Latest Updates
-
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
சாணக்கிய நீதி படி நாயின் இந்த 5 குணங்கள் தங்கள் கணவரிடம் இருக்க வேண்டுமென்று பெண்கள் எதிர்பார்ப்பார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு திறமையான அரசியல்வாதி, மூலோபாயவாதி மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். மனித குலத்தின் நலனுக்காக பல அறிவுரைகளை சாணக்கியர் எழுதியுள்ளார். இவர் எழுதிய சாணக்கிய நீதி என்ற நூல்களில் மனித வாழ்க்கை தொடர்பான முக்கியமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவரது கொள்கைகள் மனித வாழ்வின் பல்வேறு அம்சங்களை நெருக்கமாகத் தொடுகின்றன. வாழ்க்கையில் வெற்றிபெற ஒரு மனிதன் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான விஷயங்களையும் சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியரின் கொள்கைகளின்படி, விலங்குகளின் குணங்களின் அடிப்படையில் மனித வாழ்க்கையில் சில விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.

இதில் சாணக்கியர் பெண்கள் காகத்தைப் போலவும், ஆண்கள் நாய்களைப் போலவும் இருக்க வேண்டும் என்கிறார். ஒரு நாயின் 5 குணங்கள் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவரது மனைவி எப்போதும் திருப்தியாக இருப்பார் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய குணங்களைக் கொண்ட ஒரு மனிதன் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் பராமரிக்கிறார்.
இத்தகைய குணங்கள் கொண்ட ஆண்களிடம் பெண்கள் அதிகளவில் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு மனிதன் நாயிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எச்சரிக்கை உணர்வு
ஆழ்ந்த உறக்கத்தில் கூட நாய்கள் எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கும். அதேபோல ஒரு ஆண் தன் குடும்பம், மனைவி மற்றும் கடமைகளில் கவனமாக இருக்க வேண்டும். எப்போதும் எதிரிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆண்கள் எவ்வளவு ஆழமாக தூங்கினாலும், தனது குடும்பத்தைப் பாதுகாக்க எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். எந்தவொரு நெருக்கடியிலும் தங்கள் அன்புக்குரியவர்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும். இந்த குணம் கொண்ட ஆணை மணக்கும் பெண் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்.
நேர்மை
மற்ற அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் நாய் அதன் நேர்மை மற்றும் விசுவாசத்திற்கு பெயர் பெற்ற உயிரினமாகும். அதேபோல், ஒரு மனிதன் எப்போதும் நேர்மை மற்றும் விசுவாசத்துடன் இருக்க வேண்டும்.
ஆனால் பெரும்பாலும் இந்த குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது, ஒவ்வொரு ஆணும் தன் மனைவியிடம் நூறு சதவீதம் நேர்மையாக இருக்க வேண்டும். அத்தகைய பெண் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். ஒரு மனைவி எப்பொழுதும் நாயின் விசுவாசத்தை தன் கணவனிடம் இருந்து எதிர்பார்ப்பார்.
தைரியம்
ஒரு நாய் ஒரு துணிச்சலான மற்றும் விசுவாசமான விலங்காகும். அது அதன் உரிமையாளரின் அனைத்து வார்த்தைக்கும் கீழ்ப்படிகிறது. அதேபோல ஒரு ஆண் தன் துணைக்காக எதையும் செய்ய தைரியமாக இருக்க வேண்டும்.
ஒரு நாய் ஒரு துணிச்சலான உயிரினம், தன் எஜமானுக்காக தன் உயிரைக் கூட தியாகம் செய்யும். அதே போல ஒரு ஆணும் தைரியமாக இருக்க வேண்டும். ஆபத்துக் காலங்களில் தன் உயிரைப் பணயம் வைக்கும் ஆண்களைப் பெண்கள் எப்போதும் விரும்புவார்கள்.
இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
ஒரு ஆண் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி உழைத்த சம்பாதித்த பணத்தில் உங்கள் குடும்பத்தையும் சந்தோஷப்படுத்தலாம். இதைச் செய்பவர்கள் சிறந்தவராகக் கருதப்படுகிறார்கள்.
உதாரணமாக, நீங்கள் ஒரு நாய்க்கு எந்த உணவை அளித்தாலும், அவை அதில் திருப்தி அடைகின்றன. ஒரு நாய் தனக்குக் கிடைக்கும் உணவில் திருப்தி அடைவது போல, ஒரு மனிதன் தனக்குக் கிடைக்கும் பணத்திலும், அன்பிலும் திருப்தி அடைய வேண்டும்.
திருப்தி
ஒரு ஆண் தன் மனைவியை எப்போதும் திருப்திப்படுத்த வேண்டும். உங்கள் மனைவியின் அனைத்து பகுத்தறிவு விஷயங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் அவரை உணர்ச்சிரீதியாக திருப்திப்படுத்த வேண்டும். இதைச் செய்யும் ஒரு ஆண் எப்போதும் தன் பெண்ணை நேசிப்பான், அவர்களின் உறவு நீண்ட காலம் நீடிக்கும். பெண்கள் எப்போதும் அத்தகைய மனிதனை விரும்புகிறார்கள்.



Click it and Unblock the Notifications
