சாணக்கிய நீதி படி இந்த 4 தவறுகளை செய்றவங்க இறந்த பிறகு நரகத்துக்குதான் போவாங்களாம்...!

Chanakya Niti: உலகில் பெரும்பாலான மதங்கள் மறுபிறவி மீது நம்பிக்கைக் கொண்டிருக்கின்றன. எனவே ஒருவர் எப்போதும் தனது செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இறந்த பிறகும் துன்பப்பட வேண்டியிருக்கும். நல்ல செயல்களைச் செய்வதன் மூலம், ஒரு நபர் அடுத்த ஜென்மத்தில் நல்ல பலன்களை பெறலாம்.

ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் சில விஷயங்களை அறிவுறுத்துகிறார். மரணத்திற்குப் பிறகு ஒருவர் சொர்க்கத்திற்குச் செல்வதா அல்லது நரகத்திற்குச் செல்வதா என்பது ஒருவரின் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது. சாணக்கிய நீதியில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த செயல்களைச் செய்பவர்கள் மரணத்திற்கு பிறகு நரகத்தை அனுபவிக்க வேண்டும்.

Chanakya Niti People Who Commit These Mistakes Will Go to Hell in Tamil

பாவிகள்

சாணக்கியரின் கூற்றுப்படி, பாவ செயல்களை செய்பவர்கள் இறந்த பிறகு நரகத்திற்குச் செல்கிறார். உறவினர்களை வெறுப்பவர்களையும், பெரியவர்களை அவமதிப்பவர்களையும் சாணக்கியர் தீயவர்கள் என்று கூறுகிறார். கர்மவினையால் பெற்றோரைக் காயப்படுத்துபவர்கள் நரகம் செல்கிறார்கள். கெட்டவர்கள், தீய குணம் கொண்டவர்கள் மற்றும் பிறரை சித்திரவதை செய்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். பிறரைத் துன்புறுத்துபவர் இறந்ததற்கு பிறகு ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார். ஏதாவது ஒரு வடிவில் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

பெண்களை அவமதிப்பவர்கள்

சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, பெண்களை அவமரியாதை செய்பவர்கள், குழந்தைகளை தவறாக நடத்துபவர்கள், ஏழைகளை சுரண்டுபவர்கள் இறப்புக்குப் பிறகு நரகத்தை அனுபவிப்பார்கள். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்கள் மன்னிக்க முடியாத பாவிகள். இப்படிப்பட்ட பாவச் செயல்களுக்குப் பிரதிபலனாக அவர்கள் வாழும்போதும், மரணத்திற்குப் பின்னரும் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

அன்புக்குரியவர்களை காயப்படுத்துபவர்கள்

துன்மார்க்கன் எப்போதும் தன் வார்த்தைகளாலும், கெட்ட செயல்களாலும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் வலியை உண்டாக்குகிறார்கள். மனிதனின் இந்த தீமைகள் அவர்களை நரகத்திற்கு அனுப்புகிறது என்று சாணக்கியர் கூறுகிறார். தனக்குப் பிரியமானவர்களைத் துன்புறுத்துபவனுக்கு நரகத்தில் இடம் உண்டு. பொறாமை அவர்களை உள்ளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய நபர் ஒருபோதும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதில்லை என்றும் சாணக்கியர் கூறுகிறார்.

பேராசை கொண்டவர்கள்

சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, பேராசை கொண்ட ஒருவர் வாழும்போதே ஒருபோதும் யாராலும் நேசிக்கப்பட மாட்டார். பணம், சொத்து, மரியாதை பெறவும், தங்கள் சுயநலத்தை நிறைவேற்றவும் அவர்கள் பிறருக்குத் தீங்கு செய்வார்கள். தங்களின் நலனுக்காக அவர்கள் யாரையும் துன்புறுத்த தயங்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் இறந்த பிறகு நிச்சயம் நரகத்தை அனுபவிப்பார்கள் என்கிறார் சாணக்கியர்.

Story first published: Friday, September 13, 2024, 6:00 [IST]
Desktop Bottom Promotion