Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்கள் இருக்கும் ஆண்களுடன் வாழும் பெண்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர்களாம்...!
Chanakya Niti About Men: சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அறிஞர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி ஆவார். வாழ்க்கையின் அனைத்து விஷயங்களைப் பற்றியும் ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்தது. சாணக்கியர் தனது வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சாணக்கிய நீதி என்ற நூலை எழுதினார்.
சாணக்கிய நீதி இன்றும் மனித வாழ்வில் மிகவும் உதவியாக உள்ளது. உங்கள் வாழ்க்கையில் சரி மற்றும் தவறுகளைத் தேர்வு செய்ய சாணக்கியரின் உதவியைப் பெறலாம். சாணக்கிய நீதி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிலபயனுள்ள அறிவுரைகளைக் கூறுகிறது.

சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த குணங்களை கொண்ட ஆண்களை பெண்களுக்கு எப்போதும் பிடிக்கும். அப்படிப்பட்ட ஆண்களுடன் வாழும் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்கிறார் சாணக்கியர்.
நேர்மை
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் நேர்மையான ஆண்களை விரும்புகிறார்கள். ஒரு நேர்மையான நபர் எப்போதும் தனது உறவுகளில் பொய் கூறமாட்டார். பெண்கள் எப்போதும் நேர்மையான மற்றும் உண்மையான அன்பான மனிதனை விரும்புகிறார்கள். ஒரு நேர்மையான மனிதன் தனது உறவில் ஒருபோதும் ஏமாற்ற மாட்டான்.
நல்ல நடத்தை
ஒருவரின் நல்ல நடத்தை அனைவரையும் ஈர்க்கும். அதேபோல, ஒரு ஆண் நன்றாக நடந்து கொண்டால், ஒரு பெண்ணுக்கு நிச்சயமாக அவரைப் பிடிக்கும். ஆண்களின் பேச்சில் இனிமையும் பாசமும் இருப்பது அவர்களின் சிறப்புக் குணங்கள். எந்தவொரு பெண்ணும் இந்த குணங்களை விரும்புவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
மதித்து நடப்பது
ஒவ்வொரு பெண்ணும் தன் கணவர் தன்னை எப்போதும் மதிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டுமென்று நினைப்பார்கள். மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளும் திறன் கொண்ட ஆண்களுடன் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
பெண்கள் தங்கள் பிரச்சினைகளைக் கேட்டு தீர்வு காணும் ஆண்களிடம் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். அத்தகைய ஆண்கள் எப்போதும் பெண்களால் நேசிக்கப்படுகிறார்கள்.
கண்ணியமாக நடந்து கொள்வது
சாணக்ய நீதியில் கூறியுள்ள படி, பெண்கள் கண்ணியமான ஆண்களை விரைவாக விரும்புவார்கள். ஆணவம் இல்லாத, தங்களின் தவறுகளை பணிவுடன் ஏற்றுக்கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
ஆண்களின் இந்த குணத்தால், உறவில் காதல் நிலைத்திருக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள். கண்ணியமான ஆணுடன் வாழும் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்கிறார் சாணக்கியர்.
நம்பகமானவர்
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தவொரு உறவிலும் பரஸ்பர நம்பிக்கை மிகவும் முக்கியமானது. ஒரு பெண் ஒரு ஆணிடம் தனிப்பட்ட ஒன்றைச்ரகசியம் ஒன்றைச் சொன்னால், அவர் அதனைத் தனக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும், பெண்கள் அத்தகைய நம்பிக்கையுள்ள ஆண்களை விரும்புகிறார்கள். நம்பிக்கைகளை உடைக்காமல், தங்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்களுடன் வாழும் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக சாணக்கியர் கூறுகிறார்.
பாதுகாப்பான ஆண்
எந்தவொரு பெண்ணும் தன்னைப் பாதுகாப்பாக உணர வைக்கும் ஆண்களை விரும்புகிறார்கள். பெண்கள் தங்கள் துணையுடன் பாதுகாப்பாக உணரும்போது அத்தகைய ஆணை நம்புகிறார்கள். பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆணுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
