Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது?
12 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு செல்வம் பெருகும்.. வெற்றிகள் குவியும்..
Guru, Ketu Made Navpancham Yog 2024: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் தான் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் மே 01 ஆம் தேதி தான் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்தார்.
சுக்கிரனின் ரிஷப ராசிக்குள் குரு பகவான் நுழைந்திருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களையும், சிலர் மோசமான பலன்களையும் பெறலாம். அதே வேளையில் நிழல் கிரகமான கேது கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.

இதனால் குரு மற்றும் கேதுவின் நிலையால் சிம்ம ராசியில் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த அற்புதமான யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் செல்வம் பெருகுவதோடு, வெற்றிகளும் குவியவுள்ளது. இப்போது நவபஞ்ச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகமானது அற்புதமான பலன்களை வழங்கும். முக்கியமாக நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல செய்தியைப் பெறலாம். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். கடின உழைப்பிற்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தால் பல முன்னேற்றங்களைக் காண்பீர்கள். கூட்டுத் தொழில் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகத்தால் எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். கடின உழைப்பால் ஒவ்வொரு சவாலையும் எளிதில் சமாளிப்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக இருக்கும். புதிய வீடு, சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்கும் ஆசை இருந்தால், இந்த யோகத்தால் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகமானது வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். சட்ட விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள். மேலும் பல புதிய பொறுப்புக்களும் வழங்கப்படும். இந்த யோக காலத்தில் ஏராளமான நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களின் ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
