Latest Updates
-
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
சாணக்கிய நீதி படி இந்த 6 பழக்கங்கள் உள்ளவர்கள் வாழ்க்கை முழுக்க வறுமையில்தான் இருப்பாங்களாம்... அதான் விதி...!
Chanakya Niti: சாணக்கிய நீதியில் மனிதர்களின் நலனுக்காகவும், வெற்றிக்காகவும் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள் வெற்றியின் உச்சத்தை அடையலாம். சாணக்கிய நீதி என்பது சாணக்கியரின் அறிவு மற்றும் அனுபவத்தின் தொகுப்பாகும். இது மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் பணம் இல்லாதவர்களுக்கு இந்த சமூகத்தில் உரிய மரியாதை கிடைப்பதில்லை.

வாழ்க்கையில் அனைவருமே பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் பணத்திற்காக கடுமையாக உழைக்கிறான். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் செல்வம் தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி சில பழக்கங்கள் உள்ளவர்கள் வாழ்க்கையில் எப்போதும் செல்வந்தராக முடியாது என்று சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். அவை என்னென்ன பழக்கங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சுத்தமில்லாத ஆடைகளை அணிபவர்கள்
சுத்தமில்லாத மற்றும் அழுக்கான ஆடைகளை அணிபவர்களின் வீட்டில் லட்சுமி தேவி தங்கமாட்டார் என்று சாணக்கியர் கூறுகிறார். எப்பொழுதும் அசுத்தமாக, தூய்மையை பராமரிக்காமல் வாழ்பவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதும் கிடைக்காது. இப்படிப்பட்டவர்களை சமுதாயத்தில் உள்ள மற்றவர்கள் விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் அனைத்து சூழ்நிலையிலும் அவர்கள் அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
பல் துலக்காமல் வெளியே செல்பவர்கள்
பற்களை சுத்தம் செய்யாதவர்கள் வாழ்க்கையில் வறுமையை சந்திப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்களை லட்சுமி தேவி திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. அதே சமயம், தொடர்ந்து பல் துலக்கி, பற்களை சுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு லட்சுமியின் அருள் எப்போதும் உண்டு என்கிறார் சாணக்கியர்.
அதிகமாக உண்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, தனக்குத் தேவையானதை விட அதிகமாக சாப்பிடுபவர் ஒருபோதும் பணக்காரராக முடியாது. மேலும், தேவைக்கு அதிகமாக உண்பவர் ஆரோக்கியமாத்தையும் இழக்கிறார். இதனால் ஏற்படும் துன்பங்களும் கஷ்டங்களும்தான் மனிதனை வறுமைக்கு இட்டுச் செல்கின்றன என்று சாணக்கியர் கூறுகிறார்.
பேச்சால் மற்றவர்களை துன்புறுத்துபவர்கள்
கசப்பான வார்த்தைகளைப் பேசுபவர்கள் ஒருபோதும் பணக்காரர்களாக முடியாது என்கிறார் சாணக்கியர். பேச்சால் பிறரை புண்படுத்தும் நபரின் அருகில் லட்சுமி தேவி நிற்க மாட்டார். அப்படிப்பட்டவர் அவர்களிடம் இருக்கும் லட்சுமி தேவியின் அருளையும் இழக்கிறார். அத்தகையவர்களுக்கு நண்பர்கள் இருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் நடத்தையாலும், கசப்பான வார்த்தைகளாலும் நிறைய எதிரிகளை உருவாக்குகிறார்கள்.
அதிகம் தூங்குபவர்கள்
அதிகம் தூங்குபவருக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்காது என்கிறார் சாணக்கியர். சாணக்கியரின் கூற்றுப்படி, சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை தூங்குபவருக்கு லட்சுமியின் அருள் நிலைக்காது. அதிக நேரம் தூங்குவது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
தவறான வழியில் சம்பாதிப்பவர்கள்
பணம் ஈட்டுவதற்காக நியாயமற்ற, தந்திரமான மற்றும் நேர்மையற்ற வழிகளைக் கடைப்பிடிப்பவர்கள் நீண்ட காலம் பணக்காரராக இருக்க முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகையவர்கள் விரைவில் தங்கள் பணத்தை இழக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications
