Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சாணக்கிய நீதி படி உங்க மனைவிகிட்ட இந்த அறிகுறி இருந்தா உங்களால் அவங்க திருப்தியா இல்லனு அர்த்தமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் கிமு 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் இராஜதந்திரி ஆவார். உலகில் உள்ள அனைத்து விஷயங்களிலும் அவருக்கு ஆழ்ந்த புரிதல் இருந்தது. சந்திரகுப்த மௌரியர் சாணக்கியனின் தந்திரத்தால் பேரரசனாக்கப்பட்டார்.
சாணக்கியரின் கொள்கைகள் இன்றும் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. இது கடினமாகத் தோன்றினாலும், சாணக்கியரின் கொள்கைகளை ஒருவர் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆச்சார்ய சாணக்கியரின் போதனைகள் மிகவும் முக்கியம். பெண்கள் அதிருப்தி அடையும் போது செய்யும் சில விஷயங்களைப் பற்றி சாணக்யர் கூறுகிறார். இந்த அறிகுறிகளை புரிந்து கொண்டால் எந்த கணவனும் தன் மனைவியை திருப்திப்படுத்த முடியும். மனைவியின் அதிருப்தியை நீக்க, சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த விஷயங்களைக் கணவர்கள் கவனிக்க வேண்டும்.
பேச்சை குறைத்துக் கொள்வது
திருமண உறவில் அதிருப்தி அதிகரிக்கும் போது மனைவிகள் பெரும்பாலும் கணவனிடம் பேசுவதை நிறுத்திவிடுவார்கள். குறைவாக பேசுவது மனைவிகளிடையே அதிருப்தியைக் குறிக்கிறது. இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டவுடன், உங்கள் மனைவியுடன் பேசவும், அவர் ஏன் கவலைப்படுகிறார் என்பதைக் கண்டறியவும். இவ்வாறு செய்வதன் மூலம் மனைவி சண்டைக்கான காரணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வார். பேச்சின் மூலம் விஷயங்களை பழையபடியே திரும்பச் செய்ய முடியும்.
சிறிய விஷ்யங்களுக்கு கூட கோபப்படுவது
கணவன் மனைவிக்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு மனைவி தன் கணவர் அதிருப்தி அடைய விரும்புவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனைவி உங்களிடம் கோபப்பட ஆரம்பித்தால், அதாவது சிறிய விஷயங்களுக்குக் கூட அவர் சண்டையிட்டு கோபப்பட்டர், அவர் உங்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதை மனதில் வைத்து, உங்கள் அடுத்த கட்டம் உங்கள் மனைவியை மகிழ்விப்பதாக இருக்க வேண்டும்.
உங்களைப் புறக்கணிப்பது
மனைவிகள் தங்கள் கணவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதாக கூறப்படுகிறது. உங்கள் மனைவி திடீரென்று உங்களிடமிருந்து விலகிச் சென்றாலோ அல்லது அவர் தன்னைப் பற்றி மட்டும் சிந்தித்து, உங்களைக் கவனித்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், அவருக்கு உங்கள் மீது அதிருப்தி இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் பிரச்னையை புரிந்து கொண்டு தீர்வு காண வேண்டும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் மனைவி திருப்தி அடைவதோடு, முன்பு போலவே மீண்டும் உங்களை நேசிக்கத் தொடங்குவார்.
அதிர்ஷ்டமான மனைவி
ஒரு பெண்னுக்கு பணத்தை சேமிக்கத் தெரிந்தால், அவர் அதிகமாகச் செலவு செய்ய மாட்டாள் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் தனிப்பட்ட சேமிப்பு மூலம் பணம் குவிக்கிறார்கள். அவர்கள் கடினமான காலங்களில் குடும்பத்திற்கு உதவுகிறார்கள். அத்தகைய பெண்கள் தங்கள் கணவருக்கு நிதி நெருக்கடியில் உதவலாம். இப்படிப்பட்ட மனைவியை அடையும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்கிறார் சாணக்கியர்.
மென்மையான பேச்சு
பெண் நடத்தையில் மென்மையாக இருந்தால் இனிமையாகப் பேசுவார். அப்படிப்பட்ட மனைவியைப் பெறும் கணவன் அதிர்ஷ்டசாலி என்கிறார் சாணக்கியர். அப்படிப்பட்ட மனைவியோ அல்லது பெண்ணோ தங்கள் குடும்பத்துடன் நல்லுறவு வைத்து குடும்ப செழிப்பை அதிகரிக்கச் செய்கிறார்கள். மனைவி எப்போதும் மென்மையாக பேச வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
