Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
மீனத்தில் உருவாகியுள்ள சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
2023 மார்ச் 22 ஆம் தேதி மீன ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. சதுர்கிரக யோகம் என்பது 4 கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும்.
Chaturgrahi Yoga In Pisces: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் நிலைகளைக் கொண்டு தான் பலன்கள் கணித்துக் கூறப்படுகின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ராசியை மாற்றும். சில சமயங்களில் ஒரே ராசியில் இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கும். அப்படி பல கிரகங்கள் ஒன்றாக பயணிக்கும் போது, சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் 2023 மார்ச் 22 ஆம் தேதி மீன ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. சதுர்கிரக யோகம் என்பது 4 கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும். எனவே தற்போது மீன ராசியில் சூரியன், சந்திரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் ஒன்றாக பயணிக்கின்றன.

இந்த கிரகங்களின் சேர்க்கையால் உருவான சதுர்கிரக யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல செல்வத்தைப் பெறுவதோடு, அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். இதனால் இக்காலத்தில் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். கூட்டு தொழில் செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். இக்காலகட்டத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், நல்ல லாபத்தைக் காணலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் வேலை இல்லாதவர்கள் மற்றும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகள் இக்காலத்தில் நல்ல லாபத்தைக் காண நேரிடும். தொழிலில் உள்ள எதிரிகளால் உங்களை வீழ்த்த முடியாது. அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் பாராட்டு மற்றும் விருதைப் பெற வாய்ப்புள்ளது. அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகியிருப்பதால், கும்ப ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக திடீரென்று கையில் பணம் அதிகம் சேரும். நிலத்தில் முதலீடு செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் வியாபாரத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைக் காணலாம். இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளும் எந்த வேலையிலும் வெற்றி கிடைக்கும். பேச்சால் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
