Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்களுடன் தெரியாம கூட நண்பராகிராதீங்க... உங்க வாழ்க்கையே வீணாகிடும்...!
Chanakya Niti: சாணக்கியர் உலகின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் பொருளாதாரம், அரசியல் மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவராகக் கருதப்படுகிறார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அவர்கள் கூறிய அறிவுரைகள் இன்றும் சமுதாயத்திற்கு பயன்படுகின்றன. அவரது வார்த்தைகள் வாழ்க்கையில் வெற்றிக்காக போராட மக்களை ஊக்குவிக்கின்றன.

சாணக்கியரின் நீதிசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்கள் கடுமையாகத் தோன்றலாம். ஆனால் அவை மனிதனுக்கு வாழ்க்கையின் உண்மையை உணர்த்துகின்றன. ஒருவர் சாணக்கிய நீதியின் விஷயங்களை பின்பற்றினால், வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மேலும், ஒருவர் வெற்றிகரமான மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்த முடியும்.
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி குறிப்பிட்ட வகை மக்களிடம் இருந்து எப்போதும் விலகியிருக்க வேண்டும். இவர்களுடனான நட்பு உங்களை ஆபத்தில் தள்ளும்.
பாவம் செய்பவர்கள்
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் பாவிகளுடன் நட்பு கொள்ளக்கூடாது என்று விளக்குகிறார். அப்படிப்பட்ட ஒருவருடனான நட்பு எப்போது வேண்டுமானாலும் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். பாவம் செய்பவர் உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியைத் தரமாட்டார். அவர்களின் நட்பு உங்களை தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிவிடும்.
கெட்ட பழக்கம் உள்ளவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, தீயவர்களிடமிருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும். சாணக்கிய நீதியின் படி, கெட்ட பழக்கங்களால் சூழப்பட்ட ஒருவருடனான நட்பு உங்களுக்கு ஒருபோதும் பயனளிக்காது.
அத்தகையவர்களின் கெட்ட பழக்கங்கள் உங்கள் வாழ்க்கையையும் பாதிக்கும். ஒரு கெட்ட பழக்கம் உள்ள நபர் உங்களுக்கு எந்த நேரத்திலும் கெட்ட காரியங்களைச் செய்யலாம் மற்றும் உங்களுக்கு எந்த நேரத்திலும் தொந்தரவு செய்யலாம்.
மோசமான இடங்களில் வாழ்பவர்கள்
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் மோசமான இடத்தில் அதாவது தவறான இடத்தில் வாழும் ஒருவருடன் நட்பு கொள்ளக்கூடாது என்று கூறுகிறார். ஒரு மோசமான இடத்தில் வாழ்பவர் அந்த இடத்தின் தீமைகளிலிருந்து வெகுகாலம் விலகி இருக்க முடியாது.
அத்தகைய நபருடனான நட்பு உங்கள் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும். எனவே, நல்லவர்கள் மத்தியில் நல்ல இடத்தில் வாழ்பவர்களுடன் மட்டுமே நட்பு கொள்ளுங்கள்.
பெரியவர்களை மதிக்காதவர்கள்
தன் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளை மதிக்காத, பெரியவர்களை நன்றாக நடத்தாத ஒருவருடன் ஒருபோதும் நட்பு கொள்ளக்கூடாது என்று சாணக்கியர் நீதியில் கூறப்பட்டுள்ளது. பெற்றோரைக் கூட மதிக்க முடியாத ஒருவர் எப்படி இன்னொருவருடன் நட்பைப் பேண முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார். இது மிகவும் நியாயமான கேள்விதானே.
பேராசைக்காரர்கள்
சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, சுயநலவாதிகள் மற்றும் பேராசை கொண்டவர்களிடமிருந்து எப்போதும் தூரமாக இருக்க வேண்டும். அவர்கள் எப்போதும் தங்கள் நலனைப் பற்றியே சிந்திக்கிறார்கள்.
சுயநலக்காரன் தன் நலனுக்காக எதையும் செய்வார்கள், அத்தகையவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். தங்கள் நலனுக்காக யாரையும் ஏமாற்ற முயல்வார்கள். எனவே நீங்கள் பேராசை மற்றும் சுயநல நண்பர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
துரோகம் செய்யக்கூடியவர்கள்
முகத்திற்கு முன்னால் இனிமையாகப் பேசிவிட்டு முதுகுக்குப் பின்னால் உங்களுக்கு எதிராக செயல்படுபவர்களையும்ளிடம் ஒருபோதும் நட்பு கொள்ளாதீர்கள். அத்தகைய துணைநண்பர்கள் விஷம் நிறைந்த பாம்பு போன்றவர்கள்.
வெளியில் இனிமையாகவும் உள்ளத்தில் தீயவனாகவும் இருப்பவரை ஒருபோதும் நண்பராக வைத்துக்கொள்ளாதீர்கள். அத்தகைய நண்பர்ர்கள் உங்கள் தனிப்பட்ட மற்றும் சமூக நற்பெயரைக் கெடுப்பார்கள். அத்தகையவர்களை உங்கள் வாழ்க்கையிலிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
