Latest Updates
-
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 5 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
10 கிராம் 1 கோடிக்கு விற்கப்படும் உலகின் விலையுயர்ந்த மரம் எது தெரியுமா? இதுல அப்படி என்னதான் இருக்கு? -
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா?
குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
Guru Peyarchi 2024: ஜோதிடத்தில் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். தற்போது குரு பகவான் செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கங்களின் படி, 2024 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி மே 01 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்கு செல்லவுள்ளார். இதனால் குரு பெயர்ச்சியின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். இப்போது 2024 குரு பெயர்ச்சியால் அடுத்த ஒரு ஆண்டு காலம் பலவிதமான சவால்கள் மற்றும் பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு குரு செல்லவுள்ளார். இதனால் இந்த குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறாமல் போகலாம். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும், ஆரோக்கிய பிரச்சனைகளால் நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் அதே வேளையில், அதிகப்படியான மதப்பற்று பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். திருமணமானவர்களின் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பண விஷயத்திற்காக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். இல்லாவிட்டால் உறவுகள் மோசமாக பாதிக்கப்படும். மொத்தத்தில் அடுத்த ஒரு ஆண்டு காலம் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு குரு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்காது. சாதகமற்ற வீட்டில் குரு இருப்பதால், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். உடன்பிறந்தவர்களுடனான உறவுகளில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். இது மிகுந்த மனச்சோர்வை உண்டாக்கும். கூடுதலாக, பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு அல்லது தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகரிக்கும் கடன் காரணமாக மன உளைச்சலால் அவதிப்படலாம். எனவே முடிந்தவரை கடன் வாங்குவதைத் தவிர்ப்பது சிறந்தது. நிதி ரீதியாக குரு பலவீனமான நிலையில் இருப்பதால், நிறைய பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு குரு செல்லவுள்ளார். இதனால் அடுத்த ஒரு ஆண்டு சவாலாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஏற்கனவே வழக்குகள் நடந்து வந்தால், அதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சொத்து தொடர்பான விஷயங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. கூடுதலாக தாயாரின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைக்கு உடனே தீர்வு காணுங்கள்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த பெயர்ச்சியின் போது குரு பகவான் 3 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சோம்பேறித்தனம் அதிகரிக்கும். இதனால் உங்கள் வேலைகளை அடிக்கடி தள்ளிப் போடுவீர்கள். இப்படி உடனே முடிக்க வேண்டிய வேலையை தள்ளிப் போட்டால், அது உங்கள் வேலைக்கே உலை வைத்துவிடும். எனவே எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலையை மேம்படுத்த நினைத்தால், கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவை. இந்த ஆண்டில் சிறப்பான பலனைப் பெற விரும்பினால், சோம்பேறித்தனத்தை விட வேலைக்கு முன்னுரிமை அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications