Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் மே 14 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
உங்களுக்கு திரும்ப திரும்ப ஒரே கனவு வருதா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா? -
அன்னையர் தினம் 2026: அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா? இந்த UPI ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க! -
மாம்பழ லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அன்னையர் தினத்தில் மனைவி vs அம்மா? இந்த ஒரு சின்ன மாற்றம் போதும், குடும்பத்தில் அமைதி நிலவும்! -
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க.. -
ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
அன்னையர் தினத்தில் இந்த வாஸ்து செடிகளைப் பரிசளிங்க… அம்மாவின் ஆரோக்கியமும் செல்வமும் பல மடங்கு உயரும்! -
பொள்ளாச்சி பிச்சி போட்ட கோழி புட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் வீடு குளிர்ச்சியாக இருக்கணுமா? இந்த வாஸ்து செடிகளை உடனே மாற்றுங்க!
700 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Five Rajyoga Will Form After 700 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ராசியை மாற்றுவதோடு, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்களும் உருவாகும். மேலும் அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
சில நேரங்களில் ஒரே வேளையில் ஒன்றிற்கு மேற்பட்ட யோகங்கள் உருவாகும். அப்படியான யோகங்கள் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழலாம். அந்த வகையில் சுமார் 700 ஆண்டுகளுக்கு பின் 5 ராஜயோகங்கள் ஒரே வேளையில் உருவாகவுள்ளன.

அதுவும் நவம்பர் 29 ஆம் தேதியில் இந்த 5 யோகங்கள் உருவாகவுள்ளன. அந்த யோகங்கள் முறையே சச ராஜயோகம், கேந்திர திரிகோண ராஜயோகம், மாளவியா ராஜயோகம், நவபஞ்சம் மற்றும் ருச்சக ராஜயோகம்.
இப்படி 5 ராஜயோகங்கள் உருவாவதால், நிச்சயம் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு இந்த யோகங்களால் திடீர் பண வரவும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றியும் குவியும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த 5 ராஜயோகங்களால் நவம்பர் 29 முதல் அற்புதமாக இருக்கப் போகிறது. ஏனெனில் கிரகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. இதனால் இக்காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். சிலர் எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த 5 ராஜயோகங்களால் நவம்பர் 29 முதல் வாழ்க்கையின் பல அம்சங்கள் அருமையாக இருக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடனான வேலை தேடி வரும். பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கும் நவம்பர் 29 முதல் சாதகமாக இருக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலைகளை செய்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமாக குரு மற்றும் சனி பகவானின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நவம்பர் 29 முதல் நிறைவேறத் தொடங்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த 5 ராஜயோகங்களால் நவம்பர் 29 முதலாக நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் சிறப்பான பலனைப் பெறுவார்கள். பணிபுரிந்து கொண்டிருந்தால், அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறலாம். மாடலிங், நடிப்பு, இசை, மீடியா போன்ற துறைகளில் இருப்பவர்கள் இக்காலகட்டத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தால் எதிர்பார்த்த அரசு வேலை இக்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications