Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 4 மனிதர்கள் உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துவார்களாம்... இவங்ககிட்டேயே போகாதீங்க...!
Chanakya Niti: கௌடில்யர் என்றும் அழைக்கப்படும் சாணக்கியர் ஒரு பண்டைய இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். வாழ்க்கை மற்றும் வெற்றி பற்றிய அவரது மதிப்புமிக்க கொள்கைகள், வளமான வாழ்க்கை வாழ்வதற்கான நடைமுறை வழிகாட்டுதலை வழங்கும் அறிவுரைகளின் தொகுப்பான சாணக்கிய நீதியில் தொகுக்கப்பட்டுள்ளன.
சாணக்கியரின் அறிவுரைகளில் முக்கியமானது, உங்கள் நல்வாழ்வை அச்சுறுத்தும் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது பற்றியதாகும். சாணக்கிய நீதியில் மூன்று விஷயங்களைப் பற்றி சாணக்கியர் எச்சரிக்கிறார். இந்த விஷயங்களிடம் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் இது உங்கள் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.

சாணக்கியர் எச்சரித்துள்ள இந்த விஷயங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம், ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்த்து, வெற்றிகரமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழலாம். ஒருவேளை நீங்கள் இவர்களுடனான பழக்கத்தை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் உங்கள் வாழ்க்கையில் பல தோல்விகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாக நேரிடும். இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நெருங்கவே கூட நபர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.
நீர் மற்றும் நெருப்பு
சாணக்கியர் நெருப்பையும், தண்ணீரையும் கவனக்குறைவாக கையாளக் கூடாது என்று எச்சரிக்கிறார், ஏனெனில் அவை சரியாக கையாளப்படாவிட்டால் அவை உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். நெருப்பும் நீரும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத கூறுகள். ஆனால் அவை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் கட்டுப்பாடற்ற சக்திகளாக எளிதில் மாறக்கூடும்.
எனவே அவற்றை சிக்கனமாகவும் கவனமாகவும் பயன்படுத்த வேண்டுமென்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். உங்கள் திறமைக்கு ஏற்ப நெருப்புடனும் தண்ணீருடனும் விளையாட வேண்டும், இல்லையெனில் அது கடுமையான காயம் அல்லது மரணத்திற்குக் கூட வழிவகுக்கும்.
ஆபத்தான விலங்குகள்
சிங்கம், கரடி மற்றும் புலி போன்ற ஆபத்தான விலங்குகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். ஏனெனில் அவற்றின் சுபாவம் ஆக்ரோஷமானது மற்றும் ஆபத்தானது, அவை ஒரு உங்களிடம் நட்பாக பழகினாலும், அவை கோபமாகவோ அல்லது பசியாகவோ இருக்கும்போது நம்மைத் தாக்கத் தொடங்கலாம். எனவே இந்த விலங்குகளுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பது மற்றும் அவற்றிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருப்பது நல்லது.
ஆபத்தான நண்பர்கள்
கெட்ட சகவாசம் மற்றும் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பவர்களிடமிருந்து விலகி இருக்குமாறு சாணக்கியர் எச்சரிக்கிறார். மோசமான நண்பர்களுடன் பழகுவது உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிவிடும். மேலும், ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக பழக வேண்டும். ஏனென்றால் கோபத்தில் எந்த நேரத்திலும் அவர்கள் உங்களைத் தாக்கி உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
சோம்பேறிகள்
சோம்பேறிகளுடன் நெருக்கமாக பழகுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் சோம்பேறிகள் எந்த வேலையையும் சரியாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைவது என்பது மிகவும் கடினமாகும். அவர்களுடன் நீங்கள் பழகும் போது அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களையும் அவர்களைப் போல மாற்றுவார்கள். இதனால் நீங்கள் வாழ்க்கையில் இலக்கை விட்டு விலகிச்செல்ல அதிக வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications

