Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி கணவன்-மனைவி இடையே பிரிவு ஏற்பட இந்த 5 விஷயங்கள்தான் காரணமாக இருக்குமாம்..உடனே மாத்திக்கோங்க!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த புத்திசாலி மற்றும் திறமையான அரசியல்வாதியாவார். தனது சாணக்கிய நீதி மூலம், ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வழிகளை சாணக்கியர் பகிர்ந்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை, வேலை, வணிகம், உறவுகள், நட்பு மற்றும் எதிரிகள் போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்த தனது கண்ணோட்டத்தை சாணக்கிய நீதியில் பகிர்ந்துள்ளார்.
சாணக்கியரின் கொள்கைகளை பின்பற்றுவது சற்று கடினமாகத் தோன்றலாம், ஆனால் அதை பின்பற்றினால் வாழ்க்கையில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன் மனைவிக்கு இடையிலான உறவைப் பற்றி ஆச்சார்ய சாணக்கியர் சில விஷயங்களைச் சொல்லியுள்ளார்.

இந்த விஷயங்களை பின்பற்றினால் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். அதன்படி தம்பதிகள் தங்கள் உறவில் சில விஷயங்களை பின்பற்றுவது அவர்களின் திருமணத்தை அழித்துவிடும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கோபம்
கோபம் பொதுவாகவே அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும் குணம் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. இது கணவன் மனைவி இடையேயான உறவிலும் தீங்கு விளைவிக்கும். ஒரு மனைவி அல்லது கணவர் கோபமாக இருக்கும்போது, அவர்களால் எது நல்லது எது கெட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறிய பிரச்சினைகள் கூட உங்கள் திருமண வாழ்க்கையில் பெரிய பிரச்சனையாக மாறி உறவை முறிக்க வழிவகுக்கும்.
பரஸ்பர மரியாதை இல்லாமல் போவது
திருமண உறவு மட்டுமின்றி அனைத்து உறவுகளிலுமே பரஸ்பர மரியாதை என்பது மிகவும் அவசியமானதாகும். சாணக்கிய நீதியின் படி, ஒருவருக்கொருவர் மரியாதை இல்லாமல் கணவன் மனைவி இடையேயான உறவு முழுமையடையாது. நல்ல உறவைப் பேணுவதற்கு தம்பதிகள் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் திருமண வாழ்க்கை விரைவில் பிரிந்துவிடும்.
பேசிக்கொள்ளாமல் இருப்பது
கணவன் மனைவி இருவரும் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு, அவர்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ வேண்டும். நல்ல உறவைப் பேணுவதற்கு தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளும் முக்கியம். உங்கள் உறவில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக ஒருவருக்கொருவர் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ளாமல் உங்கள் மனதில் எதையாவது மறைத்து வைத்திருந்தால் தவறான புரிதல்கள் அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் பேசவில்லை என்றால், அவர்கள் வாழ்க்கையிலும் கருத்து வேறுபாடுகள் வளரும். அதன் காரணமாக, அவர்களின் உறவு படிப்படியாக பலவீனமடையத் தொடங்கும்.
உண்மைகளை மறைப்பது
கணவன் மனைவி இடையேயான உறவு மிகவும் நுணுக்கமானது என்று கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து ஒருபோதும் உண்மையை மறைக்கக் கூடாது. குறிப்பாக பொய் சொல்லக்கூடாது. ஏனென்றால், நீங்கள் பொய் சொன்னதை உங்கள் துணைக்கு தெரிய வரும்போது, அவர்கள் உங்கள் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கி, உங்கள் உறவில் மனக்கசப்பு அதிகரிக்கும். எனவே, திருமண உறவில் உங்கள் துணையிடம் ஒருபோதும் பொய் சொல்லாதீர்கள்.
ஒத்துழைப்பு இல்லாமை
கணவனும் மனைவியும் அனைத்துப் பணிகளிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும். பெரும்பாலான ஆண்கள் வீட்டு வேலைகளை பெண்களிடம் மட்டுமே ஒப்படைக்கிறார்கள். இது முதலில் நன்றாகத் தோன்றலாம், ஆனால் பின்னர் அதுவே மோதலை ஏற்படுத்தலாம். திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம். இல்லெயெனில் அவர்களின் உறவு விரைவில் முறிந்து விடும்.



Click it and Unblock the Notifications
