Latest Updates
-
தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
முட்டையை வைச்சு இந்த மாதிரி மசாலா கீமா பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் அதிசய நாடு எது தெரியுமா? நம்ம பக்கத்து நாடுதானாம் -
காரசாரமான ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்குவதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
பித்ரு பக்ஷத்தில் மறந்தும் கூட இந்த பொருட்களை வாங்காதீர்கள்.. ஏன் தெரியுமா?
இந்து பாரம்பரியத்தில் முன்னோர்களின் வழிபாடு மிகவும் முக்கியமானது. பித்ருபக்ஷத்தின் முக்கிய நோக்கம் முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் செய்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதுதான். பித்ரு பக்ஷம் 15 நாட்கள் நடைபெறும். அதன் பிறகு வரும் 16வது நாள் அமாவாசை வரும்..
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பௌர்ணமி திதி தொடங்கி, அமாவாசை திதி வரை இந்த பித்ரு பட்சம் நீடிக்கும். இந்த ஆண்டு பித்ரு பக்ஷம் செப்டம்பர் 17ம் தேதி தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது..

பித்ரு பக்ஷத்தின் போது, முன்னோர்களுக்கு பிரசாதம், ஷ்ரத்த கர்மாக்கள், மற்றும் தானம் செய்யப்படுகின்றன. ஆனால் பலர் மஹாளய அமாவாசை அன்று பெரியவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சாம்பிராணி வழங்கி மரியாதை செலுத்துகிறார்கள். பித்ருபக்ஷத்தின் போது சில வகையான பொருட்களை வாங்கக்கூடாது. அவை நம் முன்னோர்களை கோபப்படுத்துவதாக நம்பப்படுகிறது. அது என்னென்ன? பொருட்கள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
1. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பித்ரு பக்ஷத்தின் போது, புதிய வாகனங்களுடன் வீடு, மனை போன்ற அசையா சொத்துக்களை வாங்கக்கூடாது. இந்து பாரம்பரியத்தில் இது அசுபமாக கருதப்படுகிறது. இப்படி செய்தால் நம் முன்னோர்களுக்கு கோபம் வரும். புதியதை வாங்குவது மீது உங்கஉக்கு கவனம் இருக்கும்.. அதனால் அவர்கள் முன்னோர்களை பற்றி நினைக்க மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது..
2. விலையுயர்ந்த நகைகள், ஆடைகள், ஆடம்பர பொருட்களை இந்த காலத்தில் வாங்க கூடாதாம்.. பொருள் ஆடம்பரத்தில் கவனம் செலுத்துவதால் முன்னோர் வழிபாட்டில் அலட்சியம் ஏற்படும். எனவே இந்த நேரத்தில் ஆடம்பர பொருட்களை வாங்கக்கூடாது. முன்னோர் வழிபாட்டுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஜோதிடம் சொல்லுகிறது..
3. மேலும் இந்த பித்ரு பக்ஷத்தின் எலக்ட்ரானிக் பொருட்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அதன் பாகங்கள் வாங்கக்கூடாது. இந்த செயல்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக கருதப்படுகிறது. குடும்பத்தில் நல்லிணக்க சூழல் கெட வாய்ப்புள்ளது. பித்ருபக்ஷத்தின் போது முன்னோர்களை வணங்கி ஆன்மீக சிந்தனையில் ஈடுபட வேண்டும்.
4. புதிய பர்னிச்சர் வாங்குவது, வீட்டு அலங்காரம், வீட்டை புதுப்பிக்கும் பொருட்கள் வாங்குவதை தள்ளிப் போட வேண்டும். பித்ரு தெய்வங்களை வணங்கும் போது இதுபோன்ற பொருட்களை வாங்குவது இந்து பாரம்பரியத்தில் அசுபமாக கருதப்படுகிறது. முன்னோர் வழிபாட்டில் தொல்லை ஏற்படலாம்.
5. விலையுயர்ந்த கற்கள் மற்றும் உலோகங்களை வாங்காமல் இருப்பது நல்லது. இவை பித்ருபக்ஷத்தின் போது எதிர்மறை சக்திகளை வீட்டிற்குள் ஈர்க்கின்றன. பொருள் செல்வத்தை நோக்கி மனதை திசை திருப்புவது ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்கிறது..



Click it and Unblock the Notifications