Latest Updates
-
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைபவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
September 2026 Career Horoscope: செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இந்தியாவில் பின்னோக்கி பாயும் ஒரேயொரு நதி எது தெரியுமா? இது பின்னோக்கி பாய காரணம் என்ன தெரியுமா? -
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்..
சாணக்கிய நீதி படி இந்த 3 விஷயங்களுக்கு மட்டும் எப்போதும் அதிகமாக ஆசைப்படக்கூடாது... இல்லனா ஆபத்துதான்!
Chanakya Niti: சாணக்கியர் ஒரு நபரின் வாழ்க்கையின் அனைத்து தருணங்களைப் பற்றியும் அறிந்திருந்தார். அதனால்தான் சாணக்கிய நீதி இன்றும் மிகவும் பிரபலமான புத்தகமாக இருக்கிறது. சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் எதையும் சாதிக்க முடியும் மற்றும் அவர்களின் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கலாம்.
சாணக்கிய நீதி என்பது சாணக்கியர் தன்னுடைய அனுபவங்களை புத்தகமாக தொகுத்ததாகும். அதை சரியாக பின்பற்றினால், நம் அன்றாட வாழ்வில் பயனுள்ள பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் வாழ்க்கையில் திருப்தி மற்றும் அதிருப்தியின் அவசியத்தைப் பற்றி பேசியுள்ளார். அதாவது, நாம் எதில் திருப்தி அடைய வேண்டும், எதில் அதிருப்தியாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி கூறியுள்ளார்.

உண்மைதான், வாழ்க்கையில் சில இடங்களில், நாம் அதிருப்தியுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், அவை நாம் வாழ்க்கையில் முன்னேறிச் செல்லவும், சிறப்பான பலன்களை அடையவும் நமக்கு அதிருப்தி தேவை. அதே நேரத்தில், வெற்றிகரமான மற்றும் இலட்சியமான வாழ்க்கையை நடத்த உதவும் பல விஷயங்களில் திருப்தி அடைவதும் முக்கியம். சாணக்கிய நீதியின்படி எந்தெந்த விஷயங்களில் நாம் அதிருப்தியுடன் இருக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அறிவு
கல்வி மற்றும் அறிவைப் பொறுத்தவரை ஒருவர் எப்போதும் அதிருப்தியுடன் இருக்க வேண்டும். நீங்கள் அறிவில் திருப்தி அடையவில்லை என்றால், நீங்கள் அதிக அறிவைப் பெற முயற்சிப்பீர்கள். எனவே உங்கள் திறமை மேலும் அதிகரிக்கும். கல்வியும் அறிவும் எதிர்காலத்தில் மரியாதையையும் செல்வத்தையும் பெற உதவும்.
தானம்
மற்றவர்களுக்கு கொடுப்பதில் நாம் ஒருபோதும் திருப்தி அடையக்கூடாது. ஏனெனில் கொடுப்பதன் மூலம் நாம் சமுதாயத்தில் நல்ல மனிதர் என்ற தகுதியை பெறுகிறோம், நமது இலட்சியங்களால் வாழ்க்கை மேம்படும். மக்களுக்கு நல்லது செய்வதற்கும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கும் நீங்கள் நல்ல வழியில் செல்வீர்கள்.
வழிபாடு
கடவுளின் நாமத்தை உச்சரித்து வழிபடுவதில் ஒருபோதும் திருப்தி அடையக்கூடாது. நீங்கள் கடவுளை எவ்வளவு அதிகமாக வழிபடுகிறீர்களோ, அவ்வளவு நன்மைகள் உங்களை வந்து சேரும். அதனால்தான் எத்தனை மந்திரங்களை உச்சரித்தாலும், கடவுளை வழிபட்டாலும் திருப்தி அடையக்கூடாது. மீண்டும் மீண்டும் வழிபட வேண்டும் என்றார் சாணக்கியர் கூறுகிறார். எந்தெந்த விஷயத்தில் திருப்தி அடைய வேண்டுமென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
மனைவி
மனைவி அழகாக இல்லாவிட்டாலும், ஒரு ஆண் தன் மனைவியுடன் திருப்தியாக இருக்க வேண்டும் என்றும், இன்னொரு பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்ளக்கூடாது என்றும் சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் கூறியுள்ளார். இல்லையெனில், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல சிக்கலுக்கு ஆளாவீர்கள். உங்கள் நேர்மையைப் பற்றிய கேள்விகளை எழுப்புவது உங்கள் கண்ணியத்தை சேதப்படுத்தும்.
உணவு
கிடைக்கும் உணவில் எப்போதும் திருப்தியாக இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி எந்த சூழ்நிலையிலும் உணவை மகிழ்ச்சியாக உண்ண வேண்டும். உணவை ஒருபோதும் அவமதிக்காதீர்கள், உங்கள் தட்டில் உணவை ஒருபோதும் மிச்சம் வைக்காதீர்கள். கடவுள் உங்களுக்கு போதிய உணவை வழங்கினால் உங்களை அதிர்ஷ்டசாலி என்று கருதுங்கள்.
பணம்
ஒரு நபர் தனது வருமானத்தில் எப்போதும் திருப்தியாக இருக்க வேண்டும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப உங்கள் வீட்டுச் செலவுகளை வைத்துக் கொள்வதும் முக்கியம். அதேசமயம் வாழ்க்கையில் முன்னேற முயற்சிகள் எடுக்க வேண்டும். பிறர் செல்வத்தில் பேராசை கொள்வதும் பொறாமை கொள்வதும் உங்கள் வாழ்க்கைக்கு நல்லதல்ல.



Click it and Unblock the Notifications


