Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
அர்ஜுனன் போல் அசாத்திய வீரம் கொண்ட 5 ராசிக்காரங்க இவங்கதானாம்... உங்க ராசி இதுல இருக்கா?
வீரமும், தைரியமும் அனைவருக்கும் இருக்கும் குணமல்ல. வீரம் என்பது திரைப்படங்களில் வருவது போல பத்து பேரை அடிப்பது அல்ல.
வீரமும், தைரியமும் அனைவருக்கும் இருக்கும் குணமல்ல. வீரம் என்பது திரைப்படங்களில் வருவது போல பத்து பேரை அடிப்பது அல்ல. சூழ்நிலைகளை தைரியமாகவும், நேர்மையாகவும் எதிர்கொண்டு, தன்னை சார்ந்தவர்களை பாதுகாப்பதே உண்மையான வீரமாகும்.
நமது புராணங்களை பொறுத்தவரை வீரம் என்றாலே அது அர்ஜுனன்தான். மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெல்ல அர்ஜுனனின் வில்லாற்றல் மட்டுமே காரணமல்ல, அர்ஜுனனின் மனஉறுதியும், தியாகமும்தான்.

உண்மையான வீரத்திற்கு இந்த அடிப்படை குணங்கள் அவசியம். ஜோதிட சாஸ்திரத்தின் சில ராசிகளில் பிறந்தவர்கள் இந்த அடிப்படை குணங்களுடன் விஜயன் போல வீரமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
ராசிச்சக்கரத்தில் முதல் ராசியான மேஷம்தான் மகாபாரதத்தின் படி அர்ஜுனனின் ராசியாகும். இதன் விளைவாக, அவர்கள் வழிநடத்த பிறந்தவர்களாக இருக்கிறார்கள். இதுவரை யாரும் செல்லாத இடத்திற்குச் செல்லும் தைரியம் அவர்களுக்கு இருக்கிறது. மேஷ ராசியில் பிறந்தவர்கள் பயப்படுவதை வெறுக்கிறார்கள். சாகச உணர்வு அவர்களுக்கு இயல்பாகவே உள்ளது. அவர்கள் சவால்கள் ஒவ்வொன்றையும் வாய்ப்பாக பார்க்கிறார்கள். மற்றவர்கள் அச்சுறுத்தல் என்று நினைப்பதை அவர்கள் சாகசமாக பார்க்கிறார்கள். ஆபத்தை எப்போதும் உற்சாகமாக நினைக்கும் விசித்திர குணம் இவர்களிடம் இருக்கும்.
சிம்மம்
பயத்தை வெல்ல முடியவில்லை என்றால் உலகை எப்போதும் வெல்ல முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். எவ்வளவு சவாலானதாக இருந்தாலும், அச்சம் நிறைந்ததாக இருந்தாலும் அவர்கள் தங்கள் இலக்குகளை பின்தொடர்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் கனவுகளையும், லட்சியங்களையும் அடையஎதையும் செய்வார்கள். சிம்ம ராசிக்காரர்களை எதிரிகளாக வைத்துக்கொள்வது யாருக்குமே நல்லதல்ல. அவர்களின் நம்பிக்கை மற்றும் தைரியம் மற்றவர்களின் கற்பனைக்கு எட்டாதது.
விருச்சிகம்
வீரமும், புத்திசாலித்தனமும் நிறைந்த ராசி என்றால் அது விருச்சிகம்தான். விருச்சிக ராசிக்காரர்களிடம் முட்டாள்தனமான தைரியம் இருக்காது மற்றும் அவர்கள் ஆபத்துக்களையும் அதனால் கிடைக்கும் பலன்களையும் அறிவார்கள். அவர்கள் எந்தவொரு ஆபத்திலும் இருக்கும் நன்மை தீமைகளை அறிவார்கள். அவர்களின் இலக்குகள் அனைவருக்கும் மிகப்பெரியதாக தெரியும், சில சமயங்களில் அவர்களுக்கே அவர்களின் இலக்குகள் பெரியதாக தெரியும். இதற்குக் காரணம் அவர்கள் தங்களைத் தாங்களே மிஞ்ச வேண்டுமென்று நினைப்பதுதான். பயத்தை வெல்வது அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத போதையைக் கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் முக்கிய பலம் அவர்களின் நேர்மறை ஆற்றல். அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புவார்கள். அதனால் பயம் வந்தால் அது அவர்களின் மகிழ்ச்சியைக் கெடுத்துவிடும் என்பதால் அவர்கள் பயத்தை அலட்சியப்படுத்துகிறார்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் பதட்டம் அடையமாட்டார்கள். அவர்கள் தோல்விகளை தங்களுக்கு சிறந்த அனுபவமாக நினைக்கிறார்கள். அவர்களின் பயமின்மை அவர்களின் நேர்மறை ஆற்றலுக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications