Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருப்பவர்கள் மேதைகளாக இருப்பார்களாம்... உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: இந்தியாவின் மிகவும் பிரபலமான அறிஞர்களில் ஒருவர் சாணக்கியர். அவரின் சாணக்கிய நீதி இன்றும் பிரபலமான புத்தகமாக இருக்கிறது. ஏனென்றால் சாணக்கியர் பல விஷயங்களை தனது சாணக்கிய நீதியில் விளக்கியுள்ளார். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் அறிவியல், பணம், திருமணம், உறவுகள், தொழில் மற்றும் வேலை பற்றி விரிவாக விவாதிக்கிறார்.
சாணக்கிய நீதியின்படி, ஒருவர் புத்திசாலியா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ள உதவும் சில குணங்கள் உள்ளன. இந்த விஷயங்கள் ஒரு மனிதனின் அறிவு நிலை மற்றும் ஞானத்தைப் புரிந்துகொள்ள உதவும் விஷயங்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார். பெரும்பாலும் இந்தக் குணங்களே அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. சாணக்கிய நீதி படி ஒருவர் புத்திசாலியாக இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுதல்
ஒரு புத்திசாலி எப்போதும் அறிவைப் பெற முயற்சி செய்வார்கள். மேலும், அவர் எப்போதும் ஒரு துறையிலிருந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், அதில் தனது புரிதலை விரிவுபடுத்தவும் பாடுபடுவார். இதுதான் அவர்கள் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது ஒரு புத்திசாலி மனிதனின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அவர்கள் தங்கள் அறிவை சரியான வழியில் பயன்படுத்துவார்கள்.
சுயக்கட்டுப்பாடு
ஒரு புத்திசாலி மனிதரின் மிகச்சிறந்த குணங்களில் ஒன்று, அவர்கள் எப்போதும் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வார்கள். அவர்கள் முடிவுகளை பகுத்தறிவுடன் துல்லியமாக எடுக்கக் கூடியவர்கள். எதிர்காலத்தைத் துல்லியமாகத் திட்டமிடவும், விளைவுகளைத் துல்லியமாக எதிர்பார்த்து முடிவுகளை எடுக்கவும் அவர்களால் முடியும். அவர்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் பகுத்தறிவுடன் இருக்கும்.
இலக்குகளில் கவனம் செலுத்துவது
புத்திசாலிகள் எப்போதும் தங்கள் இலக்குகளில் தீவிர கவனம் செலுத்துகிறார்கள். அது மட்டுமின்றி எந்த கவனச்சிதறலும் இல்லாமல் தொடர்ந்து முன்னேறவும் முடியும். அவர்கள் இலக்குகளை நோக்கி எப்போதும் சீராகச் நகருவார்கள். மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களால் வாழவும் முடிகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் வழிமுறைகளை மாற்றிக்கொள்வதில் அவர்கள் கவனமாக இருப்பார்கள்.
பேச்சாற்றல்
அவர்களிடம் சக்திவாய்ந்த பேச்சாற்றல் மற்றும் அனைத்து விஷயத்திற்கும் பதில்கள் உள்ளன. அதுதான் ஒரு புத்திசாலி நபரின் முக்கிய திறனாகும். புத்திசாலி மக்கள் திறம்பட தொடர்பு கொள்ளவும் மற்றவர்களை எளிதில் புரிந்துகொள்ளவும் முடியும். அவர்கள் தங்கள் தொலைநோக்குப் பார்வையைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற்றிருப்பார்கள். ஒரு புத்திசாலி நபர் தனது சொந்த உணர்ச்சிகளையும் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும், இது அவர்களின் திறமைகளை வலுப்படுத்தும்.
தவறு செய்ய மாட்டார்கள்
சாணக்கிய நீதியின் படி, ஒரு புத்திசாலி நபர் எப்போதும் தவறுகளிலிருந்து விலகி இருப்பார். நற்செயல்களைச் செய்து, தவறான செயல்களில் இருந்து விலகி இருப்பவர் ஞானி என்று அழைக்கப்படுவார். எனவே ஒரு நபர் எப்போதும் தவறான செயல்கள் மற்றும் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
