Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் 4 ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது..
Four Rajyogas Formed After 100 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
அந்த வகையில் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு பின் 4 ராஜயோகங்கள் ஒரே வேளையில் உருவாகின்றன. அவை முறையே புதாதித்ய ராஜயோம், சச மகாபுருஷ ராஜயோகம், கேந்திர திரிகோண ராஜயோகம் மற்றும் சனியின் சமசப்தம ராஜயோகம் ஆகும்.

இந்த ராஜயோகங்கள் அனைத்துமே ஒருவருக்கு நல்ல செல்வத்தை வாரி வழங்குவதோடு, வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றத்தையும், விருப்பங்களை நிறைவேற்றவும் செய்யும். இந்த ராஜயோகங்களால் 3 ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
இந்த 4 ராஜயோகங்களால் கும்ப ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள். ஏனெனில் இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் மங்களகரமான வீடுகளில் இந்த ராஜயோகங்கள் அமைந்துள்ளன. இதனால் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வருவதோடு, முடிவுகளும் சாதகமாக இருக்கும்.
மேலும் திடீரென்று எதிர்பாராத இடத்தில் இருந்து பெரிய பணத் தொகையைப் பெறக்கூடும். பரம்பரை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் நல்ல லாபத்தையும் முன்னேற்றத்தையும் காண்பார்கள். வியாபாரிகள் இக்காலத்தில் லாபத்தைப் பெறுவதோடு, வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புக்களையும் பெறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் சிறப்பான வீடுகளில் இந்த 4 ராஜயோகங்களும் உருவாகியுள்ளன. இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும். நீண்ட நாட்களாக முயற்சித்து வந்த வேலை வெற்றிகரமாக முடிவடையும். இக்காலத்தில் தைரியம் இருமடங்கு அதிகரிக்கும். பேச்சும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். இதனால் நிதி நிலைமை வலுவாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த 4 ராஜயோகங்கள் அபரிமிதமான நன்மைகளை வழங்க போகிறது. புதாதித்ய ராஜயோம், சச மகாபுருஷ ராஜயோகம், கேந்திர திரிகோண ராஜயோகம், சமசப்தம யோகம் போன்றவை சுப வீடுகளில் உருவாகியிருப்பதால், நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இக்காலத்தில் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்களின் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications