Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா?
Ganesh Chaturthi 2025: விநாயகர் சிலை வாங்க சிறந்த நேரம் எது? சிலை வாங்கும் போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
Ganesh Chaturthi 2025: இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படக்கூடிய மிக முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று தான் விநாயகர் சதுர்த்தி. என்ன தான் ஒவ்வொரு மாதமும் விநாயகர் சதுர்த்தி வந்தாலும், ஆவணி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வளர்பிறையில் வரும் சதுர்த்தி திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் தான் விநாயகர் பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. முக்கியமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமானது 10 நாட்கள் வரை இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு மக்கள் களிமண் விநாயகர் சிலையை வாங்கி வந்து, வீட்டில் வைத்து, விநாயகரை அழகாக அலங்கரித்து, அவருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுவார்கள். சிலர் இந்த விநாயகர் சிலையை 1, 3, 5 போன்ற ஒற்றை தின கணக்கில் வைத்து விநாயகரை சிறப்பாக கவனித்து வழிபாடு செய்வார்கள்.

நீங்கள் விநாயகர் சதுர்த்திக்கு களிமண் விநாயகரை வீட்டிற்கு வாங்கி வந்து வழிபாடு செய்ய நினைத்தால், விநாயகரை வாங்கும் போது ஒருசில விஷயங்களை தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். கீழே விநாயகர் சிலையை வாங்கும் போது எந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், விநாயகர் சிலை வாங்க சிறந்த நேரம் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளன.
2025 விநாயகர் சதுர்த்தி எப்போது?
2025 ஆம் ஆண்டின் விநாயகர் சதுர்த்தி திதியானது 26 ஆகஸ்ட் 2025 செவ்வாய் கிழமை பிற்பகல் 2.22 மணிக்கு தொடங்கி, 27 ஆகஸ்ட் 2025 மாலை 3.52 மணி வரை தான் அமைந்துள்ளது. காலையில் சதுர்த்தி இருக்க வேண்டும் என்பதனால், 2025 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது ஆகஸ்ட் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சிலை வாங்க சிறந்த நேரம் என்ன?
விநாயகர் சிலை வாங்கும் நேரம்
26 ஆகஸ்ட் 2025 - மாலை 4.50 மணி முதல் 5.50 மணி வரை அல்லது மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை
27 ஆகஸ்ட் 2025 - காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை
விநாயகர் சிலை வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1. விநாயகர் தும்பிக்கை
விநாயகர் சிலையை வாங்கும் போது முதலில் கவனிக்க வேண்டியது விநாயகரின் தும்பிக்கை எந்த பக்கம் உள்ளது என்பதைத் தான். ஏனெனில் வாஸ்துப்படி, வீட்டில் விநாயகர் சிலையை வைப்பதாக இருந்தால், இடது பக்கம் தும்பிக்கை கொண்ட விநாயகரை வாங்குவது தான் சிறந்தது. இது மகிழ்ச்சியையும் வெற்றியையும் குறிக்கிறது. அதோடு இது வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி போன்றவற்றை கொண்டு வருவதாக கூறப்படுகிறது. வலது பக்கம் தும்பிக்கை கொண்ட விநாயகர் சிலைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த வகை விநாயகரை எப்போதும் மத மரபுகளின் படி முறையாக வணங்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் கஷ்டம் தான் அதிகரிக்கும். அதனால் தான் இப்படியான விநாயகர் சிலை கோவில்களில் உள்ளன.
2. மோதகம், எலியுடன் கூடிய விநாயகர்
விநாயகர் நிலையை வாங்கும் போது, விநாயகருடன் எலி மற்றும் அவருக்கு பிடித்த மோதகம் கையில் இருக்குமாறான சிலையை பார்த்து வாங்க வேண்டும். அப்படியான விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வருவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
3. விநாயகரின் தோரணை
விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்குவதாக இருந்தால், அவர் அமர்ந்த நிலையில் இருக்குமாறான சிலையை தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது. ஏனெனில் இந்த நிலை அமைதி, நிலைத்தன்மை, தியானத்தைக் குறிக்கிறது. நிற்கும்படியான விநாயகர் வணிக இடங்களுக்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதோடு விநாயகரின் முகம் அமைதியாகவும், மென்மையாகவும், இருக்க வேண்டும். கோபமான அல்லது சோகமான முகத்தைக் கொண்ட விநாயகர் சிலையை வாங்கினால், நேர்மறை ஆற்றலுக்கு பதிலாக, எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வரும்.
4. விநாயகர் சிலையின் அளவு
முக்கியமாக களிமண் அல்லது தூய உலோகத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளையே வாங்குவது சிறந்ததாக கூறுப்படுகிறது. அதுவும் விநாயகர் உற்சவத்திற்கு பின் சிலையை நீரில் மூழ்கடிக்க வேண்டும். எனவே களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கினால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல், எளிதில் நீரில் கரைக்கலாம். அதோடு வீட்டிற்காக விநாயகர் சிலையை வாங்குவதாக இருந்தால், மிகப்பெரிய சிலைகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். சிறிய அளவிலான விநாயகர் சிலைகளே வீட்டில் வைத்திருக்க வசதியாக இருக்கும்.
5. திசை
முக்கியமாக விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வந்த பின், அதை வடக்கு திசையை நோக்கியவாறு நிறுவ வேண்டும். ஏனெனில் இது லட்சுமி மற்றும் சிவனின் திசையாக கருதப்படுகிறது. இந்த திசையை நோக்கி விநாயகரின் முகம் இருந்தால், அது விநாயகரின் ஆசியோடு, லட்சுமி தேவி மற்றும் சிவனின் ஆசியை பெறவும் வழிவகுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











