Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
கருட புராணத்தின் படி, இந்த பழக்கங்கள் இருந்தா இன்றே கைவிடுங்க.. இல்லன்னா வறுமை வாட்டி எடுக்கும்..
Garuda Purana In Tamil: இந்து மதத்தில் உள்ள மகா புராணங்களில் ஒன்று தான் கருட புராணம். இந்த கருட புராணத்தில் மனித வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளதை ஒருவர் பின்பற்றி வந்தால், அவர் மகிழ்ச்சியான, எளிமையான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வார்.
நம் ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் பலவிதமான பிரச்சனைகள் இருக்கும். இதற்கு தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மேற்கொள்ளும் செயல்கள் அல்லது ஒருசில பழக்கங்கள் தான் முக்கிய காரணம். இவையே வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு காரணமாகவுள்ளது.

அதில் முக்கியமாக ஒருவர் சந்திக்கும் பண பிரச்சனைக்கும், சம்பாதித்த பணம் கையில் நிற்காமல் போவதற்கும், எப்போதும் வீட்டில் பணம் நிலைத்திருக்காமல் இருப்பதற்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பழக்கங்கள்/செயல்கள் தான் காரணம். இவை உங்களிடம் இருந்தால், உடனே அவற்றை கைவிடுங்கள்.
பண ஈகோ
நிறைய பணம் வைத்திருப்பவர்கள் அல்லது நிறைய பணம் சம்பாதிப்பவர்கள் எப்போதும் தன்னிடம் உள்ள பணத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளக்கூடாது. ஏனெனில் இப்படி பணத்தில் பெருமிதம் கொள்பவர்களை லட்சுமி தேவிக்கு பிடிக்காது. அவர்களுடன் லட்சுமி தேவி குடியிருக்கமாட்டாள். எனவே உங்கள் கையில் பணம் நிலைத்திருக்க வேண்டுமானால் பணத்தால் பெருமை கொள்ளாதீர்கள்.
தேவையில்லாத செலவுகள்
சிலர் தன்னிடம் உள்ள பணத்தை சேமித்து வைக்காமல், ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள். இப்படி தேவையில்லாத விஷயங்களுக்கு அதிக பணத்தை செலவு செய்வது, பணத்தை அவமதிப்பதற்கு சமம். இப்படிப்பட்டவர்களிடம் லட்சுமி தேவி மிகுந்த கோபம் கொள்வார். ஆகவே உங்கள் வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். இல்லாவிட்டால் மிகுந்த பண பிரச்சனையை சந்திக்கக்கூடும்.
தானம் செய்வது
தானம் செய்வது நல்லது தான். ஆனால் அந்த தானத்தை தன்னிடம் மிகுதியாக இருக்கும் போது செய்ய வேண்டும். கருட புராணத்தின் படி, நன்கு சம்பாதிக்கும் ஒருவர் தனது வருமானத்தில் சிறிதை தானம் செய்ய வேண்டும். ஆனால் ஏற்கனவே பணப் பிரச்சனையால் வாடிக் கொண்டிருக்கும் போது, தானம் செய்ய கருட புராணம் கூறவில்லை. முடிந்தால் மட்டுமே செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் கிடைத்து, கையில் பணம் அதிகம் சேரும்.
வழிபாட்டை தவிர்ப்பது
வீட்டில் கடவுள் வழிபாட்டை ஒருபோதும் தவிர்க்கக்கூடாது. ஏனெனில் வீட்டில் கடவுளை வழிபடும் போது, வீட்டினுள் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும். கடவுளை எப்போதும் மனதில் நினைப்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிரம்பியிரக்கச் செய்யும். நேர்மறை ஆற்றல் நிரம்பியுள்ள இடத்தில் லட்சுமி தேவி குடியிருப்பாள். லட்சுமி தேவி குடியிருக்கும் இடத்தில் பணம் எப்போதும் நிரம்பி வழியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications