Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதிக்க இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
Chanakya Niti: மௌரிய வம்சத்தின் அரசியல் குருவாக ஆச்சார்ய சாணக்கியர் விளங்கினார். மௌரிய வம்சத்தை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும். அவர் ஒரு புகழ்பெற்ற தத்துவவாதி, அரசியல் நிபுணர், சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் தார்மீக இராஜதந்திரியாவார்.
வாழ்க்கை, வணிகம், சமூக வாழ்க்கை, நெறிமுறைகள், பொருளாதாரம் மற்றும் பல விஷயங்களைப் பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். சாணக்கிய நீதியின் போதனைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு நபரின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் மாறும்.

வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ பணம் மிகவும் அவசியமானதாகும். வாழ்க்கையில் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள விரும்பாதவர்கள் நிதிரீதியாக தன்னிறைவு அடைய சாணக்கியரின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்.
சாணக்கியரின் எண்ணங்கள் மற்றும் கொள்கைகளால் ஒரு நபர் வாழ்க்கையில் அனைத்து சவால்களையும் சமாளித்து வெற்றிப் பாதையில் முன்னேற முடியும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த உதவும் சாணக்கியரின் கொள்கைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தகுதியானவர்களுக்கு மட்டுமே பணம் கொடுக்க வேண்டும்
உங்கள் பணத்தை தகுதியானவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். ஆச்சார்யா சாணக்கியர், தகுதியில்லாத எவருக்கும் பணத்தைக் கொடுக்கக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். நீங்கள் யாருக்கு பணம் கொடுத்தாலும், அது நல்ல முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், உங்கள் செல்வம் நீங்கள் அதனை எப்படி நிர்வகிக்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களிடம் நிலைத்திருக்கும்.
நோக்கம்
ஒரு வேலையைத் தொடங்குவதற்கு முன், மூன்று கேள்விகளை உங்களுக்குள்ளேய கேட்டுக்கொள்ள வேண்டும். அதை ஏன் செய்ய வேண்டும், என்ன பலன் தரும், அதில் வெற்றி பெற முடியுமா?. இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் ஆழ்ந்து சிந்தித்து திருப்திகரமான பதில்களைப் பெற்றால் மட்டுமே அந்த வேலையைத் தொடங்குங்கள். இலக்கு இல்லாமல் எந்த பணியிலும் வெற்றி பெற முடியாது.
வேலையை பாதியில் நிறுத்தக்கூடாது
ஒரு வேலையை ஆரம்பித்துவிட்டால் அதை ஒருபோதும் பாதியிலேயே நிறுத்தக்கூடாது. தோல்வி பயம் உங்களை ஆக்கிரமிக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். தோல்வி பயத்திலிருந்து வெளிவந்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நேர்மையாக வேலை செய்பவர்களே வேலையே வெற்றிகரமாக முடிக்க முடியும் என்கிறார் சாணக்கியர்.
எதையும் அதிகம் செய்ய வேண்டாம்
சீதையின் அதீத அழகே ராவணன் கடத்திச் செல்ல காரணமாக இருந்தது, இராவணனின் அதீத கர்வமே அவரைக் கொன்றது, துரியோதனின் அதீத பேராசையே குரு வம்ச அழிவுக்கு காரணமானது. எனவே, எதையும் மிகைப்படுத்துவது ஆபத்தானது. எதையும் அதிகமாக விரும்புவதைத் தவிர்க்கவும். இதனால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் என்கிறார் சாணக்கியர்.
நேர்மையான வழியில் சம்பாதிக்க வேண்டும்
பணம் எப்போதும் சரியான வழியில் சம்பாதிக்கப்பட வேண்டும். ஏனென்றால், தவறான வழியில் சம்பாதித்த பணம் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். தவறான வழிகளில் சம்பாதிக்கும் பணம் வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒழுக்கக்கேடான வழிகளில் சம்பாதித்த பணம் விரைவில் உங்கள் கைகளிலிருந்து அழிந்துவிடும். அத்தகைய பணத்தின் ஆயுள் பத்து ஆண்டுகள் மட்டுமே. இந்த 10 வருடங்களில் உங்கள் கைகளில் இருந்து பணம் தண்ணீராக வெளியேறும்.



Click it and Unblock the Notifications
