Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்களுக்கு உதவி செய்வது உங்களுக்கு நீங்களே சூனியம் வைத்துக் கொள்வது போன்றதாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவில் ஒரு சிறந்த ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர் மற்றும் அரச ஆலோசகர் ஆவார். அவர் கௌடில்யர் அல்லது விஷ்ணுகுப்தர் என்று அழைக்கப்படுகிறார். வாழ்க்கையின் வெற்றிக்கான அவரது மந்திரங்கள் இன்றும் பலரால் பின்பற்றப்படுகின்றன. இந்த நவீன யுகத்திலும் சாணக்கியரின் சாணக்கிய நீதி மிகவும் புகழ் பெற்றதாக இருக்கிறது.
சாணக்கியரின் வார்த்தைகளை ஒருவர் பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றியை நிச்சயம் அடையலாம். சாணக்கியர் வாழ்க்கை குறித்த பல விஷயங்களில் தனது அறிவுரையை நமக்கு வழங்கியுள்ளார். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்ந்தால் தான் சமுதாயத்தில் உயர முடியும். இல்லையேல் நமது நிலை மோசமாகிவிடும்.

அதனால் துன்பப்படுபவர்களுக்கு உதவுவது நமது கடமை. ஆனால் நாம் யாருக்கு உதவுகிறோம் என்பதுதான் இங்கு முக்கியம். சாணக்கியரின் கூற்றுப்படி நாம் சில வகை மக்களுக்கு உதவக்கூடாது. அது நமது கண்ணியத்தையே அழித்துவிடும் என்கிறார் சாணக்கியர். சாணக்யநிதியின் படி நீங்கள் உதவக்கூடாதவர்கள் யார் என்று பார்ப்போம்.
பொய் சொல்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, நீங்கள் ஒருபோதும் பொய் கூறுபவருக்கு உதவக்கூடாது. அப்படிப்பட்டவர்கள் நம்மை நம்ப வைத்து ஏமாற்றலாம். பொய் சொல்லி உதவி வாங்குபவர்கள் பிற்காலத்தில் நமக்கு நிச்சயம் தீங்கு செய்வார்கள்.
போதைக்கு அடிமையானவர்கள்
போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் உதவக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்களுக்கு உதவுவதை தவிர்ப்பது மட்டுமின்றி முடிந்தவரை அவர்களிடமிருந்து விலகி இருப்பதே நம் வாழ்க்கைக்கு நல்லது.
பொறாமை கொண்டவர்கள்
தீய எண்ணங்கள் அல்லது எப்போதும் பொறாமை கொண்ட ஒருவருக்கு ஒருபோதும் உதவாதீர்கள். ஏனென்றால் அவர்கள் உங்களிடமிருந்து உதவி பெற்று உங்களைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம்.
பொறாமை கொண்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு எப்போதும் திருப்தி ஏற்படாது. அவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் இருப்பதைக் கண்டு பொறாமைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
அவர்கள் நமது மன அமைதியையும் குலைத்துவிடுவார்கள். ஒரு பொறாமை கொண்ட நபர் எப்போதும் தனது எதிரியை தோல்வியடையச் செய்து மகிழ்ச்சியானவராக இருக்க விரும்புகிறார். அப்படிப்பட்டவர்கள் உங்கள் கெட்ட நேரத்தை பயன்படுத்தி உங்களை ஏமாற்றலாம். இப்படிப்பட்டவர்களுக்கு உதவுவது முட்டாள்தனம் என்கிறார் சாணக்கியர்.
எப்போதும் மகிழ்ச்சியற்றவராக இருப்பவர்கள்
நீங்கள் ஒருபோதும் மகிழ்ச்சியற்றவர்களுக்கு உதவக்கூடாது என்று அது கூறுகிறது. ஏனென்றால் அவர்கள் எதிலும் எவரிடத்திலும் திருப்தி அடைவதில்லை. பல்வேறு காரணங்களை கண்டுபிடித்து புகார் செய்கின்றனர். அத்தகையவர்களுக்கு உதவுவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
பாவம் செய்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, தர்மத்திலிருந்து விலகிய ஒரு நபர் பாவச் செயல்களைச் செய்யத் தொடங்குகிறார், மற்றவர்களை தவறான செயல்களைச் செய்ய வற்புறுத்துகிறார். அப்படிப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவி செய்தால் அவமானம் மட்டுமே மிஞ்சும் என்கிறார் சாணக்கியர். எனவே, அவர்களிடமிருந்து எப்போதும் விலகி இருங்கள்.
முட்டாள்கள்
நீங்கள் எப்போதும் முட்டாள்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். ஏனென்றால், மற்றவர்களின் குறைகளைக் கண்டறிவதில் அவர்கள் மிகவும் பிஸியாக இருப்பதால், உலகில் நடக்கும் எதையும் அவர்கள் உணரவில்லை. சாணக்கியர் ஒருபோதும் முட்டாள்களுக்கு அறிவுரை சொல்லாதே மற்றும் உதவாதே என்கிறார். வாழ்க்கையில் சரியான விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களுக்கு அறிவுரை கூறுவதில் அல்லது உதவுவதில் அர்த்தமில்லை.



Click it and Unblock the Notifications












