Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
புலியின் சிறுநீரை 600 ரூபாய்க்கு விற்கும் சீன மிருக்காட்சி சாலை...என்ன சொல்லி விக்கிறாங்க தெரியுமா? நீங்களுமா?
தமிழ்நாட்டில் பசு மாட்டின் கோமியம் குறித்த சர்ச்சை உச்சத்தில் இருக்கும் நிலையில் மற்றொரு வினோத நிகழ்வு சீனாவில் நடந்து வருகிறது. சீனாவில் உள்ள ஒரு தமிழ்நாட்டில் பசு மாட்டின் கோமியம் குறித்த சர்ச்சை உச்சத்தில் இருக்கும் நிலையில் மற்றொரு வினோத நிகழ்வு சீனாவில் நடந்து வருகிறது. சீனாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலை, முடக்கு வாதத்தை குணப்படுத்தும் என்றார் புலியின் சிறுநீரை 600 ரூபாய்க்கு விற்று வருகிறது. உண்மைதான், இந்த தங்க நிற திரவத்தில் அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதாக மிருகக்காட்சிசாலை கூறுகிறது, இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாரம்பரிய சிகிச்சை முறைகளால் ஏமாற்றம் அடைந்தவர்கள் உண்மையில் இதனை வரவேற்கிறார்கள் என்பதுதான் மேலும் அதிர்ச்சியானதாக இருக்கிறது. மூட்டுவலிக்கான நிரந்தர தீர்வாக இது இருக்குமென்று சிலர் நினைக்கிறார்கள். இந்த வினோதமான சம்பவம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சீனாவில் உள்ள யான் பிஃபெங்சியா வனவிலங்கு உயிரியல் பூங்கா, சைபீரியன் புலி சிறுநீரை முடக்கு வாதம் மற்றும் பிற நோய்களுக்கு மருந்தாக விளம்பரப்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிருகக்காட்சிசாலை சர்ச்சைக்குரிய 250 கிராம் திரவ பாட்டில்களை 50 யுவானுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 600) விற்பனை செய்கிறது, இது வெள்ளை ஒயினுடன் கலந்து இஞ்சி துண்டுகளுடன் தடவும்போது சேர்த்து நல்ல பலன்களை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கலவை சுளுக்கு, தசைகளில் வலி மற்றும் மூட்டுவலிக்கு கூட பயன்படுத்தப்படுகிறது என்று மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது. சிறப்பான பலன்களுக்கு இதை குடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
புலிகள் சிறுநீர் கழிக்கும் தொட்டியில் இருந்து சிறுநீர் சேகரிக்கப்படுவதாக ஊழியர்களில் ஒருவர் கூறினார், இருப்பினும் அது சந்தைப்படுத்தப்படுவதற்கு முன்பு கிருமி நீக்கம் செய்யப்படுகிறதா என்பது தெரியவில்லை. ஒவ்வாமை எதிர்வினைகள் வெளிப்பட்டால் பயன்படுத்துவதை நிறுத்துமாறு பாட்டில்களில் உள்ள அறிவிப்பு பயனர்களை எச்சரிக்கிறது.
மிருக்காட்சி சாலைக்கு சென்ற ஒரு பார்வையாளர் சமூக ஊடகங்களில் இந்த கண்டுபிடிப்பைப் பகிர்ந்து கொண்ட போது இந்த வினோதமான சிகிச்சை வெளிச்சத்திற்கு வந்தது என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) அறிக்கை தெரிவித்துள்ளது.
சீனாவில் இந்த யான் பிஃபெங்சியா வனவிலங்கு உயிரியல் பூங்கா, புலியின் சிறுநீரை மருத்துவக் காரணங்களுக்காக விற்பதாக அறிவித்தததால் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. . இருப்பினும், நிபுணர்கள் இந்த அறிக்கைகளை தொடர்ந்து சந்தேகம் எழுப்புகின்றனர். ஹூபே மாகாண பாரம்பரிய சீன மருத்துவ மருத்துவமனை கூற்றுப்படி, "புலி சிறுநீர் நிரூபிக்கப்பட்ட மருத்துவ மதிப்பைக் கொண்டிருக்கவில்லை மற்றும் பாரம்பரிய மருத்துவத்திலும் இது பயன்படுத்தப்படுவதில்லை" என்று கூறியுள்ளது.
மற்றொரு அறிக்கை "மிருகக்காட்சிசாலையில் பொருட்களை விற்க உரிமம் இல்லை" என்று கூறியுள்ளது. சமூக ஊடகங்களில் இதற்கான எதிர்வினைகள் ஆர்வத்திலிருந்து வெறுப்பு வரை பல விதங்களில் உள்ளன. இதை பயன்படுத்திய பல வாடிக்கையாளர்கள் எந்த விளைவுகளையும் உணரவில்லை என்று தெரிவித்தனர், மற்றவர்கள் சிறுநீர் பாக்டீரியாவை பரப்பும் சாத்தியக்கூறுகள் குறித்து கவலைகளை எழுப்பினர். இது ஒரு முட்டாள்த்தனமான வணிக நடவடிக்கையா அல்லது அடுத்த ஆரோக்கிய பிரச்சினைக்கான ஆரம்ப புள்ளியா என்று மக்கள் குழம்பியுள்ளனர்.



Click it and Unblock the Notifications
