Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
கருட புராணத்தின் படி, இந்த 4 விஷயங்களை ஃபாலோ பண்றவங்ககிட்ட.. பணம் அதிகம் சேருமாம்..
Garuda Purana: இந்து மதத்தில் உள்ள 18 மகாபுராணங்களில் கருட புராணமும் ஒன்று. இந்த கருட புராணத்தில் பிறப்பு, இறப்பு குறித்து மட்டுமின்றி, வாழ்க்கையில் வெற்றி பெறவும், செல்வத்தைப் பெறவும் மனிதன் எந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளன.
இப்படி கருட புராணம் கூறுவது போன்று நடந்து கொண்டால் நல்ல மகிழ்ச்சியான, எளிமையான, செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழலாம் மற்றும் மரணத்திற்கு பின் சொர்க்கத்தை அடையலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

நீங்கள் வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையுடன் நல்ல செல்வ செழிப்போடு வாழ விரும்பினால், கருட புராணம் கூறும் விஷயங்களைப் பின்பற்றுங்கள். இப்போது செல்வ செழிப்பான வாழ்க்கைக்கு ஒருவர் அவசியம் பின்பற்ற வேண்டியவைகளாக கருட புராணம் கூறும் விஷயங்கள் என்னவென்பதைக் காண்போம்.
1. மதங்களை மதிக்க வேண்டும்
உலகில் பல்வேறு மதங்கள் உள்ளன. இந்த மதத்தை மதித்து நடப்பது நல்ல விஷயம். ஆனால் கருட புராணத்தின் படி, வாழ்க்கையில் வெற்றி அடையவும், செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழவும் விரும்பினால், அனைத்து மதத்தையும் மற்றும் அந்த மதத்தின் தெய்வங்களையும் மதிக்க வேண்டும். ஒருவேளை அவமரியாதை செய்தால், அவர்களின் வாழ்க்கை மோசமாக இருப்பதோடு, மரணத்திற்கு பின் நரகத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.
2. சுத்தமான ஆடைகளை அணியவும்
நல்ல சுத்தமான மற்றும் நல்ல மணம் நிறைந்த இடத்தில் தான் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் மற்றும் அந்த இடத்தில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியும் குடியிருப்பார். கருட புராணத்தின் படி, நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற நினைத்தால், செல்வந்தராக, அதிர்ஷ்டசாலியாக விரும்பினால், எப்போதும் சுத்தமான ஆடைகளை அணிந்து, நல்ல மணத்துடன் இருங்கள்.
3. துளசி செடி வளர்க்கவும்
மிகவும் புனிதமான துளசி விஷ்ணு பகவானுக்கு விருப்பமானது மட்டுமின்றி, துளசி லட்சுமி தேடியின் வடிவமாகக கருதப்படுகிறது. கருட புராணத்தில் மட்டுமின்றி பிற புராணங்களிலும் துளசி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்படிப்பட்ட துளசி செடியை எவர் ஒருவர் தங்கள் வீடுகளில் வைத்து தினமும் விளக்கேற்றி வழிபட்டு வருகிறாரோ, அவருக்கு பண பிரச்சனை எதுவும் வராது மற்றும் வீடு எப்போதும் செல்வ செழிப்போடு இருக்கும்.
4. ஏகாதசி விரதம் இருக்கவும்
ஏகாதசி விரதம் குறித்து நிறைய பேருக்கு தெரியும். இருப்பினும், அந்த விரதத்தை அனைவரும் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் கருட புராணத்தின் படி, இந்த ஏகாதசி விரதம் மிகவும் முக்கியமானதாகும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் விஷ்ணு பகவானின் ஆசியைப் பெற்று, வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, நல்ல செழிப்பான வாழ்க்கை வாழ்வர் என்பது நம்பிக்கை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications