Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
சாணக்கிய நீதி படி இந்த 5 நபர்களை உங்க வீட்டில் ஒருபோதும் தங்க அனுமதிக்காதீர்கள்... இல்லனா அவ்வளவுதான்...!
Chanakya Niti: மனிதர்களின் வாழ்க்கையிலேயே மிகவும் கடினமான ஒன்று எதுவென்றால் அது பிறருக்கு 'இல்லை' என்று சொல்வதுதான். நம்மை சுற்றி உள்ள அனைவரையும் நமக்கு பிடிக்குமென்று சொல்ல இயலாது, நமக்கு பிடிக்காதவர்களும் நமது சமூக வட்டத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
பிடித்தவர்களாக இருந்தாலும் அல்லது பிடிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களை உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார். இருப்பினும், சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் சிலவகை ஆட்களை ஒருபோதும் உங்கள் வீட்டில் தங்கவோ அல்லது உங்கள் வாழ்க்கையில் பங்கெடுக்கவோ அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

போலியானவர்கள்
உலகில் தங்கள் உண்மையான நிறத்தை மறைப்பவர்கள் பலர் உள்ளனர், அத்தகையவர்கள் மற்றவர்களின் முன் மிகவும் நேர்மையானவர்கள் மற்றும் அவர்களின் முதுகுக்குப் பின்னால் அவர்களைப் பற்றி மோசமாகப் பேசுகிறார்கள். சாணக்கியர் இப்படிப்பட்டவர்களை தங்கள் இல்லத்தில் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
சாணக்கியர் கூறுகையில், தங்கள் ஆளுமையில் இரு வேறு பக்கங்களைக் கொண்டவர்கள் அனைவரிலும் மிகவும் மோசமானவர்கள். அத்தகையவர்கள் உங்கள் முன் இனிமையாகப் பேசுவார்கள், உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களைப் பற்றிய வதந்திகளைப் பரப்புவார்கள். அப்படிப்பட்டவர்களை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கெட்ட காரியங்களை செய்பவர்கள்
வாழ்க்கையில் தீய செயல்களைச் செய்பவர்களுக்குப் பஞ்சமில்லை. இப்படிப்பட்டவர்கள் அடிக்கடி, உடல்ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துவதைத் தவிர, மக்களின் மனதிலும் விஷத்தைக் கலக்குகிறார்கள். அவர்கள் நாசீசிஸ்ட்களாகவும் மற்றும் ஆதிக்கவாதியாகவும் இருப்பார்கள். அத்தகையவர்களிடமிருந்து எப்போதும் விலகி இருங்கள்.
இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் எப்போதும் நம்பத்தகுந்தவர்கள் அல்ல. அவர்கள் மனிதர்களை முதுகில் குத்துவார்கள், முரட்டுத்தனமாகவும், தீமையை ஏற்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை ஒருவர் தன் வீட்டில் எப்போதும் அனுமதிக்கக்கூடாது.
தேவைக்காக மட்டும் நட்பாக இருப்பவர்கள்
"ஆபத்து காலத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்" என்பது நாம் நன்கு அறிந்த பழமொழி. ஆனால் இது உங்களின் நம்பிக்கைக்குரிய, உண்மையான நண்பர்களுக்கு மட்டுமே பொருந்தும். இருப்பினும், அதைத் தவிர, தேவை ஏற்படும் போது மட்டுமே உங்களை அழைக்கும் நபர்களை கவனிப்பதை நிறுத்துங்கள். அப்படிப்பட்டவர்களை ஒருபோதும் உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்காதீர்கள்.
உங்களை முட்டாளாக்குபவர்கள்
உங்களின் பொருட்களை பயன்படுத்திக் கொள்பவர்கள் அல்லது எப்போதும் உங்களை உதவிக்காக மட்டும் அழைக்கும் நபர்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் அவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்காதீர்கள்.
பிறரை காயப்படுத்துபவர்கள்
வேண்டுமென்றே மற்றவர்களை புண்படுத்தும் மற்றும் அதற்காக துளியும் வருத்தம் கொள்ளாத காட்டுமிராண்டிகள் சிலர் உள்ளனர். அத்தகையவர்கள், ஒருமுறை மன்னிக்கப்படலாம், ஆனால் அவர்கள் அதையே திரும்பத் திரும்பச்செய்துக் கொண்டிருந்தால், அது அவர்களின் மாற்ற முடியாத ஒரு ஆளுமைப் பண்பாகும், அத்தகைய நபர்களை உங்கள் இல்லத்தில் அனுமதிக்காமல் இருப்பதோடு அவர்களை விட்டு உடனடியாக விலகி விட வேண்டும்.
அத்தகையவர்கள் தற்செயலாக மற்றவர்களை காயப்படுத்த மாட்டார்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களை துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இது மட்டுமல்ல, அத்தகையவர்கள் மற்றவர்களின் உணர்வைப் பொருட்படுத்தாமல், அவர்கள் நினைப்பதைச் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து எப்போதும் விலகி இருப்பதுதான் நல்லது.



Click it and Unblock the Notifications

