Latest Updates
-
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா?
சாணக்கிய நீதி படி இந்த விஷயங்களை பின்பற்றும் தம்பதிகளின் திருமண வாழ்க்கை அமோகமாக இருக்குமாம்...!
Chanakya Niti: சாணக்கியரின் அறிவுரைகள் வாழ்க்கையின் கண்ணாடி என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் சாணக்கியரின் வார்த்தைகளை பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார் மற்றும் அனைத்து உறவுகளையும் நல்ல முறையில் பராமரிக்கிறார்.
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் விளக்கியுள்ளார். கணவன் மனைவி உறவைப் பற்றியும் சாணக்கிய நீதி கூறுகிறது. கணவன்-மனைவி இடையேயான உறவு ஒரு பிறவிக்கு மட்டுமல்ல, ஏழு பிறவிகளுக்கும் நீடிக்கும் அளவுக்கு புனிதமானது என்று கூறப்படுகிறது.

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பூர்த்தி செய்பவர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். இருவரும் தேரின் இரு சக்கரங்கள் போன்றவர்கள். ஒரு சக்கரம் வேலை செய்யாமல் போனால், இன்னொரு சக்கரத்தை வைத்து நகர முடியாது. அதேபோல, கணவனோ அல்லது மனைவியோ தாம்பத்தியத்தில் பிரச்சனைகளை உண்டாக்கினால் குடும்பம் சிதையத் தொடங்குகிறது. ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியும் அமைதியும் கணவன்-மனைவி இடையேயான புரிதல் மற்றும் நல்லுறவில்தான் இருப்பதாக சாணக்கியர் கூறுகிறார்.
கணவன்-மனைவி உறவு சுமூகமாக இருக்க வேண்டும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளாத மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாத வீட்டில் லட்சுமி தேவி வசிக்க மாட்டார். எனவே, ஒவ்வொரு கணவனும் மனைவியும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு சாணக்கியர் கூறியுள்ள இந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்
கணவன் மனைவி உறவில் இருவரும் சமமானவர்கள். வயது வித்தியாசம் மட்டுமின்றி, திருமண உறவில் யாரும் சிறியவர்களும் அல்ல அல்லது பெரியவர்களும் அல்ல. கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். ஏனெனில் தம்பதிகளுக்கு இடையே உள்ள மரியாதைதான் அந்த உறவை அழகானதாக மாற்றும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் உறவும் வலுப்பெறும்.
பொறுமை
சாணக்கியரின் கூற்றுப்படி, வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு கணவன்-மனைவி இடையே பொறுமை மிகவும் முக்கியமானது. வாழ்க்கையில் என்ன நடந்தாலும், கெட்ட நேரத்தை இருவரும் பொறுமையுடன் எதிர்கொண்டு முன்னேற வேண்டும். பாதகமான சூழ்நிலைகளில் கட்டுப்பாடில்லாமல் செல்லும் கணவன்-மனைவி இடையேயான உறவு விரைவில் சீர்குலைந்துவிடும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
ஈகோ இருக்கக்கூடாது
திருமண உறவில் தம்பதிகளிடையே ஈகோ இருக்கக்கூடாது. கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். உங்கள் உறவில் ஈகோ அல்லது தற்பெருமை போன்ற உணர்வுகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. தம்பதிகளிடையே ஈகோ வளரத் தொடங்கும் போது, உறவில் விரிசல் ஏற்படத் தொடர்கிறது.
தனிப்பட்ட ரகசியங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது
கணவன் மனைவிக்கிடையே பலவிதமான விஷயங்கள் நடக்கும். ஆனால் உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. வலுவான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு, கணவனும் மனைவியும் தங்கள் தனிப்பட்ட விஷயங்களை மூன்றாவது நபருடன் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். எப்போது ஒரு உறவில் மூன்றாவது நபர் உள்ளே வருகிறார்களோ, அப்போதே அந்த திருமண உறவு பலவீனமடையத் தொடங்குகிறது. இது தொடரும் போது விரைவில் அந்த திருமணம் விரைவில் முறிந்து விடும்.



Click it and Unblock the Notifications
