Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
குரு-ராகுவால் உருவான சண்டாள தோஷம்: ஜூன் 21 முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Guru Rahu Made Chandal Dosh: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை நிகழும்.
அப்படி கிரகங்களின் சேர்க்கை நிகழும் போது, அதனால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்கள் நற்பனை அளித்தால், அது யோகங்கள் என்றும், அதுவே கெடுபலனை அளித்தால், அது தோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் 2023 ஏப்ரல் 21 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். அந்த ராசியில் நுழையும் போது, ஏற்கனவே அந்த ராசியில் ராகு பயணித்து வந்ததால், குரு மற்றும் ராகுவின் சேர்க்கையால் குரு சண்டாள யோகம் அல்லது சண்டாள தோஷம் உருவானது. இந்த தோஷத்தின் போது குரு வலிமையிழந்தும், ராகு வலிமையாகவும் இருப்பார்.
இந்நிலையில் குரு மற்றும் ராகுவின் சண்டாள தோஷம் நீங்கவுள்ளது. ஏனெனில் குரு பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு செல்கிறார். இதனால் ராகு அஸ்வினி நட்சத்திரத்தில் இருப்பதால், இந்த சண்டாள தோஷம் நீங்குகிறது. இந்த தோஷம் நீங்குவதால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு சண்டாள தோஷம் நீங்குவதால், ஜூன் 21 முதல் நல்ல காலமாக இருக்கும். மேலும் மிதுன ராசியின் லக்ன வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. அதே வேளையில் பத்ரா ராஜயோகமும் உருவாகிறது. இதனால் வியாபாரம் செய்பவர்களுக்கு இனி நல்ல லாபம் கிடைக்கும்.
மேக்கப், எலக்ட்ரானிக் போன்றவற்றில் வேலை செய்பவர்களுக்கு இனிமேல் அற்புதமாக இருக்கும். பழைய முதலீடுகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
கடகம்
சண்டாள யோகம் நீங்குவதால், கடக ராசிக்காரர்களுக்கு ஜூன் 21 முதல் அற்புதமாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதில் கவனம் அதிகரிக்கும். பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத பண பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக முடித்து, உயர் அதிகாரிகளின் மனதில் நல்ல இடத்தைப் பிடிப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூன் 21 முதல் நிதி ரீதியான நன்மைகள் கிடைக்கவுள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. குடும்ப சூழல் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும்.
தடைபட்ட பல வேலைகள் இனிமேல் வெற்றிகரமாக செய்து முடிக்கப்படும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும். புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால், அதற்கான நல்ல லாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் முழு ஆதரவும் இனிமேல் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications