Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சாணக்கிய நீதி படி மற்றவர்கள் செல்வம் மீது ஆசைப்படுபவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
Chanakya Niti: செல்வம், பணம், சமூகத்தில் மரியாதையும் அனைவருமே விரும்புவதாக. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அனைவரின் நிதி நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பணம் கொடுக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வேறு எந்த விஷயத்தாலும் கொடுக்க முடியாது. எனவே அதனை குறுக்கு வழியில் சம்பாதிக்க பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்க.
சாணக்கியர் தனது நீதி ஸ்திரத்தில் சொத்து, செல்வம் மற்றும் பணத்தைப் பற்றிய பல ரகசியங்களைக் கூறியுள்ளார். சாணக்கியர் செல்வம் பெறும் வழிகளைப் பற்றியும், மற்றொருவரின் பணத்திற்கான மனிதனின் ஆசையையும் பற்றி விளக்கியுள்ளார். இந்த பதிவில் மற்றவர்களின் செல்வத்தின் மீதான ஆசை எப்படி அழிவை ஏற்படுத்தும் என்று சாணக்கியர் கூறுகிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.

இழப்புகள் மற்றும் கஷ்டங்கள்
பிறருடைய செல்வத்தின் மீது ஆசைப்பட்டால் அது பேராசை எனப்படும். நீங்கள் அத்தகைய குணம் கொண்டவராக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்தே சிரமங்களும் சிக்கல்களும் நிறைந்திருக்கும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
இந்த பேராசை உங்களை நிதி இழப்புகளுக்கும் நெருக்கடிகளுக்கும் இட்டுச் செல்லும். மேலும் வாழ்க்கையில் பல சவால்களை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பது என்பது தேவையில்லாமல் உங்கள் வாழ்க்கையில் அமைதியை ஏற்படுத்தும். எப்போதும் புத்திசாலித்தனத்துடனும், நல்ல உள்ளத்துடனும் செயல்படுங்கள். இது வாழ்க்கையை சிறப்பாக்கும்.
தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருக்க வேண்டும்
வாழ்க்கையில் எப்பொழுதும் இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும், கடின உழைப்பின் மூலம் உங்களுக்குத் தேவையானதை சம்பாதிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். மாறாக, மற்றவர்களின் சொத்துக்களில் கண்ணை வைத்திருந்தால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது.
அதுமட்டுமின்றி வாழ்க்கையில் பல சவால்கள் ஏற்படும். வாழ்க்கையில் நினைவில் கொள்ள வேண்டிய முதல் விஷயம், கடின உழைப்பின் மூலம் நாம் அடைய விரும்புவதை அடைய வேண்டும். சம்பாதிக்க குறுக்குவழிகள் எப்போதும் நிரந்தரமானவை அல்ல.
ஆபத்தில் சிக்கலாம்
மற்றவர்களின் செல்வத்தை விரும்புபவர்கள் பெரும்பாலும் அவர்களுக்கான ஆபத்தான சூழ்நிலைகளை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். சட்ட விரோதமாக செல்வத்தைப் பெற முயற்சிப்பது சிறைக்குச் செல்லும் ஆபத்தை ஏற்படுத்தலாம். சிலர் அதற்காக தொடர்ச்சியான குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஒருவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
சவால்கள் மற்றும் நெருக்கடிகள்
பேராசை உங்கள் மன அமைதியை அழிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எப்படியாவது அவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற எண்ணமும் கவலையும் வாழ்க்கையில் நிறைய சிரமங்களை ஏற்படுத்துகிறது. இது உங்கள் மன ஆரோக்கியத்தையும் அழிக்கிறது. இதுபோன்ற விஷயங்களில் இருந்து விடுபட ஒரே வழி கடினமாக உழைத்து சரியான வழியில் முன்னேறுவதுதான். ஒருவரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.



Click it and Unblock the Notifications
