Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
சாணக்கிய நீதி படி இந்த விஷயங்களை பாலோ பண்றவங்க நூறு வயசு வரை ஆரோக்கியமாக வாழ்வார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். வாழ்க்கை குறித்த பல்வேறு துறைகளில் அவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அவர் எழுதிய சாணக்கிய நீதி என்ற மனித வாழ்க்கை தொடர்பான முக்கியமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவரது சாணக்கிய நீதி மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய பயனுள்ள அறிவுரைகளை வழங்குகிறது.
தற்போதைய அவசர உலகில் ஆரோக்கியமாக இருப்பதே ஆடம்பரத் தேவையாக மாறிவிட்டது. ஆரோக்கியமாக இருக்க உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, தினமும் சமச்சீரான உணவை உண்ணுமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனுடன் மேலும் சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் ஆரோக்கியம் பற்றிய சில விஷயங்களை விவரித்துள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, ஆரோக்கியத்தை பராமரிக்க ஒருவர் தினமும் குறிப்பிட்ட விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் பால் குடிக்க வேண்டும்
மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் பால் குடிக்க வேண்டியது அவசியம் என்கிறார் சாணக்கியர். ஆரோக்கியமாக இருக்க எப்போதும் பால் குடிப்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பாலில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒரு வசனத்தில் ஆரோக்கியமாக இருக்க பால் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த வரிகளில் பால் குடிப்பதால் உடல் பலம் உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது. பால் தானியங்களை விட பத்து மடங்கு வலிமையானது. எனவே தினமும் பால் சாப்பிட வேண்டும் ஏன்னு சாணக்கியர் கூறுகிறார்.
நெய் சாப்பிட வேண்டும்
பழங்காலத்தில், மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வெண்ணெய் மற்றும் நெய்யை உட்கொண்டனர். வயிற்றுப் பிரச்சனைகளை குணப்படுத்த மருத்துவர்கள் இன்றும் நெய்யை பரிந்துரைக்கின்றனர். சாணக்கியரின் கூற்றுப்படி, ஆரோக்கியத்தை பராமரிக்க ஒருவர் தினமும் நெய் உட்கொள்ள வேண்டும். நெய் பாலை விட வலிமையானது. இருப்பினும், எப்போதும் சுத்தமான நெய்யை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
தானியங்களை சாப்பிட வேண்டும்
ஆரோக்கியமாக வாழ்வதற்கு தானியங்களை சாப்பிடுவது அவசியம் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். தானியங்களை உண்பதன் மூலம் மனிதன் ஆரோக்கியமாக இருக்க முடியும், மேலும் வலிமையானவராக மாற முடியும். பல்வேறு தானியங்களை சாப்பிடுவது உங்கள் செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது. எனவே அரிசி, கோதுமை, தினை, சோளம் போன்ற பல்வேறு வகையான தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்?
தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழியைப் பற்றி பலர் பரிந்துரைக்கிறார்கள். சிலர் இதனை பின்பற்றுகிறார்கள் மற்றவர்கள் தவிர்க்கிறார்கள். இது நம் ஆரோக்கியத்தின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உணவு ஜீரணமாகாத போது தண்ணீர் குடிப்பது மருந்து போன்றது.
உணவு செரித்த அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும். உணவுக்கு இடையில் மிகக் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது அல்லது குடிக்காமல் இருப்பது அமிர்தம் போன்றது. மாறாக, சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது விஷம் போன்றது என்கிறார் சாணக்கியர்.
அதிகப்படியான உடலுறவின் ஆபத்துகள்
ஆரோக்கியமான உடல் மற்றும் பளபளப்பான சருமத்திற்கு வாரம் ஒருமுறை முழு உடல் மசாஜ் செய்ய வேண்டும் என்கிறார் சாணக்கியர். இது துளைகளைத் திறந்து உள்ளே இருக்கும் அழுக்குகளை நீக்குகிறது. மசாஜ் செய்த பின் குளிக்காமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
இளைஞர்கள் அதிகப்படியான உடலுறவைத் தவிர்க்க வேண்டும் என்றும் சாணக்கியர் கூறுகிறார். ஒரு இளைஞன் எப்போதும் உடலுறவு பற்றியே நினைக்கும் போது அவரால் தன் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள முடியாது. இந்த விஷயங்கள் அவரை வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கிறது என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
பேராசை கூடாது
நாம் உண்ணும் உணவு நமது ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் அதேவேளையில் நமது நடத்தையும் அதற்கேற்ப மாறும் என்று சாணக்கியர் கூறுகிறார். சாத்வீக உணவை உட்கொள்வது உங்கள் எண்ணங்களை தூய்மைப்படுத்தும்.
தாமச உணவை உண்பதால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார். பேராசை ஒரு கொடிய நோய் போன்றது என்று சாணக்கியர் கூறுகிறார். பேராசை கொண்ட ஒருவரின் மனநிலை படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகிறது. எனவே மனஆரோக்கியத்தை பராமரிக்க பேராசையை கைவிட வேண்டும் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications
