Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
பக்ரீத் பண்டிகை 2024 எப்போது? அதன் முக்கியத்துவம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ..!
Bakrid 2024 : உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக பக்ரீத் விழா கொண்டாடப்படுகிறது. இதனை தியாகத் திருநாள் என்றும் கூறுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் துல்ஹஜ் (அரபி மாதம்) 10ஆம் நாளன்று 'ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத்' போற்றிக் கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை எப்போது?
பெரும்பாலும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் அல்லது மைதானங்களில் ஒன்று கூடி தொழுகை நடத்துகின்றனர். இந்த தொழுகையானது சூரிய உதயம் முழுமையாக வந்த பிறகே நடத்தப்படுகிறது. இந்த திருவிழா தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புனித நாளில், பல இஸ்லாமியர்கள் இறந்தவர்களின் கல்லறைகளுக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு பிடித்தமான ஆடைகள் மற்றும் உணவு பொருட்களை வைத்து பூஜை செய்கின்றனர். இதைச் செய்வதன் மூலம் பரலோகத்தில் உள்ள பெரியவர்கள் தங்களைப் ஆசிர்வாதம் செய்வார்கள் என்று நம்புகிறார்கள். பக்ரீத் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? இந்த பண்டிகையின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்வோம்...
பக்ரீத் ஏன் கொண்டாடப்படுகிறது?
இஸ்லாத்தில் பக்ரீத் பண்டிகைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. சத்தியத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருந்த நபி ஹஸ்ரத் இப்ராஹிமை இன்று மக்கள் நினைவு கூறுகிறார்கள். யார் அந்த இப்ராஹிம்? அவர் ஏன் தியாகத்தை நினைவுகூறுகிறார்.. இந்த தியாகத்திருநாளில் குர்பானி எனும் பலியிடுதல் தான் பிரதானம்... இந்த குர்பானி எதற்காக? வாங்க தெரிஞ்சுக்கலாம்..
குர்பானி என்றால் என்ன?
மசூதிகள் மற்றும் வீடுகளில் தொழுகையை நிறைவேற்றிய பின் குர்பானி என்ற பெயரில் விலங்குகள் பலியிடப்படுகின்றன. குர்பானி என்றால் தியாகம் என்று முஸ்லீம் பெரியவர்கள் கூறுகிறார்கள். குர்பானி கொடுப்பதற்கு முக்கிய காரணம் ஹஸ்ரத் இப்ராஹிமின் தியாகம் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். மேலும் இயன்றதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவுக'என்ற கோட்பாடு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடு, மாடு, ஒட்டகம் என இஸ்லாமியர்கள் தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு இவைகளைப் பலியிட்டு (குர்பானி) அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கின்றனர். குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வழிபாடு என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கடவுளின் தீர்க்கதரிசி
இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்ததார். மக்கா நகரை கட்டியது மட்டுமின்றி, அனைவரும் வாழக்கூடியதாக மாற்றினார். அல்லாஹ்வை வணங்குவதற்காக 'கஅபா' என்ற வழிபாட்டு இல்லத்தை உருவாக்கி தீர்க்கதரிசியாக அறியப்பட்டார். ஆனால், இப்ராஹிம் தம்பதிக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஆனால் நீண்ட ஆண்டுகளுக்கு பின் பிறந்த மகனுக்கு இஸ்மாயீல் என பெயரிடப்பட்டது.
இப்ராஹிமின் மகன் இஸ்மாயில் பால்ய பருவத்தை அடைந்தபோது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி மகனிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியோடு பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து நிறுத்தினார். அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறக்கி வைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான். மேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயேதியாகதிருநாள் கொண்டாடப்படுகின்றது.
மேலும் இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகைகள் நடத்தி வருகின்றனர். அதோடு இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனை ஈகைத் திருநாள் என்றும் கூறுவர். இதனால் பக்ரீத் தினத்தில் இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் குர்பானி கொடுக்கின்றனர்.



Click it and Unblock the Notifications