சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்களை எதிரியாக்கிக் கொள்வது உங்களின் மரணத்தை நீங்களே அழைப்பது போன்றதாம்...!

Chanakya Niti: மதம், அரசியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல் என அனைத்துப் பாடங்களிலும் அறிவு பெற்றிருந்த சாணக்கியர் சிறந்த அறிஞராக இருந்தார். சாணக்கியரால் எழுதப்பட்ட பல நூல்கள் இன்றும் மனிதர்களுக்கு பயன்படுபவையாக இருக்கின்றன.

சாணக்கிய நீதியில் சாணக்கியர் தனது கொள்கைகள் மற்றும் அனுபவங்கள் பற்றி எழுதியுள்ளார். அவர் குறிப்பிடும் ஒவ்வொரு கொள்கையும் ஒருவரை அவர்களின் வாழ்க்கையின் இலக்கை அடைய உதவுகிறது. இவற்றை சரியாக பின்பற்றினால் ஒருவர் பலவிதமான பிரச்சனைகளில் தப்பித்துக் கொள்ளலாம்.

Chanakya Niti: Never Become Enemy of These People in Tamil

எந்தவொரு சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதே அமைதியான வாழ்க்கையின் அடிப்படைக் கொள்கை. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ பலர் அதில் சிக்குகின்றனர். இதில் சில விஷயங்கள் சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது.

சாணக்கிய நீதியின் படி எதிரிகளை உருவாக்குவதில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் இப்படிப்பட்டவர்களுடன் பகைமை கொள்ளக் கூடாது என்கிறார் சாணக்கியர். அவர்களை வெறுப்பது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும்.

நிர்வாகம்

சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் ஒருபோதும் அரசருடன் அல்லது அரசாங்கத்திடம் செல்வாக்கு உள்ளவர்களுடன் சண்டையிடக்கூடாது. அது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். நீங்கள் சக்திவாய்ந்த பதவியில் இருந்தால் ஒழிய, மூத்த அதிகாரிகளிடம் ஒருபோதும் தவறாகப் பேசாதீர்கள். அவர்களுடனான பகை உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

உங்கள் ஆரோக்கியம்

ஒருவரின் ஆரோக்கியமே அவருடைய மிகப்பெரிய செல்வம் என்று சாணக்கியர் கூறுகிறார். தன் உடல் நலத்துடன் விளையாடுபவர் தன்னைப் பற்றி கவலைப்படாமல், மரணத்தை அழைக்கிறார்கள். ஒருவர் தன் உடல்நிலையைக் கவனிக்காமல் பணத்தின் பின்னால் ஓடினால் அவருக்குப் பணமும் கிடைக்காது, நல்ல ஆரோக்கியமும் கிடைக்காது. உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனக்குறைவு மரணத்திற்கு வழிவகுக்கிறது.

உங்களை விட வலிமையானவர்கள்

சாணக்கியர் கூற்றின் படி, ஒரு வலிமையான நபர் தன்னை வலிமையாக்க யாருக்கும் தீங்கு செய்யலாம். எனவே, அத்தகைய நபருடன் ஒருபோதும் பகைமை கொள்ளாதீர்கள். பொருளாதாரரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ சக்திவாய்ந்த ஒருவருடன் பகைமை கொள்வது மரணத்தை அழைப்பதற்கு சமம் என்று சாணக்கியர் கூறுகிறார்.

கையில் ஆயுதம் ஏந்தியவர்கள்

கையில் ஆயுதம் கொண்டவரை, அதாவது ஆயுதம் வைத்திருப்பவரை எதிர்க்கவோ, சண்டையிடவோ கூடாது. ஏனெனில் கோபம் வரும் போது சில சமயம் ஆயுதம் ஏந்தியவர்கள் எதிரில் இருப்பவர்களை கொல்லவும் தயங்க மாட்டார்கள்.

உங்கள் ரகசியங்களை அறிந்தவர்கள்

உங்கள் எல்லா ரகசியங்களையும் அறிந்த நபரை ஒருபோதும் பகைத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் விபீஷணன் தான் இராமனுக்கு ராவணனின் ரகசியங்களைச் சொன்னார். இதனால் தான் ராவணன் போரில் வதைக்கப்பட்டார். எனவே உங்கள் ரகசியங்களை அறிந்தவர்களை நீங்கள் ஒருபோதும் எதிரியாக்கிக் கொள்ளாதீர்கள்.

மருத்துவர் மற்றும் சமையல்காரர்கள்

பணக்காரர்களுடன் நீங்கள் பகையை வளர்த்துக் கொள்ள கூடாது. அவர்களால் சட்டத்தையும், நீதியையும் வளைக்க முடியும் என்பதால் சாணக்கியர் இதனை வேண்டாமென்று கூறுகிறார்.

மருத்துவரிடம் ஒருபோதும் வாக்குவாதம் செய்யாதீர்கள். இல்லையெனில், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் ஆரோக்கியத்தை பாழாக்கலாம். சமையல்காரரை ஒருபோதும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் உணவை கொடுக்கலாம்.

Story first published: Tuesday, July 25, 2023, 7:00 [IST]
Desktop Bottom Promotion