Latest Updates
-
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும்
சாணக்கிய நீதி உங்களிடம் கொட்டிக்கிடக்கும் பணத்தை விட இந்த விஷயம்தான் உங்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுமாம்...
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, அனைவரும் தனது வாழ்க்கையில் பணத்தை விட இந்த குணத்தை முக்கியமானதாக கருத வேண்டும். ஏனெனில் பணத்தை எப்படி வேண்டுமென்றாலும் சம்பாதிக்கலாம், ஆனால் இந்த குணத்தை அப்படி அடைய முடியாது. அந்த சிறப்பு குணம் என்ன? உங்களுக்கும் இந்த குணம் இருந்தால் இன்றே மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
ஆச்சார்யா சாணக்கியர் இந்தியாவின் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் அறிஞராகக் கருதப்படுகிறார். அவருடைய நீதி அல்லது கொள்கைகள் தனிநபர்களின் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் நலனுக்காகவும் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவரிடம் பணம் இருந்தால், அவர் எவ்வளவு பெரிய சவாலை கூட சமாளிக்க முடியும், ஆனால் பணத்துடன், ஒவ்வொரு நபரிடமும் இருக்க வேண்டிய வேறுசில பண்புகள் உள்ளன.
மனிதரிடம் உள்ள இந்த விஷயங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டாலும் குறையாது. சாணக்கியர் கூறும் அந்த முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அறிவு
சாணக்கிய நீதியின் படி அறிவு என்பது ஒருவருக்குள் மறைந்திருக்கும் மிகப்பெரிய செல்வம். எவ்வளவுதான் பகிர்ந்து கொண்டாலும் அறிவின் எல்லை முடிவதில்லை. சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் அறிவை காமதேனு பசுவுடன் ஒப்பிட்டார்.
காமதேனு பசு பால் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தாது, ஒருவரிடம் இருக்கும் அறிவும் அதேபோன்றதுதான். பகிர்ந்து கொள்வதன் மூலம் அறிவு வளரும். எனவே முடிந்தவரை அறிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கிறார் சாணக்கியர்.
பிரச்சனைகளுக்குத் தீர்வு
சாணக்கியர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தன் குழந்தையைப் பாதுகாக்கும் தாயுடன் அறிவை ஒப்பிடுகிறார். அறிவை வைத்து ஒருவர் தன்னுடைய வழிகளில் இருக்கும் அனைத்து சிரமங்களையும் கடக்கிறார். சாணக்கியர் கூறுகையில், ஒருவருக்கு வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் உள்ள வழிகளை தனது அறிவின் மூலம் கண்டுபிடித்து விடுவார்கள்.
அறிவு என்பது இரகசிய செல்வம்
சாணக்கியரின் கூற்றுப்படி, அறிவு என்பது ஒரு ரகசிய செல்வமாகும், அது பகிர்ந்து கொள்ளப்பட்டாலும் அது தீர்ந்து போகாது. கெட்ட நேரத்திலும் பலன்களைத் தருவதும் இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வதும் அறிவு ஒன்றே என்றார் சாணக்கியர்.
சாணக்கியர் அறிவை ரகசியப் பொக்கிஷம் என்று அழைப்பதற்கு முக்கியக் காரணம், ஒருவரிடம் உள்ள அறிவு எல்லா நேரத்திலும் வெளிப்படுவதில்லை. நேரம் வரும்போதுதான் அந்த நபரிடம் இருந்து வெளிவரும். எனவே அறிவை ஒரு ரகசிய பொக்கிஷம் என்று சாணக்கியர் கூறினார்.
அறிவை ஒருபோதும் கட்டுப்படுத்தக்கூடாது
தன்னுடைய அறிவு தனக்கு மட்டுமே உரியது என்று கட்டுப்படுத்துவது சரியல்ல. அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது சமுதாயத்திற்கு நல்லது. கல்வி அவர்களுக்கு பயனளிப்பது மட்டுமின்றி அவர்களுடைய பல தலைமுறைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துகிறது. மேலும் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அறிவெனும் செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது அந்தச் செல்வத்தை வளர்க்கும் மற்றும் சமூகத்தின் நலனுக்கும் பங்களிக்கும் என்று சாணக்கியர் உறுதியாக நம்பினார்.



Click it and Unblock the Notifications
