Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
Fathers Day 2026 Wishes: தந்தையர் தினத்தன்று உங்க அப்பாகிட்ட 'இத' சொல்லுங்க.. ரொம்ப சந்தோஷப்படுவாரு...
Fathers Day 2026 Wishes In Tamil: ஒவ்வொருவருக்குமே இவ்வுலகில் அப்பா தான் முதல் ஹீரோ. இந்த அப்பாக்கள் தனது குடும்பத்துக்காக ஏராளமான தியாகங்களை செய்து, தனது பிள்ளைகள் கஷ்டப்படாமல் சுகமாக வாழ வாழ்நாள் முழுவதும் அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்றனர். சொல்லப்போனால், ஒரு தாய் தனது பிள்ளையுடன் நீண்ட நேரத்தை செலவிட முடிகிறது.
இதனால் தாயின் பாசத்தை அனைவராலும் நன்கு உணர முடியும். ஆனால் தந்தையோ அப்படியில்லை. தனது பிள்ளையுடன் அளவாகவே நேரத்தை செலவிடுவர். இருப்பினும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயை விட ஒருபடி அதிகமான பாசம் தந்தையின் மீது இருக்கும். ஏனெனில் தந்தை மறைமுகத் தூணாக இருந்து அந்த குடும்பத்தை, தனது பிள்ளைகளின் கனவுகளை, தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட தந்தையை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தந்தையர் தினம் ஜூன் 21 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் உங்கள் தந்தையை சந்தோஷப்படுத்த விரும்பினால், அவரது மனதை வருடும் வகையில் அவருக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்து கவிதைகளை சொல்லுங்கள்.
1. கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு
கடவுளே கிடைத்தார் வரமாக அப்பா..
இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!
2. பிள்ளைகளுக்காக பல தியாகம் செய்தாலும்
அதை முகத்தில் காட்டாமல்
சிறு புன்னகையுடன் இருப்பவர் தான் அப்பா..
இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!
3. பெண்கள் வைக்கும் அன்பில்
ஏமாற்றத்தை அளிக்காத
ஒரே ஆண் தன் தந்தை மட்டுமே!
4. உலகை நமக்கு அறிமுகம்
செய்வது தாய் என்றால்
உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்துவது
தந்தை தான்..
இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!
5. நம் வாழ்க்கையை விருச்சமாக்க
தன்னை வேராக்கி கொண்டவர் தந்தை..
இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!
6. வில்லன்போல் நீ நடித்ததெல்லாம்,
கவசம்போல் என்னை காக்கவேயென்று
நற்பெயரில் நனைந்தபோது உணர்ந்தேன் அப்பா!
இந்நாளில் உனை வாழ்த்துகிறேன்!
இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!



Click it and Unblock the Notifications






