Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சாணக்கிய நீதி படி உங்களிடம் இந்த 5 குணங்கள் இருந்தால் நீங்க எதிர்காலத்தில் சிறந்த லீடராக வருவீர்களாம்...!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியரின் கொள்கைகள் பின்பற்ற மிகவும் கடினமானவை, ஆனால் அவற்றைப் பின்பற்றுபவர் ஒருபோதும் வாழ்க்கையில் தோற்பதில்லை. நண்பன், எதிரி, கணவன் மனைவி, வேலை, மாணவர்களின் வெற்றி போன்ற பல விஷயங்களைப் பற்றி சாணக்கியர் த்னது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.
சிலர் தங்கள் குணங்களால் அனைவரின் மனதையும் வெல்வார்கள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். அவர்கள் சமுதாயத்தில் மரியாதை பெறுவது மட்டுமல்ல, நல்ல தலைவராகவும் அறியப்படுகிறார்கள்.

சாணக்கியர் சிறந்த தலைவரின் குணங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி ஒரு சிறந்த தலைவரின் அடையாளம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்
ஒருவர் தன் குணங்களால் மட்டுமே உயர்ந்தவராகவும், மரியாதைக்குரியவர்களாகவும் மாறுகிறார்கள். தன் தவறுகளிலிருந்து முதலில் கற்றுக்கொள்பவரை யாராலும் வெல்ல முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகையவர்கள் தங்கள் தவறுகளை 100 முறை பரிசீலிப்பார்கள்.
அவர்கள் தவறு ஏன் நடந்தது, எப்படி நடந்தது, எதிர்காலத்தில் இது நடக்காமல் இருக்க ஒரு வழியை தயார் செய்கிறார்கள். தன் தவறுகளைப் பற்றி கவனமாக சிந்திப்பவர், மற்றவர்களின் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளவும் வெட்கப்படுவதில்லை.
தனது இலக்கை அடைய, மற்றவர்கள் ஏற்கனவே சென்று தோற்ற பாதையில் அவர்கள் ஒருபோதும் செல்ல மாட்டார்கள். புத்தியின் பலத்தில் ஒரு புதிய முறையைக் கடைப்பிடித்து இலக்கை அடைகிறார்கள். ஒருவரின் இந்த குணம் அவரை நல்ல தலைவனாக மாற்ற உதவுகிறது.
தைரியமாக முடிவெடுக்கும் திறன்
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தனது இலக்கை அடைகிறார், ஆனால் அச்சமின்றி இருப்பவர்களால் மட்டுமே உச்சத்தைத் தொட முடியும். வெகுசிலரே முடியாததை சாத்தியமாக்கும் திறமை உள்ளவர்கள், அப்படிப்பட்டவர்கள் மிக இளம் வயதிலேயே நல்ல தலைவர்களாக உருவெடுக்கிறார்கள்.
துணிச்சல் மிக்கவர் துன்பத்திலும் பொறுமையை இழப்பதில்லை. ஒவ்வொரு சவாலுக்கும் தயாராக உள்ளளார்கள், அத்தகையவர்களின் எதிரிகள் கூட அவர்களின் ரசிகர்களாக மாறுகிறார்கள்.
நல்ல வேலையாட்களை அடையாளம் காண வேண்டும்
சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு வெகுமதி அளிப்பது அவர்களைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்யத் தூண்டுகிறது என்று சாணக்கியர் நம்பினார். மக்கள் தங்கள் வேலையின் விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவித்து வெகுமதி அளிக்க வேண்டும். ஒழுங்காக வேலை செய்யாதவர்களை வெளியேற்ற வேண்டும். ஒரு நல்ல தலைவைர் சரியாக வேலை செய்பவர்களை அடையாளம் காண வேணிடியது அவசியம்.
எளிதில் அணுகக்கூடியவராக இருக்க வேண்டும்
ஒரு அரசனை அவரது அமைச்சர்களும் பிரபுக்களும் சூழ்ந்து கொள்வது வழக்கமல்ல. இருப்பினும், அவர் தனது குடிமக்களுக்குச் செவிசாய்க்கவில்லை மற்றும் அணுக முடியாதவராக இருந்தால், அது அவரது இராஜ்ஜியத்திற்கு மட்டுமின்றி, அவருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
இன்றைய கார்ப்பரேட் உலகில் தலைவர்கள் தங்கள் கீழ் வேலை செய்பவர்கள் தங்கள் பேச்சைக் கேட்பதில்லை என்பது பொதுவான புகாராக இருக்கிறது. அவர்கள் உயர்ந்த அல்லது சமமான அந்தஸ்துள்ளவர்களின் பேச்சை மட்டுமே கேட்கிறார்கள்.
நல்ல தலைவர்கள் தங்கள் பணியாளர்களின் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் வேறு எவரையும் விட நன்றாகப் புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும்.
குழுவாக செயல்படும் குணம்
கர்மா ஒரு நபரின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. நீங்கள் உங்கள் வேலையில் நேர்மையாக இல்லாவிட்டால், அலட்சியம் காட்டினால், நாளை உங்கள் இடத்தை வேறு ஒருவர் நிரப்புவார். ஒரு நல்ல தலைவர் தனது இலக்கை அடைய தனது அணியை முழுமையாக சார்ந்து இருக்கமாட்டார், ஆனால் தனது சக ஊழியர்களுடன் குழுவாக செயல்படுவார்.
ஒரு நம்பிக்கையான தலைவர் தனது அணியின் மன உறுதியை ஒருபோதும் வீழ்த்த மாட்டார். தங்கள் குழுவினரின் நல்ல முடிவுகளை பாராட்டுவது போல, மோசமான முடிவுகளுக்கு அவர் அணியைக் குறை கூறுவதில்லை.



Click it and Unblock the Notifications
