Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
சாணக்கிய நீதி படி சிறந்த கணவரிடம் இருக்க வேண்டிய 5 குணங்கள் இதுதான்... உங்ககிட்ட இதுல எத்தனை இருக்கு?
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் தலைசிறந்த இராஜதந்திரியாகக் கருதப்படுகிறார். சாணக்கியரின் நீதி சாஸ்திரம் ஒரு மனித வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்தையும் கையாள்கிறது. தொழில், பணம், திருமணம், காதல் மற்றும் குடும்பம் அனைத்தும் சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நீதி சாஸ்திரத்தின் படி, சாணக்கியர் ஒவ்வொரு விஷயத்திற்கும் என்ன விளக்கம் கொடுக்கிறார் என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
சாணக்கியர் காதலைப் பற்றியும் பல விஷயங்களை தனது நீதி சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் தங்கள் கணவரிடம் பெரும்பாலும் ஆண்களிடம் எதிர்பார்க்கும் குணங்கள் இதில் அடங்கும். அவை என்ன என்பதை உணர்ந்து நீங்கள் அதனை வளர்த்துக் கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெண்கள் ஆண்களிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அந்த குணங்கள் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வாழ்க்கையில் என்ன நெருக்கடி வந்தாலும் அவர்களை விட்டு செல்ல மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.

புத்திசாலிகள்
புத்திசாலிகளை யாருக்குத்தான் பிடிக்காது, குறிப்பாக பெண்கள் பெரும்பாலும் அறிவார்ந்த ஆண்களிடம் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறுவதும் இதுதான். அத்தகைய ஆண்கள் எந்த ஒரு சூழ்நிலையையும் மிகவும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்வார்கள். அவர்கள் எடுக்கும் முடிவு எப்போதும் பக்தகமில்லாததாக இருக்கும். அதனால்தான் பெண்கள் எப்போதும் இந்த குணம் கொண்ட ஆண்களை விரும்புகிறார்கள்.
பாதுகாப்பு
சாணக்கிய நீதியின் படி, பெண்கள் தங்களைக் கவனமாகப் பாதுகாக்கும் நபரை விரும்புகிறார்கள். அதுமட்டுமல்ல பாதுகாப்பும், அக்கறையும் கொடுக்கத் தயாராக இருக்கும் ஆண்களிடம் அவர்கள் தனி அன்பும், ஈர்ப்பும் கொள்கிறார்கள். இத்தகைய கவனத்துடன் தங்களைப் பாதுகாக்கும் ஆண்களிடம் பெண்கள் பெரும்பாலும் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள்.
பெற்றோருடன் பழகும் விதம்
உங்கள் பெற்றோருடன் நீங்கள் பழகும் விதத்தையும் பெண்கள் கவனிப்பார்கள். தங்கள் காதலன் தனது பெற்றோருக்கு கொடுக்கும் அதே அக்கறையையும் அன்பையும் தங்களுடையா பெற்றோருக்கும் கொடுத்தால், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதைத்தான் அனைத்து பெண்களும் தங்கள் கணவரிடம் எதிர்பார்க்கிறார்கள். இந்த குணம் கொண்ட ஆண்களின் திருமண வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சம உரிமை
சம உரிமை என்பது பெண்கள் தங்கள் துணையிடம் எதிர்பார்க்கும் முக்கிய குணங்களில் ஒன்றாகும். சாணக்கியர் இதைப்பற்றி தெளிவாக விளக்குகிறார். எந்தவொரு பெண்ணும் தனக்கு சம உரிமையும், தனது உணர்வுகளுக்கு முக்கியத்துவமும் அளிக்கும் துணையுடன் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டுமென்று விரும்புவார்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. மேலும், அவர்களுடன் தரமான நேரத்தை செலவிட அவர்கள் விரும்புகிறார்கள்.
கடின உழைப்பு
பெண்கள் கடினமாக உழைக்கும் ஆண்களை விரும்புகிறார்கள். ஏனெனில் அத்தகைய ஆண்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொண்டு, எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயரத்தை அடைகிறார்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அவர்கள் வாழ்க்கையில் வெற்றியை நிச்சயம் அடைந்து விடுவார்கள். அவர்களுடன் இருப்பது தங்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் நேசிக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
