Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
சாணக்கிய நீதி படி ஒருவர் கோடீஸ்வரராக பின்பற்ற வேண்டிய தந்திரங்கள் என்னென்ன தெரியுமா?
Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த இராஜதந்திரி, பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதியாக திகழ்ந்தார். அவர் சமூகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை தனது அறிவுரைகள் மூலம் மாற்ற முயற்சித்தார். அவர் மக்களின் வாழ்க்கையை மாற்றும் அறிவுரைகளை தனது சாணக்கிய நீதியில் தொகுத்துள்ளார்.
ஒருவர் பணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். சாணக்கிய நீதியில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன, இந்த விஷயங்களை பின்பற்றுவது ஒருவர் மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ உதவும்.

சமநிலையான வாழ்க்கை வாழ பணம் மிகவும் அவசியமானதாகும். சில விதிகளை பின்பற்றுவதன் மூலம் ஒருவர் பணத்தை சேமித்து வசதியான வாழ்க்கை வாழலாம் என்று சாணக்கியர் கூறுகிறார். அவை என்னென்ன இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வீண் செலவு செய்யக்கூடாது
லட்சுமி தேவி செல்வத்தின் கடவுள் என்று அறியப்படுகிறார். ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, பணத்தைத் தண்ணீரைப் போல செலவழிப்பவர்கள் மற்றும் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்காதவர்கள் முட்டாள்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அத்தகையவர்கள் வாழ்க்கையில் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆடம்பரப் பொருட்களுக்காகத் தொடர்ந்து பணம் செலவழிப்பவர்கள் எப்போதும் நிதி ஸ்திரத்தன்மையை அடைய முடியாது. அதேசமயம் கடினமான காலங்களுக்காக பணத்தைச் சேமித்து வைப்பவர்களை சாணக்கியர் ஞானி என்று அழைக்கிறார்.
தவறான செயல்கள் மூலம் சம்பாதிப்பது ஆபத்தானது
சாணக்கியரின் கூற்றுப்படி பணத்தை சரியான வழிகளில் சம்பாதிக்க வேண்டும். தவறான செயல்களால் சம்பாதித்த பணத்தால் எந்தப் பயனும் இல்லை என்றும் சாணக்கியர் கூறுகிறார். அந்த மாதிரியான பணம் உங்கள் கையிலிருந்து எப்படி போகிறது என்றே உங்களுக்குத் தெரியாது.
சரியான இடத்தில் வாழ வேண்டும்
சாணக்கியறின் கொள்கையின்படி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள இடத்தில் வசிக்க வேண்டும். அத்தகைய இடத்தில் தங்கியிருப்பதன் மூலம் ஒருவர் ஒருபோதும் வெறுங்கையுடன் வாழ வேண்டிய நிலை ஏற்படாது. உடனிருப்பவர்களின் உதவியால் அவர்கள் விரைவில் பணக்காரர் ஆகலாம்.
வாழ்க்கையில் இலட்சியம் இருக்க வேண்டும்
ஒரு நபர் வாழ்க்கையில் வெற்றி பெறவும், நிறைவான செல்வத்தைப் பெறவும், இலட்சியத்தை நிர்வகிக்க வேண்டிய அவசியம் என்று சாணக்கியர் கூறுகிறார். வாழ்க்கையில் இலக்குகள் மற்றும் ஆசைகள் இல்லாத ஒரு நபர் ஒருபோதும் செல்வத்தை அடைய முடியாது. அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையிலிருந்து வெற்றி வெகு தொலைவில் இருக்கும். நீங்கள் பணம் சம்பாதிக்க விரும்பினால் உங்கள் இலட்சியத்தைப் பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள்.
சரியாக முதலீடு செய்ய வேண்டும்
வாழ்க்கையில் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிப்பது அவசியம், ஆனால் பணத்தை செலவழிக்காமலே சேமிப்பது முட்டாள்தனம் என்று சாணக்கியர் கூறுகிறார். பணத்தை சேமிப்பதற்கான சிறந்த வழி, முடிந்தவரை சரியான இடங்களில் முதலீடு செய்வதுதான். ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் சிறிது நேரம் கழித்து கெட்டுப் போவது போல், பயன்படுத்தாமல் விடப்படும் பணமும் வீணாகும்.



Click it and Unblock the Notifications
