Latest Updates
-
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க
சாணக்கிய நீதி படி இந்த விஷயங்கள மறக்காம இருந்தா எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருந்தும் தப்பிச்சிரலாமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு திறமையான அரசியல்வாதி, ஒரு சிறந்த அறிஞர், இராஜதந்திரி மற்றும் பொருளாதார நிபுணர். சந்திரகுப்த மௌரியரை மன்னராக்கியது அவறது இராஜதந்திரமும், வியூகமும்தான். சாணக்கியர் வியூகங்கள், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவு பெற்றவர்.
சாணக்கியர் தனது வாழ்க்கையில் பல புத்தகங்களை எழுதினார். அதில் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் இன்றுவரை மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றனர். ஏனெனில் இதில் வாழ்க்கை தொடர்பான பல முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அனைவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் சோதனையான காலம் வரும் என்கிறார் சாணக்கியர். இதுபோன்ற காலங்களை எப்படி எதிர்கொள்வது, அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
கடினமான சூழ்நிலைகளை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் மனிதன் வாழ்க்கையில் தோல்வியடைய மாட்டான். அதனால்தான் கெட்ட காலங்களில் சாணக்கியரின் சில கொள்கைகளை நினைவில் கொள்ள வேண்டும்.
சாணக்கியரின் அறிவுரைகள் ஒரு நபருக்கு மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வலிமை அளிக்கிறது. நெருக்கடியான காலங்களில் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பொறுமை
கடினமான சூழ்நிலைகளில் ஒரு மனிதன் தனது வலிமை, தன்னடக்கம் மற்றும் பொறுமையைக் காட்ட வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, கெட்ட நேரத்தைக் கடக்க ஒருவர் பொறுமையாக இருக்க வேண்டும். பொறுமையால் மட்டுமே கடினமான சூழ்நிலைகளை கடக்க முடியும்.
அமைதியை கடைபிடிக்க வேண்டும்
வாழ்க்கையில் கெட்ட நேரங்கள் எப்போது வேண்டுமென்றாலும் வரும். சாணக்கியரின் கொள்கையின்படி, இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும், பொறுமையை இழக்காதீர்கள்.
ஒரு நாள் உங்கள் கெட்ட காலம் முடிவுக்கு வரும் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் கொள்கைகளில்உறுதியாக இருக்க வேண்டும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், என்ன நடந்தாலும், உங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கடினமான காலங்களில் தன்னம்பிக்கையைக் கடைப்பிடிப்பதன் மூலம், நீங்கள் எளிதாக முடிவுகளை எடுக்கலாம்.
நெருக்கமானவர்களுடன் இருங்கள்
மோசமான காலங்களில் உங்களுடன் நிற்பவர்கள் உங்களை உண்மையாக நேசிப்பவர்கள் மட்டுமே. கடினமான காலங்களில் இப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு துணை நிற்பது எல்லா சிரமங்களையும் சமாளிக்க உதவும். உங்கள் குடும்பத்தினராக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, நெருக்கடியான நேரங்களில் அவர்களுடன் இருப்பது உங்களுக்கு மிகுந்த மன வலிமையைத் தரும்.
நேர்மறையாக சிந்திக்க வேண்டும்
வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருந்தாலும் உங்கள் எண்ணங்களை எப்போதும் நேர்மறையாக வைத்திருக்க வேண்டியது அவசியம், ஏனெனில் அப்போதுதான் அதுவே உங்கள் வாழ்வில் நடக்கும். எனவே உங்கள் தீய எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றவும்.
கெட்ட நேரங்களில் நேர்மறை எண்ணங்களை வைத்திருப்பவர் ஒருபோதும் இழப்பை சந்திக்க மாட்டார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
திட்டமிடல்
கெட்ட காலம் வரும்போது, நிதானத்துடன் செயல்பட்டு, அதிலிருந்து வெளிவருவதற்கான திட்டத்தை தயார் செய்ய வேண்டும் என்கிறார் சாணக்கியர். அதனால், கடினமான காலங்களில் பெரிய இழப்புகளைச் சந்திக்க வேண்டியதில்லை. சிறந்த உத்திகளை உருவாக்குவது, நீங்கள் கெட்ட நேரங்களை சமாளிப்பதை எளிதாக்கும்.
பயத்தை வெல்ல வேண்டும்
பயம் என்பது நம்மை பலவீனப்படுத்தும் ஒன்று, பின்னர் அது படிப்படியாக நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு நம்பிக்கையுள்ள நபர் மோசமான சூழ்நிலைகளை நன்கு கையாள முடியும், ஆனால் பயமுள்ள ஒருவரால் அது முடியாது.
பயமுள்ள ஒரு நபர் தன்னைக் காப்பாற்றவோ அல்லது கடினமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவோ முடியாது. நீங்கள் நிலைமையை எதிர்த்துப் போராடுவதற்கு முன் நீங்கள் பயத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.
நம்ப முடியாத நபர்களைத் தவிர்க்கவும்
வழக்கமாக உங்களுடன் வந்து அமர்ந்து பேசும் பலரை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். ஆனால் உங்களின் மோசமான காலங்களில் அப்படிப்பட்டவர்கள் சில சமயங்களில் கவனமாகக் கேட்காமல் உங்களைப் புறக்கணிப்பது போல் தோன்றலாம்.
அத்தகையவர்களுடன் உங்கள் தனிப்பட்ட அல்லது முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். அப்படிப்பட்டவர்கள் உங்கள் பிரச்சினைகளை மற்றவர்களிடம் கூறி மகிழ்வார்கள். அப்படிப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பது நல்லது.



Click it and Unblock the Notifications
