால் பல நன்மைகள் கிடைக்கப் போகிறது. வாழ்வில் வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கப் போகிறது. அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும்.
குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான உறவுகள் மிகவும் சுமூகமாக இருக்கும். உங்கள் வருமானத்தில் எதிர்பாராத அதிகரிப்பு இருக்கும் மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் மீதான உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்
வியாழன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை துலாம் ராசியினரின் காதல் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களை கொண்டுவரும் என்று கணிக்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் இன்பம் மற்றும் ஆடம்பரத்திற்கான வழிகள் திறக்கப்படும்.
நீண்ட நாட்களாக புதிய வேலை தேடிக் கொண்டிருந்த உங்களுக்கு, இந்த நேரத்தில் வெற்றி உங்கள் கைகளுக்கு கிட்டலாம். சிங்கிளாக இருப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உங்கள் மனநிலையை வலுப்படுத்தும் மற்றும் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு அதிபதியான வியாழன் சுக்கிரனுடன் சேரும் போது மீன ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். நீங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத இடஙக்ளில் இருந்து வருமானங்கள் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க நினைத்தால், அதற்கான சிறந்த நேரம் இது.
உங்கள் நீண்ட கால திட்டங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல லாபம் காண்பீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவீர்கள். உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவழிக்க வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

