சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்கள் இருப்பவர்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் சீக்கிரம் கரைஞ்சு போயிருமாம்...!

Chanakya Niti: வாழ்க்கை வாழ்வதற்கு பணம் அவசியமான தேவையாகும். சிறந்த பொருளாதார நிபுணராக அறியப்பட்ட சாணக்கியர், தனது சாணக்கிய நீதியில் செல்வத்தைப் பற்றி பல விஷயங்களைக் கூறியுள்ளார்.

சில விஷயங்களில் கவனம் செலுத்தாவிட்டால், பணக்காரர் கூட ஏழையாகிவிடலாம் என்கிறார். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபரை வறுமையின் வலையில் விழ வைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

Chanakya Niti: Things That Makes a Person Poor Soon in Tamil

ஒரு நபரின் செல்வத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் சில காரணிகளைப் பற்றி சாணக்கியர் சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பணத்தைச் சரியாகப் பயன்படுத்தவும் சில அறிவுரைகளைக் கூறியுள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பணத்தை பூட்டி வைக்கக்கூடாது

சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பணக்காரர் தனது பணத்தை எப்போதும் பூட்டி வைக்கக்கூடாது. மாறாக சரியான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும். பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு அதன் மதிப்பு நீண்ட காலத்திற்கு நீடிக்காது. பணத்தை எதுவும் செய்யாமல் அப்படியே வைத்திருப்பது எந்த பயனையும் வழங்காது. மறுபுறம், பணத்தை ஒரு நல்ல இடத்தில் முதலீடு செய்வது அதை வளர வைக்கிறது.

அநீதியின் பாதையில் செல்லக்கூடாது

சாணக்கியரின் கூற்றுப்படி, அநீதியின் பாதையைப் பின்பற்றும் நபரிடம் பணம் ஒருபோதும் தங்காது. தப்பான வழியில் சம்பாதிப்பவர்கள் அதிக பணம் பெற ஆரம்பித்தால், அவர்கள் அழிவு நிச்சயம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் பணம் ஒருபோதும் அவர்களிடம் நிலைத்திருக்காது.

சிக்கனமான தானம் செய்ய வேண்டும்

தானம் செய்வது மற்றவர்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் நல்ல விஷயமாகும். ஆனால் சாணக்கியர் ஒரு மனிதன் தன் வருமானத்திற்கு ஏற்ப மட்டுமே தர்மம் செய்ய வேண்டும் என்கிறார்.

உங்கள் வருமானத்திற்கு அதிகமாக தானம் செய்வது என்பது உங்களை ஏழையாக்கும். எனவே எப்போதும் உங்கள் வருமானத்தை மனதில் வைத்து மட்டுமே செலவு செய்யுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தைச் சேமித்து, அதற்கேற்றாற்போல உதவுங்கள்.

சோம்பேறித்தனம்

உங்கள் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் சோம்பேறித்தனம் உங்களை ஆக்கிரமிக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் எவ்வளவு பணம் இருந்தாலும் உழைக்காமல் அதனை செலவழித்தால் விரைவில் வறுமை உங்களை சூழ்ந்துவிடும்.

ஆடம்பரமாக செலவு செய்யக்கூடாது

உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது போதாது என்று சாணக்கியர் கூறுகிறார். அதிக பணம் சம்பாதிப்பது உங்களை ஒருபோதும் பணக்காரர்களாக மாற்றாது. தேவையற்ற விஷயங்களுக்கு ஆடம்பரமாக செலவு செய்வது என்பது உங்களை விரைவில் ஏழையாக்கிவிடும், பணத்தைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் செல்வத்தின் முக்கியத்துவமும் குறைந்துவிடும் என்கிறார் சாணக்கியர்.

தற்பெருமை

சாணக்கியர், ஒருவர் தனது பணத்தைப் பற்றி தற்பெருமை கொள்ளக் கூடாது என்றும், எப்போதும் பணிவுடன் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். பணம் வரும்போது அகங்காரத்தை உங்கள் மனதில் நுழைய அனுமதிக்காதீர்கள். தற்பெருமையும், ஈகோவும் உங்கள் புத்தியைக் கெடுக்கிறது. இதன் காரணமாக ஒருவரின் செல்வம் விரைவில் அழிந்து விடுகிறது.

Story first published: Friday, July 14, 2023, 7:00 [IST]
Desktop Bottom Promotion