Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
சாணக்கிய நீதி படி இந்த 5 நபர்களை உங்க வீட்டிற்குள் ஒருபோதும் உள்ளே விடாதீர்கள்..இல்லனா உங்க பெயர் கெட்டுவிடும்
Chanakya Niti: சாணக்கியரின் நீதிநூல் இந்தியா முழுவதும் பிரபலமானது. சாணக்கியர் நீதி, காதல், வாழ்க்கை, திருமணம் மற்றும் நிதி பற்றி அனைத்தையும் சொல்கிறது. சாணக்கிய நீதியில் கூறியுள்ள விஷயங்களை இப்போதும் பின்பற்றுபவர்கள் அதிகம் உள்ளனர். சாணக்கிய நீதியின் படி, நீங்கள் பல விஷயங்களின் உண்மையான அர்த்தத்தைப் பார்த்தால், அது வாழ்க்கையை மாற்றும்.
சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த தத்துவஞானி என்பதை நாம் அறிவோம். அவருடைய அர்த்தசாஸ்திரம் பல விஷயங்களைப் பற்றிய துல்லிய கருத்துக்களை விளக்கியது. சாணக்கியர் தனக்கே உரிய தனித்துவமான நீதிச் சட்டங்களைக் கொண்டிருந்தார். அதன்படி என்ன நடந்தாலும் சிலரை வீட்டிற்குள் அழைத்து வரக்கூடாது என்கிறார். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொல்லலாம்.

தர்மம் பற்றி அறியாதவர்கள்
சாணக்கியர் தர்மம் தெரியாதவர்களுடன் நட்புறவு கொள்வது நல்லதல்ல என்கிறார். .இது உங்கள் வாழ்க்கையில் பல தீமைகளை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்டவர்களிடம் வாக்குவாதம் செய்வது தண்ணீரில் கோடு போடுவது போன்றது என்கிறார் சாணக்கியர். எனவே இதைப் பற்றி அறியாதவர்களுடன் நட்பு கொள்வது மோசமானது என்று சாணக்கியர் கூறுகிறார்.
மற்றவருக்கு தீங்கு செய்பவர்கள்
மற்றவர்களின் துக்கத்தில் மகிழ்ச்சியைக் காணும் பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள் அல்லது அவர்களுடன் நண்பர்களாக இருக்காதீர்கள்.. இது உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதிக்கும். எனவே பிறருக்குத் தீங்கு செய்பவர்களை, அவர்களின் துன்பத்தில் இன்பம் அடைபவர்களை எந்தச் சூழ்நிலையிலும் வீட்டுக்குள் கொண்டுவரக் கூடாது.
சந்தர்ப்பவாதிகள்
கொடுத்த வாக்கை கடைப்பிடிக்காத நபராக ஒருவர் இருந்தால், அவர்களுடன் ஒருபோதும் நட்பு கொள்ளாதீர்கள். இது உங்கள் வாழ்வில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி உங்கள் எண்ணங்களையும் பாதிக்கும். எனவே சந்தர்ப்பத்துக்கு ஏற்ப கொடுத்த வாக்கை மாற்றிக்கொள்பவர்களை வீட்டிற்க்குள் விடாதீர்கள்.
பாவம் செய்பவர்கள்
நம்மில் பலரும் நமக்கேத் தெரியாமல் பல தவறுகளை செய்கிறோம். ஆனால் உங்கள் நண்பர் அது தவறு என்று தெரிந்தும் அதை செய்பவராக இருந்தால், அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள். அவர்கள் தவறை நியாயப்படுத்த அடிக்கடி பேசுவார்கள். அது உங்கள் மனநிலையையும் மோசமான முறையில் பாதிக்கும். எனவே இதுபோன்ற சாக்குப்போக்குகளையும் பொய்களையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
புறணி பேசுபவர்கள்
உங்கள் முன் நல்லவர் போலவும், உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களைப் பற்றி குறை சொல்பவர்களும் இருந்தால், அவர்களை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். உஅவர்களிடமிருந்து எப்போதும் விலகியிருக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் உங்களின் நற்பெயரை சமூகத்தில் கெடுக்கலாம். அவர்களால் எவ்வளவு லாபம் கிடைத்தாலும் அவர்களை உங்கள் வீட்டிற்க்குள் அனுமதிக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications
