Latest Updates
-
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...!
கரூர் முதல் கும்பமேளா வரை இந்தியாவில் நடந்த மோசமான நெரிசல் மரணங்களும் அதற்கான காரணங்களும்...!
சமீபத்தில் இந்தியாவையே உலுக்கிய ஒரு துயர சம்பவம் என்றால் அது கரூரில் நடந்த துயர சம்பவம்தான். நடிகர் விஜயை பார்க்க கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என 42 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த துயர சம்பவம் நடந்து கிட்டதட்ட 10 நாட்களுக்கு மேலாகியும் மக்கள் இன்னும் அந்த சம்பவத்தை விட்டு வெளியே வரவில்லை.
துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் நிகழ்வுகள் தமிழ்நாட்டு மக்களை பாடாய்படுத்தி வருகின்றன. இதேபோன்ற பல சம்பவங்கள் சமீப ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்தியாவில் நிகழ்ந்து வருகின்றன. இந்த சம்பவங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இந்த பதிவில் சமீப ஆண்டுகளில் இந்தியாவை உலுக்கிய நெரிசல் மரணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 29, 2025
மகா கும்பமேளா இந்தியாவில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் கூடுகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவில் 30 பேர் இறந்தனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர்.
ஜூலை 2, 2024
கரூர் துயர சம்பவத்திற்கு முன் சமீபத்தில் இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நெரிசல் மரணம் இதுதான். உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் போலே பாபா எனப்படும் நாராயண் சாகர் ஹரி ஏற்பாடு செய்த 'சத்சங்கம்' ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
மார்ச் 31, 2023
இந்தூர் நகரில் உள்ள ஒரு கோவிலில் ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற ஹவன் நிகழ்ச்சியின் போது, ஒரு பழங்கால பவுடி அல்லது கிணற்றின் மேல் கட்டப்பட்ட பலகை இடிந்து விழுந்ததில் குறைந்தது 36 பேர் இறந்தனர்.
ஜனவரி 1, 2022
ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற மாதா வைஷ்ணோ தேவி கோவிலில் கூடிய பக்தர்களின் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட நெரிசலில் 12 பேர் இறந்தனர் மற்றும் 12 பேர் தீவிர காயமடைந்தனர்.
செப்டம்பர் 29, 2017
மேற்கு ரயில்வேயின் எல்பின்ஸ்டோன் சாலை நிலையத்தையும் மும்பையில் உள்ள மத்திய ரயில்வேயின் பரேல் நிலையத்தையும் இணைக்கும் குறுகிய பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் இருபத்தி மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 36 பேர் படுகாயமடைந்தனர்.
ஜூலை 14, 2015
ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் புஷ்கரம் விழாவின் தொடக்க நாளில் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்த கோதாவரி நதிக்கரையில் உள்ள ஒரு பெரிய குளிக்கும் இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் 27 யாத்ரீகர்கள் இறந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
அக்டோபர் 3, 2014
பொதுவாக இந்தியா முழுவதும் தசரா கொண்டாட்டங்களின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் தசரா கொண்டாட்டங்கள் முடிந்த சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 26 பேர் காயமடைந்தனர்.
அக்டோபர் 13, 2013
மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் கோவில் அருகே நடைபெற்ற நவராத்திரி விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 115 பேர் இறந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பக்தர்கள் நடந்து சென்ற ஆற்றுப் பாலம் இடிந்து விழும் என்ற வதந்தியால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நவம்பர் 19, 2012
பாட்னாவில் கங்கை நதிக்கரையில் உள்ள அதாலத் படித்துறையில் நடைபெற்ற சத் பூஜையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தற்காலிக பாலம் இடிந்து விழுந்ததால் சுமார் 20 பேர் இறந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.
ஜனவரி 14, 2011
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புல்மேடுவில் வீடு திரும்பிய யாத்ரீகர்கள் மீது ஜீப் மோதியதில் ஏற்பட்ட நெரிசலில் சபரிமலைக்கு சென்ற 104 பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர் மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மார்ச் 4, 2010
உத்தரபிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கிருபாலு மகாராஜின் ராம் ஜானகி கோவிலில், இலவச ஆடைகள் மற்றும் உணவு சேகரிக்க மக்கள் கூடியிருந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சுமார் 63 பேர் இறந்தனர்.
செப்டம்பர் 30, 2008
ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள பிரபல சாமுண்டா தேவி கோவிலில் குண்டு வெடித்ததாக வதந்தி பரவியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 250 பக்தர்கள் இறந்தனனர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜனவரி 25, 2005
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள மந்தர்தேவி கோவிலில் நடைபெற்ற வருடாந்திர யாத்திரையின் போது 340க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காயமடைந்தனர். இந்தியாவில் நடந்த மிகவும் மோசமான நெரிசல் மரணங்களில் இது முக்கியமானதாகும்.



Click it and Unblock the Notifications












