Latest Updates
-
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும்
கருட புராணத்தின் படி, அடுத்த பிறவியில் நீங்க என்னவா பிறப்பீங்க-ன்னு தெரிஞ்சுக்கணுமா?
Garuda Purana: கருட புராணம் என்பது இந்து மதத்தில் உள்ள 18 புராணங்களில் ஒன்றாகும். இந்த புராணமானது கருடனின் கேள்விகளுக்கு விஷ்ணு பகவான் பதில் அளிக்குமாறு இருக்கும். இந்த புராணத்தில் மனித வாழ்க்கையில் உள்ள பல விஷயங்களுக்கான விடை குறிப்பிடப்பட்டுள்ளது.
கருட புராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தர்மம், சடங்குகள், ஒருவரது செயல்களுக்கான பலன்கள், சொர்க்கம், நரகம், மறுபிறவி குறித்த பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் நிச்சயம் மரணம் என்ற ஒன்றை நிச்சயம் சந்திக்க நேரிடும். இதை மாற்ற முடியாது. ஒருவர் இறந்த பின் அவரது உடல் அழியுமே தவிர, ஆன்மா அழிவதில்லை.
அந்த ஆன்மாவானது புதிய உடலை ஏற்றுக் கொள்ளும். இப்படி ஒருவர் இறந்த பின், அடுத்த ஜென்மத்தை எடுப்பது எல்லாம் முதல் ஜென்மத்தில் செய்த செயல்களை அடிப்படையாக கொண்டது என கருட புராணம் கூறுகிறது.
கருட புராணத்தில் மொத்தம் 84 லட்ச இனங்கள் குறித்து கூறப்பட்டுள்ளன. அதில் சிறந்த இனம் தான் மனித இனம். இந்த மனித பிறவில் ஒருவரது செயல் எந்த மாதிரி உள்ளதோ, அதைப் பொறுத்து தான் அவரது மறுபிறப்பும் உள்ளது. இப்போது கருட புராணத்தின் படி, அடுத்த பிறவியை நிர்ணயிக்கும் செயல்கள் குறித்து காண்போம்.
1. நாய் பிறவி
எவர் ஒருவர் வேதங்கள், புராணங்கள், தர்மம் போன்றவற்றை அவமதித்து, கடவுளை நம்பாமல், வழிபடாமல் நாத்திகராக சுற்றுகிறாரோ, அவர் மனித பிறவிக்கு பின் நாயாக பிறப்பார் என கருட புராணம் கூறுகிறது.
2. கழுகு பிறவி
உறவுகளிலேயே நட்பு மிகவும் ஒரு அழகான உறவாக கருதப்படுகிறது. ஆனால் சிலர் நண்பராக பழகி, அந்த நண்பருக்கே கேடு விளைவிப்பர். இப்படி ஒருவரை நம்பி ஏமாற்றுபவர்கள் மோசமான பிறவிகளாவர். கருட புராணத்தின் படி, நண்பர்களை ஏமாற்றுபவர்கள், அடுத்தப் பிறவியில் கழுகாக பிறவி எடுப்பர்.
3. ஆந்தை பிறவி
தந்திரமாக செயல்படுபவர்களை புத்திசாலிகள் என்று பலரும் கூறலாம். ஆனால் அத்தகையவர்கள் தங்களின் புத்திசாலித்தனத்தால் மற்றவர்களை முட்டாளாக்கி, தங்கள் வேலையை செய்து முடிக்கிறார்கள். இம்மாதிரியான செயல் மற்றவர்களை மனதளவில் பாதிக்கின்றன. எனவே இப்படிப்பட்டவர்கள் மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் ஆந்தைகளாக பிறவி எடுப்பர்.
4. ஆடு பிறவி
ஒருவரது தொண்டையில் சரஸ்வதி தேவி வசிக்கிறார். மற்றவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டுபவர்கள், பேச்சில் இனிமை இல்லாதவர்கள், பிறரைப் பற்றி தவறாக பேசுபவர்கள் மோசமான பிறவிகளாக கருட புராணம் கூறுகிறது. மேலும் இத்தகையவர்கள் மறு ஜென்மத்தில் ஆட்டு பிறவியைத் தான் எடுப்பர்.
5. குருடர்
கருட புராணத்தின் படி, மற்றவர்களை ஏமாற்றுவதைத் தவிர, ஒருவரைப் பற்றி பொய் கூறுபவர்கள் அல்லது பொய் சாட்சியாக இருப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் குருடர்களாக பிறவி எடுப்பதாக கூறப்படுகிறது.
6. பிறவியே இருக்காது
கருட புராணத்தின் படி, தங்கள் பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் தீங்கு விளைப்பவர்கள் அடுத்த பிறவியை எடுப்பார்கள். ஆனால் அந்த பிறவியில் உலகை காண்பதற்கு முன்றே இறந்துவிடுவார்கள். அதாவது, கருவிலேயே இறந்துவிடுவார்கள்.
7. பெண் பிறவி
இந்த பிறவியில் ஆணாக பிறந்தவர்கள், பெண்களைப் போன்று நடந்து கொண்டாலோ அல்லது பெண்களின் பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தால், அத்தகையவர்கள் மறுபிறவியில் ஒரு பெண்ணாக பிறப்பதாக கருட புராணம் கூறுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications