Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உங்க ஜாதகத்தில் புதன் தோஷம் இருக்கா? அப்போ இந்த பரிகாரத்தை ட்ரை பண்ணுங்கள்..!
ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம், 'வித்யாகாரகன்' எனப்படும் புதன் கிரகம்தான் ஒருவர் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் கண்டிப்பாகப் புதன் வலுப்பெற்று இருக்க வேண்டும்.
ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகத்தைக் கணிக்க வரும் பெற்றோர், முதலில் கேட்கும் கேள்வி என் குழந்தை என்ன படிப்பு படிப்பான் என்பதுதான். அந்தப் படிப்புக்குக் காரணமானவர் புதன். அறிவால் உலகத்தை ஆட்டுவிப்பவர் என்பதால், எல்லாவற்றிலும் நிபுணத்துவம் உள்ளவர் எனும் அர்த்தத்தில் இவரை 'நிபுணன்' என்று ஜோதிட சாஸ்திரம் புகழ்கிறது.

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் அதிபதியாக புதனுக்கு தனி இடம் உண்டு. புதன், நுண்ணறிவு மற்றும் தகவல் தொடர்புக்கு பொறுப்பான கிரகம் என்று கூறப்படுகிறது. ஜாதகத்தில் புதன் வலுவாக உள்ளவர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள்.
புதன் தரும் தோஷங்கள்
புதன் வவலிமையிழந்தால் கல்வி முன்னேற்றத்தில் சிறப்பான நிலை இருக்காது.
ஜாதகத்தில் புதன் மறைந்தால் நரம்பு தொடர்பான வியாதிகள் மற்றும் புத்திர விருத்தியில் குறைபாடு உண்டாகும். மேலும் தாய்மாமன் உறவில் பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஜாதகத்தில் புதன் வலுப்பெற இதை செய்யுங்கள்
ஜாதகத்தில் புதன் தோஷம் இருந்தால், புதன் பலவீனமாக இருந்தால், புதனை பலப்படுத்த சில பரிகாரங்கள் உள்ளன. இப்போது அந்த பரிகாரம் பற்றி தெரிந்து கொள்வோம். ஜாதகத்தில் புத தோஷம் இருந்தால் புத தோஷம் வராமல் இருக்க புதன்கிழமை விரதம் இருப்பது நல்லது. புதன்கிழமை அன்று பச்சை வாழை இலையை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். பேரீச்சம்பழம், அரிசி, நெல்லிக்காய், தேன் ஆகியவற்றை நீரில் கலந்து குளிக்கவும். இப்படி செய்தால் புதன் மகிழ்ச்சியடைந்து நல்ல பலன்கள் கிடைக்கும்.
புதன் கிழமையில் இந்த வேலையை செய்யுங்கள்
புதன் அன்று விஷ்ணு மூர்த்தி கோவில்களுக்கு சென்று விஷ்ணு பூஜை செய்தால் ஜாதகத்தில் புதன் வலுப்பெறும். வலுவிழந்த புதனை வலுப்படுத்த, பயறு, வாழைப்பழம் ஆகியவற்றை பசுவிற்கு உணவளிக்க வேண்டும். வீட்டில் அகன்ற இலைகள் கொண்ட மரங்களை நடவும். எதிர்மறையான விளைவுகளிலிருந்து பாதுகாக்க முதலில் ஒருவர் மரகதத்தை அணிய வேண்டும்.
புதன் கிழமையில் தானம் செய்ய வேண்டியவை
பச்சை நிறப் பொருட்களை ஏழை பிராமணர்களுக்கு தானம் செய்ய வேண்டும். புதன்கிழமை அன்று பச்சை நிறத்தை அணிய வேண்டும். குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்..புத மந்திரத்தை ஜபித்து, புதன் கிழமையில் நல்ல மரகதத்தை (மரகதம்) அணிந்தால், புத்திர தோஷங்கள் நீங்கும் என்கிறது சாஸ்திரம்.
பூஜைகள்
விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்திரத்தை 5 முறை பாராயணம் செய்ய வேண்டும். புதன்கிழமை அன்று புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம் அல்லது நாராயண சூக்தம் சொல்ல வேண்டும். 17 புதன்கிழமைகளில் வெங்கடேஸ்வர சுவாமிக்கு துளசி மாலை அணிவிக்க வேண்டும். புத கிரஹ தோஷத்தைத் தடுக்க, பசுமையான வயலில், இலைச் சூழலில் சிறிது நேரம் செலவிடுவது நல்லது. இதனால் புத கிரக தோஷம் நீங்கும்.
புதனுக்கான பரிகாரங்கள்
திருவெண்காடு சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை முறையாக வழிபட்டு வந்தால் தோஷம் குறையும். பெருமாள் கோவிலுக்கு புதன் கிழமை தோறும் சென்று வர புதனால் ஏற்பட்ட தோஷத்தின் வீரியம் குறையும்.
மதுரையில் உள்ள சொக்கநாதரை புதன்கிழமை அன்று வணங்கி வர
தோஷம் நீங்கும்.
புதனின் காயத்ரி மந்திரம்
ஓம் கஜத்வஜாய வித்மதே
சுக அஸ்தாய தீமஹி
தன்தனா புத பிரசோதயாத்
என்ற புதன் பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்லி அவரை வணங்கி வர வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நடக்கும்.



Click it and Unblock the Notifications