Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்களில் இருந்து விலகி இருப்பவர்கள் வாழ்க்கையில் உச்சத்தை அடைவார்களாம்...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் தவிர்க்க முடியாத மேதைகளில் ஒருவர் சாணக்கியர். சிறந்த இராஜதந்திரியான சாணக்கியர் தன்னுடைய சாணக்கிய நீதி மூலம் வாழ்க்கையில் வெற்றிக்கான பல வழிகளைக் கூறியுள்ளார். இன்பமும், துன்பமும் வாழ்வின் அங்கம். துக்கம் இருந்தால் மகிழ்ச்சியும் இருக்கும்.
மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பற்றிய தனது எண்ணங்களை சாணக்கியர் விரிவாகப் பகிர்ந்துள்ளார், ஆனால் சில துன்பங்கள் ஒரு நபரை வெறுமையாக்கி அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் வாழ செய்கிறது.

சாணக்கிய நீதி ஒருவரை வாழ்க்கையில் இலக்கை அடைய தூண்டுகிறது. இன்றும் மக்கள் சாணக்கிய நீதியை படிக்கும் காரணம் இதுதான். ஆச்சார்யா சாணக்யாவின் கூற்றுப்படி, ஒரு நபர் வாழ்க்கையில் வெற்றியை அடைய விரும்பினால், இந்த விஷயங்களை ஒருபோதும் மறக்கக்கூடாது.
கடினமாக உழைத்து முன்னேற வேண்டும்
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, நீங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைய விரும்பினால், நீங்கள் கடின உழைப்புக்கு ஒருபோதும் பயப்படக்கூடாது. கடின உழைப்புதான் அனைத்து வெற்றிக்கும் அடிப்படை என்று சாணக்கியர் கூறுகிறார்.
கடினமாக உழைப்பதைத் தவிர்ப்பவர்களோ அல்லது அதை விட்டு ஓடுபவர்களோ, அவர்களுக்கு வெற்றியின் மகிழ்ச்சி எப்போதும் கிடைக்காது. அதனால் தான் வெற்றி பெற வேண்டும் என்றால் கடின உழைப்பின் பாதையில் செல்ல வேண்டும்.
வெற்றியின் ரகசியம் அறிவில் மறைந்துள்ளது
அறிவு இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை என்கிறார் சாணக்கியர். தங்கள் இலக்கை அடைய தொடர்ந்து அறிவைப் பெறத் தயாராக இருப்பவர்கள் வாழ்க்கையில் நிச்சயமாக வெற்றியைப் பெறுவார்கள். அதனால்தான் அறிவைப் பெற எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அறிவு நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் பயன்படுத்த வேண்டும்.
தீமைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்
சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி தீமைகள் எல்லா வகையிலும் வெற்றிக்குத் தடையாக இருக்கிறது என்று சாணக்கியர் கூறுகிறார். தீமையான செயல்கள் ஒரு நபரின் திறமையை அழிக்கின்றன. அப்படிப்பட்டவர்கள் திறமையானவராக இருந்தாலும் அவர்களால் தங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. தங்களின் குறைகளை சரியான நேரத்தில் சரிசெய்யாதவர்கள் பிற்காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தக் கூடாது
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் வெற்றிக்காகப் போராட வேண்டியிருக்கும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அத்தகையவர்களுக்கு எப்போதும் வெற்றி மற்றும் மரியாதைக் கிடைக்காது. ஒருவர் எப்போதும் பணிவாக இருக்க வேண்டும்.
ஒருபோதும் அதிகாரத்தின் காரணமாக தவறான செயல்களைச் செய்யக்கூடாது. இதை செய்பவர்கள் மீது லட்சுமி தேவிக்கு கோபம் வருகிறது. எனவே அதிகாரத்தைப் பற்றி எப்போதும் தற்பெருமை கொள்ளக் கூடாது.



Click it and Unblock the Notifications
